மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் பொருளாதார மேம்பாடு அடையும் பொருட்டு தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை 2020-21ஆம் ஆண்டின் கோழியின அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விலையில்லா அசீல் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 400 பயனாளிகள் வீதம் 5200 பயனாளிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இத்திட்டத்தின்படி பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதே போல் தமிழக ஊரக வாழ்வாதார திட்டத்தில் பதிவு பெற்றுள்ள பெண்கள் உதவிக்குழுவினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும், தேர்ந்து எடுக்கப்படும் பயனாளிகளில் 30% பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினாராக இருக்க வேண்டும். பயனாளிகள் இதற்கு முன்னர் விலையில்லா கறவை பசுகள், விலையில்ல வெள்ளாடுகள் செம்மமறியாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன் அடைந்திருக்க கூடாது. சுய தேர்வு செய்யப்படும் பயனாளி ஒருவருக்கு 4 வார வயதுடைய 25 எண்ணம் அசீல் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும்.