விதை நேர்த்தி ஏன் செய்ய வேண்டும் ? அதன் பயன்கள்

விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் பலன்கள்

  1. விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் பூச்சிகளிலிருந்து முளைக்கும் விதை மற்றும் விதை நாற்றுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
  2. விதை முளைப்புத் தன்மையை அதிகப்படுத்துகின்றது.
  3. குறித்த காலத்திற்கு முன், சீரான நிலை மற்றும் வேக வளர்ச்சியை அடைய உதவுகிறது.
  4. பயிறு வகைகளில், வேர் முடிச்சுகள் உருவாகுவதை அதிகப்படுத்துகின்றது.
  5. சத்துக்களை மண் மற்றும் இலை வழிகளில் செலுத்துவதைவிட, இம்முறை சிறந்தது.
  6. குறைந்த/ அதிக ஈரத்தன்மை போன்ற எதிர்மறையான சுழ்நிலைகளிலும் சீரான பயிர் வளர்ச்சியை தருகிறது.

விதை நேர்த்திக்கான செயல்முறை

விதை நேர்த்தி என்ற சொல்லானது இடுபொருள் மற்றும் செய்முறைகளை குறிக்கும் ஒரு பதமாகும். கீழ்கண்ட முறைகளில் ஏதாவது ஒரு முறையில் விதை நேர்த்தியானது செய்யப்படலாம்.

  1. விதை மேல் பூசுதல் –இது பொதுவாக செய்யப்படும் ஒரு விதை நேர்த்தி முறையாகும். இந்த முறையில் விதையானது, உலர்ந்த வகை பொருட்களைக் கொண்டோ அல்லது கஞ்சி போன்ற பொருளில் நனைத்தோ அல்லது திரவப் பொருட்களைக் கொண்டோ முலாம் பூசப்படுகின்றது. இந்த விதை நேர்த்தி முறை பண்ணையிலும் தொழிற்சாலைகளிலும் செயல்ப்படுகிறது. பொதுவாக விதையுடன் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கலப்பதற்கு மண் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதை தவிர விதைகளை பாலிதீன் பைகளின் மீது பரப்பி, அதன் மீது தேவையான அளவு மருந்தினை தெளித்தும் விவசாயிகள் விதை நேர்த்தி செய்யலாம்.
  2. விதை மேலுறையிடுதல் –இம்முறையில் ஒரு சிறந்த ஒட்டும் பொருளைக் கொண்டு, நேர்த்தி செய்ய வேண்டிய விதையின் மேல் ஒட்டப்படுகிறது. தொழிற்சாலைகளில் விதை மேலுறையிடுவதற்கு, உயர்ந்த விதை நேர்த்தி தொழில்நுட்பமானது தேவைப்படுகிறது.
  3. விதை முலாம் –இம்முறையானது விதைநேர்த்தி முறைகளில் மிகச் சிறந்த உயரிய முறையாகும். இதன் மூலம் விதையின் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, விதை முலாம்பூசப்பட்டு, அதைக் கையாளுவது எளிதாக்கப்படுகின்றது. இத்தகைய விதை நேர்த்தி முறைக்கு தனித்துவம் வாய்ந்த இயந்திரங்கள், செயல்முறை மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இது மிகவும் அதிக செலவாகக் கூடிய ஒரு செயல்முறையாகும்.

விதை நேர்த்தி குறிப்புகள்

விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைகளை விதைநேர்த்தி செய்துகொள்வது அவசியம்.

அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு நடப்பு பருவத்துக்குத் தேவையான இடுபொருள்களான விதைநெல், உரங்கள் இருப்பு வைத்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.

ரகங்கள்

  1. ஏ.எஸ்.டி-16,
  2. கோ-50,
  3. கோ-51,
  4. ஏ.டீ.டி-39,
  5. கோ-43,
  6. ஏ.டீ.டி-38,
  7. ஏ.டீ.டி-50,
  8. வெள்ளை பொன்னி,
  9. கோ-48,
  10. கோ-49,
  11. ஏ.டீ.டி-44

விதைக்கும் முறைகள்

  • விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து விவசாயிகள் விதைக்க வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் மருந்தை கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற தங்கள் பகுதி வேளாண்துறை களப்பணியாளர்களை அணுகி பயன்பெறலாம்.

பயிர்களுக்கான விதை நேர்த்தி பரிந்துரைகள்

பயிர்

பூச்சி/நோய்

விதை நேர்த்தி

குறிப்பு

கரும்பு வேர் வாடல் கார்பண்டசிம் (0.1 %) , 2 கிராம் /1 கிலோ விதை.

ட்ரைக்கோடர்மா 4-6 கிராம்/ 1 கிலோ விதை

விதை நேர்த்தி செய்ய உலோகத்திலான விதை நேர்த்தி கருவி/மண் பாத்திரம்/ பாலிதீன் பைகள் பயன்படுத்தப் படுகின்றன
நெல் வேர் அழுகல் ட்ரைக்கோடர்மா (5-10 கிராம் /கிலோ விதை (நடுவதற்கு முன்) மேல் கூறிய குறிப்பு

 

மற்ற பூச்சிகள் குளோர்பைரிபாஸ் 3 கிராம்/1 கிலோ விதை
கதிர் உறை கருகல் (பாக்டீரியா) சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 0.5% WP 10 கிராம்/1 கிலோ விதை
வேர் முடிச்சு நூற்புழு 0.2% மோனோகுரோடோபாஸ் மருந்தில் 6 மணி நேரம் விதையை ஊறவைத்தல் மேல் கூறிய குறிப்பு
வெண்நுனி நூற்புழு 0.2% மோனோகுரோடோபாஸ் மருந்தில் 6 மணி நேரம் விதையை ஊறவைத்தல் மேல் கூறிய குறிப்பு
மிளகாய் ஆந்த்ரக்னோஸ், நாற்றழுகல் நோய் ட்ரைக்கோடர்மா விரிடி 4 கிராம் / 1 கிலோ (அ) கார்பண்டசிம் (1 கிராம்/ 100 கிராம் விதை மேல் கூறிய குறிப்பு
மண் மூலம் பரவும் பூஞ்சான நோய் ட்ரைக்கோடர்மா விரிடி 2 கிராம் / 1 கிலோ மற்றும்

சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 10 கிராம்/1 கிலோ விதை. கேப்டான் 75 WS 1.5 – 2.5 கிராம் a.i. /லிட்டர் கொண்டு மண் நனைத்தல்

தத்துப்பூச்சி, அசுவிணி, இலைப்பேன் இமிடாகுளோபிரிட் 70 WS (10-15 கிராம் a.i. / 1 கிலோ விதை)
துவரை வாடல் நோய், கருகல் நோய், வேரழுகல் நோய் ட்ரைக்கோடர்மா 4 கிராம் / 1 கிலோ விதை விதை நேர்த்தி செய்ய உலோகத்திலான விதை நேர்த்தி கருவி/மண் பாத்திரம்/ பாலிதீன் பைகள் பயன்படுத்தப் படுகின்றன
பட்டாணி வேரழுகல் பேசில்லஸ் சப்டிலிஸ், சூடோமோனாஸ் புளூரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்தல். 2.5 – 5 கிலோ மேற்கண்ட நுண்ணுயிரிகளை 100 கிலோ தொழுஉரத்தில் கலந்து மண்ணில் இடலாம் (அ) கார்பண்டசிம் (அ) கேப்டான் 2 கிராம் / 1கிலோ விதை மேல் கூறிய குறிப்பு
பட்டாணி வெள்ளை அழுகல் திரம்+ கார்பண்டசிம் 2 கிராம் /1 கிலோ விதை. கார்பண்டசிம் (அ) கேப்டான் (2 கிராம் /கிலோ விதை)
வெண்டை வேர் முடிச்சு நூற்புழு பசிலோமைசிஸ் லில்லாசினஸ் மற்றும் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (10 கிராம்/ 1 கிலோ விதை) கொண்டு விதை நேர்த்தி மேல் கூறிய குறிப்பு
தக்காளி மண் மூலம் பரவும் பூஞ்சான நோய், முன்கருகல் நொய், நாற்றழுகல் நோய், வாடல் நோய் ட்ரைக்கோடர்மா விரிடி 2 கிராம் / 100 கிராம் விதை. கேப்டான் 75 WS 1.5 – 2.0 கிராம் a.i./ லிட்டர் கொண்டு மண் நனைத்தல்.

சூடோமோனாஸ் புளூரசன்ஸ் மற்றும் வி. கிளாமிடோஸ்போரியம் 10 கிராம் / 1 கிலோ விதை கொண்டு நேர்த்தி செய்தல்

மேல் கூறிய குறிப்பு
கொத்தமல்லி வாடல் நோய் ட்ரைக்கோடர்மா விரிடி 4 கிராம் / 1 கிலோ விதை. மேல் கூறிய குறிப்பு
கத்தரிக்காய் பாக்டீரியல் வாடல் நோய் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 10 கிராம்/ கிலோ விதை மேல் கூறிய குறிப்பு
பயறுவகை காய்கறிகள் மண் மூலம் பரவும் நோய்கள் ட்ரைக்கோடர்மா விரிடி 2 கிராம் / 100 கிராம் விதை. மேல் கூறிய குறிப்பு
நூற்புழுக்கள் கார்போப்யூரான் / கார்போசல்பான் 3% (w/w)
சூரியகாந்தி விதை அழுகல் ட்ரைக்கோடர்மா விரிடி 6 கிராம் / 1 கிலோ விதை. மேல் கூறிய குறிப்பு
அசுவினி, வெள்ளை ஈ இமிடாகுளோபிரிட் 48 FS (5-9 கிராம் a.i. / 1 கிலோ விதை) இமிடாகுளோபிரிட் 70 WS (7 கிராம் a.i. / 1 கிலோ விதை)
கோதுமை கரையான் கீழ்கண்ட பொருட்களில் ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம்.

1. க்ளோர்பைரிபாஸ் 4மிலி/கிலோ விதை (அ)

2. என்டோசல்பான் 7மிலி / கிலோ விதை

மேல் கூறிய குறிப்பு
முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரக்கோலி, நூல்கோல், முள்ளங்கி போன்ற வகை காய்கறிகள் மண் மற்றும் விதை மூலம் பரவும் நோயகள்.

வேர் முடிச்சு நூற்புழு

ட்ரைக்கோடர்மா விரிடி 2 கிராம் / 100 கிராம் விதை.
கேப்டான் 75 WS 1.5 – 2.5 கிராம் a.i./ 1 லிட்டர் கொண்டு மண் நனைத்தல்.சூடோமோனாஸ் புளூரசன்ஸ் மற்றும் வி. கிளாமிடோஸ்போரியம் 10 கிராம் / 1 கிலோ விதை கொண்டு நேர்த்தி செய்தல்
மேல் கூறிய குறிப்பு
கொண்டைக் கடலை வாடல், நாற்றழுகல் நோய் ட்ரைக்கோடர்மா விரிடி 1% WP 9 கிராம் / 1 கிலோ விதை.
கார்பன்டசிம் மற்றும் கார்போசல்பான் 0.2%.
கார்பன்டசிம் மற்றும் திரம் மற்றும் கார்போசல்பான் 0.2%.
க்ளோர்பைரிபாஸ் 20 EC @ 15-30 மிலி a.i. / கிலோ விதை கொண்டு விதை நேர்த்தி
உருளைக் கிழங்கு மண் மற்றும் கிழங்கு மூலம் பரவும் நோய்கள் MEMC 3% WS @ 0.25% அல்லது போரிக் அமிலம் 3% கொண்டு 20 நிமிடங்களுக்கு விதை நேர்த்தி செய்யவும். இதனை சேமிப்பதற்கு முன் செய்யவும்.
பார்லி கரிப்பூட்டை நோய் வகைகள், இலை வரி நோய்

கரையான்

கார்பாக்ஸின் 75% WP,
திரம் 75% WP @ 1.5 to 1.87 கிராம் a.i. / 1 கிலோ விதை.க்ளோர்பைரிபாஸ் 4 மிலி / 1 கிலோ விதை நேர்த்தி
குடை மிளகாய் வேர் முடிச்சு நூற்புழு சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 1%WP, பாசிலோமைசஸ் ஹிலாஸிரஸ் மற்றும் வி. கிளாமிடோஸ்போரியம் 1% WP 10 கிராம் / 1 கிலோ விதை நேர்த்தி செய்தல்

கேள்வி பதில்கள்

1. விதைகளை எதற்கு நேர்த்தி செய்ய வேண்டும்?

விதைப்பதற்கு முன், விதைகளை பூசணக் கொல்லியுடன் கலந்து விதைக்க வேண்டும். இது மண்ணில் உண்டாகும் பூசணங்களிடமிருந்து விதைகளை பாதுகாக்க உதவுகிறது. மேலும் நாற்றுகளுக்கு தெம்பைக் கொடுக்கிறது.

2. விதை நேர்த்தி எவ்வாறு செய்ய வேண்டும்?

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக விதை நேர்த்தி மேற்கொள்ளப்படுகிறது. பெவிஸ்டின் மருந்தை 2.5 கிராம்/கிலோ விதை (அல்லது) பீம் 75 மருந்தை 0.6 கிராம்/கிலோ விதை என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.

3. சுத்தமான மற்றும் ஆரோக்கியமான விதைகளை எவ்வாறு பெறுவது?

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான விதைகளைப் பெறுவதற்கு, உப்பு கரைசலைத் தயாரித்து (100 கிராம் உப்பை 1லிட்டர் நீருடன் கலக்கவும்) விதைகளை அதில் போட வேண்டும். மிதக்கும் விதைகளை அகற்றிவிட்டு படிந்துள்ள விதைகளை எடுத்து சுத்தமான நீரில் நன்கு கழுவி விட வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்