வீட்டைச் சுற்றியிருக்கும் இடங்களில் இல்லத்திற்கு தேவையான காய்கறிகள், செடிகள், கீரைகள் என வைத்துவிட்டோம். அதற்கு உரம் வேண்டுமே ? என்ன செய்யலாம் என்று சிறிதும் யோசிக்கத் தேவையில்லை. வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே கம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம். அதற்கு முன்பாக நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உரம் தயாரிப்பதற்கு முன்பு பிரவுன் மற்றும் கிரீன் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அது என்ன பிரவுன், கிரீன் என்று கேட்காமல் கீழே படியுங்கள்…
பிரவுன்:
காய்ந்த இலைகள்- Dried leaves
மர போடி -Sawdust and woodchips (make sure these are from untreated wood)
சிறுதுகள் ஆக்கப்பட்ட செய்தி தாள்கள், paper – Shredded black and white newspaper
முட்டையின் package – Egg cartons
அட்டை – Cardboard
இறந்த காய்ந்த செடிகள் – Dead, dried-out plants (disease-free)
மரத்தின் பட்டை – Tree bark
வைக்கோல் – Straw
நிலக்கடலை தோலி – Peanut shell
பச்சை(கிரீன்):
காய்கறி, பழ மிச்சங்கள் – Fruit and vegetable kitchen scraps
காபி, டீ பொடி – Coffee grounds and tea bags
தோட்டத்தில் வெட்டப்பட்ட பச்சை பாகங்கள் – Green garden cuttings
பிரெஷ் இலைகள் Fresh leaves and flowers
வெட்டப்பட்ட புல் – Grass clippings
இதுதான் பிரவுன், கிரீன். பிரவுன் என்றால் கார்பன் கொடுக்கிறது. கிரீன் என்றால் நைட்ரோஜென் கொடுக்கிறது. இவற்றை முடிந்த வரை சிறு சிறு பாகங்களாக வெட்டி போடுவது நல்லது. இப்படி செய்தால் சீக்கிரம் கம்போஸ்ட் தயாராகும். இப்படிச் சேகரித்த இயற்கைப் பொருட்களை சிறு சிறு துண்டுகளாக்கி மொத்தமாக ஒரு பள்ளத்தை தோண்டி அதில் போட்டு நிரப்புங்கள்.
கம்போஸ்ட்டை திருப்பவது:
2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை கம்போஸ்ட்டை ஒரு குச்சி மூலம் கலந்து விடவும். புதிதாக போடப்பட்ட பொருட்கள் கீழே செல்ல வேண்டும். நீங்கள் ஒன்றும் சேர்க்கவிட்டாலும் கூட இந்த திருப்பதலை நிறுத்த கூடாது. இப்படி செய்வதால் கம்போஸ்ட் ஆக்ஸிஜன் பெற்று சீக்கிரம் உரமாகும். கம்போஸ்ட் காய்ந்து போன மாதிரி தெரிந்தால் சிறிது நீரை தெளிக்கவும்.
கம்போஸ்டில் நாற்றம் வந்தால் என்ன செய்வது ?
கொம்போஸ்ட்டை அடிக்கடி திருப்பி வந்தால் நாற்றம் வராது. நாற்றம் வருவதற்கு காரணம் காற்றிலா பாக்டீரியா வளர்வதே. திருப்புவதால் இவை இறக்கின்றன. கம்போஸ்ட் அம்மோனியா மாதிரி நாற்றம் எடுத்தல் நீங்கள் பச்சை அதிகம் சேர்த்து இருக்கீர்கள் என்று அர்த்தம். அப்படி என்றால் சிறிது பிரவுன் சேருங்கள் .சிறிது மண்ணை மேலே தூவுவதால் நாற்றம் நிற்கும்.
நிச்சியம் கம்போஸ்டில் அசைவ பொருட்களையோ, எண்ணெய் பொருட்களையோ சேர்க்காதீர். எலி, பூச்சிகளை வரவேற்கும். கம்போஸ்ட் கருப்பாக வாசனை எதுவும் இல்லாமல், ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால் உபயோகத்திற்கு ரெடி என்று அர்த்தம் !!!