வீட்டு தோட்டத்தில் மண் வளம் பெருக்கும் முட்டை ஓடு

வீட்டு தோட்டத்தில் இயற்கை முறையில் மண்ணின் வளத்தை அதிகரிக்க சாணம், ஆட்டு புழுக்கை, இலை மக்குகள் பயன்படுத்துவோம். இந்த வரிசையில் கோழி முட்டையையும் பயன்படுத்தலாம். முட்டை ஓடுகளில் உள்ள மிதமிஞ்சிய கால்சியம், தக்காளி, மிளகாய் போன்ற செடிகளுக்கு உரமாக பயன்படுகிறது. முட்டை மற்றும் முட்டை ஓடுகளை எப்படியெல்லாம் உரமாக பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்!

தொட்டியில் ரோஜா, அரளி, நந்தியாவட்டை போன்ற, இளஞ்செடிகள் தண்டுகள் மூலமாக வளர்த்தும் போது, ஒரு அடி அளவிற்கு மண் நிரம்பியதும் உடையாத முழு முட்டையை புதைத்து வைக்கவும். அதன் மீது எப்போதும் போல மண்நிரப்பி செடிகளை நடவும். செடி வளர வளர, முட்டை மட்கி நன்கு உரமாகிவிடும். முட்டை வேகவைத்த நீரை ஆறவைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

சிறு பக்கெட்டில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, மூன்று நாட்கள் மூடிபோட்டு வைத்து விடவும். மூன்று நாட்கள் கழித்து தண்ணீருடன் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம். முட்டை ஓடுகளை பேக் (bake) செய்து அல்லது வெயிலில் காயவைத்து பொடி செய்யவும் இந்த பொடிகளை செடிகளுக்கு உரமாக வைக்கும் போது மண்வளம் கூடுகிறது.

காலி முட்டை ஓடுகளில் மண்ணை நிரப்பி அதில் விதையை ஊன்றி நீர் பாய்ச்சி வந்தால், விரைவில் முளைக்கும். முட்டை ஓடோடு சேர்த்து நாற்றை நடலாம் என்பது சிறப்பு. முட்டையின் மஞ்சள் கரு என்பது விலங்குகளின் புரதம். இதை நேரிடையாக செடிகளுக்கு வைக்கும் போது பூச்சிகளை ஈர்க்கும். இதைத் தவிர்க்கவே முட்டை அழுகல , முட்டையை சாணங்களுடன் சேர்த்து மக்கியபின் செடிகளுக்கு உரமாக இடலாம். வருடத்திற்கு ஒரு நபர்க்கு 150 முதல் 200 முட்டைகள் வரை உணவுக்காக பயன்படுத்துகின்றனர். அத்தன்னை முட்டை ஓடுகளும் வீணாக போகாமல் இயற்கை உரமாக பயன்படுவது நல்ல விஷயம் தான்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்