நீண்ட நாட்களுக்குப் பிறகு விவசாயம் குறித்து, வீடியோ பதிவு செய்வது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதிலும் வெளிநாட்டில் இருந்து கொண்டே அதில் கிடைத்த வருமானத்தை நிலமாக வாங்கி, அதில் விவசாயம் செய்து அசத்தும் திரு.ராஜசேகரன் அவர்களுக்கு முதலில் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
14 ஆண்டுகள் வெளிநாட்டு பணிக்கு ஆதாரமாக, தனது சொந்த ஊர் அருகில் 14 ஏக்கர் நிலம் வாங்கி அதில் முதல் கட்டமாக மிளகாய் சாகுபடி செய்து அசத்தியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது அதிக பராமரிப்பு இல்லாத டிம்பர் மரங்களை கையில் எடுத்து, தனது குடும்ப ஒத்துழைப்புடன் அசத்தி வருகின்றார்.
கோடைகாலம் வந்துவிட்டதை ஓடப்பட்டிக்கு சென்றபோது உணர்த்தியது. தண்ணீர் இல்லாமல் வறட்சியில் காணப்பட்ட ஓடப்பட்டி கிராமத்தில் திரு.ராஜசேகரன் நிலம் மட்டும் எப்படி இருக்கும் என்ற சந்தேகத்தில்தான் சென்றோம். ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக, அவரது நிலத்தில் பிரம்மாண்டாக இருந்த கிணற்றில் 30 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது ஆச்சர்யமான ஒன்றுதான்.
8 ஏக்கரில் அனைத்துவிதமான டிம்பர் மரக் கன்றுகளை நடவு செய்து வளர்த்து வருகின்றார். சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் மரங்கள் வளர்ந்துள்ளது. வருடம் ஒரு முறை 2 ஏக்கர் தேர்வு செய்து மரக்கன்றுகள் நடவு செய்து அதனை அதிக பராமரிப்பு இன்றி வளர்த்து வருகின்றார்.
இவரது கூடுதல் சிறப்பே, மோட்டார் மட்டும் போட்டால் போதும், ஆள் யாருமின்றி ஒரு ஏக்கர் நிலத்தில் தானாகவே 4 மணி நேரத்தில் தண்ணீர் பாய்ந்துவிடும் வகையில், மிக மிக எளிமையாக வாய்க்கால் வடிமைத்துள்ளார். வரப்பு உயர்த்துதல், பண்ணை குட்டை அமைத்தல் என நீர் மேலாண்மையில் திறம்பட செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. பின்பற்ற வேண்டியது.
விவசாயம் மீதான ஆர்வம், தொடர் முயற்சிகள், குடும்ப ஒத்துழைப்பு என இவரது செயல்பாடுகள் பிரமிக்க வைக்கிறது. வெயிலில் அமர்ந்தபடி பேட்டி நிகழ்ந்தது. ஆனால் வெயில் மட்டும் எங்களைச் சுடவில்லை. திரு.ராஜசேகரன் வாயிலாக மரங்கள் குறித்து நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்.
நேர்காணல் மிக நீளமானது. முடிந்தவரை அதிக எடிட்டிங் செய்யாமல் முக்கியமானவற்றை பதிவு செய்துள்ளேன். நிச்சயமாக இது பலருக்கும் பயன் தரும் என்று நம்புகின்றேன். அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து கொண்டு நிலம் வாங்கி நாம் விவசாயம் செய்யலாமா ? அப்படிச் செய்தால் வெற்றி கிடைக்குமா ? என்பவர்களுக்கு இது நம்பிக்கை ஊட்டும் வீடியோ.
இதுபோன்ற வீடியோக்கள் எடுப்பதில் எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள், அதாவது இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டு. கூடவே இனிப்பும் உண்டு. ராஜசேகரன் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழம் ஒரு தாரை எங்களுக்கு வழங்கினார். இயற்கையில் விளைந்த வாழைப்பழத்தின் சுவையே தனிதான். அத்துடன் கனிவுடன் கவனிப்பு இருந்தது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் பலரும், ஆடம்பர வாழ்க்கைக்கு மாறும் இக்கால கட்டத்தில், நிலம் வாங்கி விவசாயம் செய்து வரும் திரு.ராஜசேகரன் இளைஞரை நீங்களும் வாட்ஸ்ப்பில் பாராட்டலாம்.
அவரது வாட்ஸ்அப் தொடர்பு எண்: 96594480784 ( Mr.Rajasekaran) .
___________________________________________________
Join this channel to get access to perks:
/ @hellomadurai
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க: Hello Madurai M.Ramesh 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/de…
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook : https://www.facebook.com/hellomadurai…
🔵 Facebook :https://www.facebook.com/rameshhellom…
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________