விதை சுத்திகரிப்பு
-
- முக்கியத்துவம்
- விதை சுத்திகரிப்பு கோட்பாடுகள்
- விதை சுத்திகரிப்பு பணியின் தேவைகள்
- விதை சுத்திகரிப்பின் போது களையப்படும் பொருட்கள்
- விதை சுத்திகரிப்பு பணியின் செயல் வரிசை
- விதைச் சுத்திகரிப்பு தளங்கள்
- சுத்திகரிப்பு சாதனங்கள்
- சுத்திகரிப்பு நிலையங்கள் அங்கீகாரம்
- அங்கீகாரம் பெற சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை
- அரைவை நிலையம்
- அரைவை, சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை நிலையம்
- பஞ்சு நீக்குதல்
- தூய்மைப்படுத்துதல் மற்றும் சான்றட்டை பொருத்துதல்
- விதைச் சுத்திகரிப்பு நிலைய உரிமம் புதுப்பித்தல்
முக்கியத்துவம்
விதை சேமிப்பு கிடங்குகளில் உள்ள விதைக் குவியல்களை சந்தைப்படுத்த தயார் செய்வதே விதை சுத்திகரிப்பு ஆகும். விதையின் விலை மற்றும் தரம் விதை சேமிப்புடன் நேர்மாறு தொடர்புடையதாகவும், விதைச் சான்றளிப்பிற்கு அனுமதியளிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
- சுத்திகரிப்பு செய்யப்படுவதால் விதைக் குவியலின் வேறுபாடுகள் குறுகிவிடும். விதைக் குவியலில் உள்ள வேறுபாடுகளின் கீழ்க்கண்ட காரணிகள்.
- மண்ணின் வளம் மற்றும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையின் வேறுபாடுகள்.
- பயிர் மேலாண்மை செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகள் (நீர் நிர்வாகம், உர மேலாண்மை போன்றவை)
- நாற்றுக்களின் இடு பொருட்களை உபயோகப்படுத்தும் திறன்
- நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் வேறுபாடுகள்
- செடியில் காய் அல்லது கனி இருக்கும் பகுதி அல்லது காயினுள் விதை இருக்கும் பகுதி.
விதை சுத்திகரிப்பு கோட்பாடுகள்
சுத்திகரிப்பு முறையானது விதைக் குவியலில் உள்ளப் புற வேறுபாடுகளைக் கொண்டே நிறைவேற்றப்படுகிறது.
புற வேறுபாடுகள் | பொருத்தமான கருவி |
விதை அளவு – சிறியது முதல் பெரியது | காற்றை தடுத்துத் தூய்மைப்படுத்தும் மற்றும் தரம் பிரிக்கும் கருவி |
அடர்த்தி நிறைவடையாத முதிர்ச்சி அடையாத விதைகள் முதல் நன்கு முதிர்ந்த எடைக் குறைந்த அல்லது அதிக எடையுள்ளவை. | ஒப்பு அடர்த்தி பிரிப்பான் |
வடிவம் – வட்டம் முதல் நீள்வட்டம் வரை மற்றும் பிற வடிவங்கள் | சுருளி பிரிப்பான் |
மேற்பரப்பின் நய அமைப்பு மிருதுவானது முதல் சுருங்கியது மற்றும் கரடு முரடானது வரை | உருளை ஆலை / உலுக்கு ஆலை |
விதையின் நிறம் – மங்கிய நிறம் முதல் அடர்வான நிறம் | மிண்ணனு நிறம் பிரிப்பான் |
விதையின் கடத்தும் திறன் – குறைந்தது முதல் அதிகம் வரை | மிண்ணனு பிரிப்பான் |
விதை சுத்திகரிப்பு பணியின் தேவைகள்
- முழுமையான பிரித்தல் இருக்கவேண்டும்.
- குறைந்த விதை இழப்பு
- எந்த ஒரு இரகத்தின் விதையும் தரம் உயர்த்துதல்
- அதிகத் திறன் இருக்கவேண்டும்.
- குறைவான தேவை இருக்கவேண்டும்.
விதை சுத்திகரிப்பின் போது களையப்படும் பொருட்கள்
- உயிரற்ற பொருட்கள்
- சாதாரண களை விதைகள்
- நச்சு களை விதைகள்
- வீண் விதைகள்
- சிதைந்த விதைகள்
- பிறப் பயிர்களின் விதைகள்
- பிற இரக விதைகள்
- அளவு குறைந்த விதைகள்
விதை சுத்திகரிப்பு பணியின் செயல் வரிசை
பணியின் செயல்வரிசை விதையின் தன்மைகளான அளவு, வடிவம், எடை, நீளம், மேல் அமைப்பு, நிறம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை கொண்டே அமைகிறது. விதைகளின் அமைப்பை கொண்டே சுத்திகரிப்பு பணியின் செயல்திட்டம் வகுக்கப்படும். அதற்கேற்றாற் போல் கருவிகளும் கையாளப்படும். அப்பணியின் நிலைகள்.
- உலர வைத்தல்
- பெறுதல்
- முன் தூய்மை செய்தல்
- நிலைப்படுத்துதல்
- தூய்மைப்படுத்துதல்
- பிரித்தல் (அ) தரம் ஏற்றுதல்
- நேர்த்தி (உலர்தல்)
- எடையிடுதல்
- பையிலிடுதல்
- சேமித்தல் (அ) கப்பலேற்றுதல்
விதைச் சுத்திகரிப்பு தளங்கள்
அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்
விதைச் சுத்திகரிப்பானது விதையின் புற அமைப்புக்களான, விதை அளவு, நீளம், எடை, வடிவம், மேற்புற நய அமைப்பு, நிறம், திரவ ஒட்டும் தன்மை மற்றும் மின் கடத்தும் திறன் போன்றவற்றைக் கொண்டு செயல்படுகின்றது. சுத்திகரிப்பின் முதல் நிலையில், மேல் தோல் நீக்குதல், முடி நீக்குதல், உமி நீக்குதல், ஓடு நீக்குதல் போன்ற பணிகளின் பின்னர் தரம் பிரித்தல் மற்றும் தூய்மைப்படுத்துதல் போன்றவை செய்யப்படும். (நிலைப்படுத்துதல் மற்றும் முன் தூய்மைப்படுத்துதல்)
இரண்டாம் நிலையில் தேவையற்ற பொருட்கள், களை விதைகள், பிறப் பயிர் மற்றும் உடைந்த விதைகள், பயிர் விதைகளை விடப் பெரியதாகவோ, சிறியதாகவோ உள்ளவை போன்றவை பிரித்தெடுக்கப்படும்.
இறுதி நிலையில் (பிரித்தல் மற்றும் தரம் மேம்படுத்துதல்) தேவையற்ற பொருட்கள் விதையிலிருந்து பிரிக்கப்படும்.
சுத்திகரிப்பு சாதனங்கள்
சில சுத்திகரிப்பு சாதனங்களின் வடிவமைப்புகளும் அவற்றின் திறன்களும்
1. | என்ஸ்கோ சூப்பர் | – | 300 கிலோ / 1 மணி நேரம் |
2. | கிரிபென் வடிவமை | – | 250-300 / 1 மணி நேரம் |
3. | ஜீனியர் பெட்கஸ் | – | 500 / 1 மணி நேரம் |
4. | ஜெயின்டு பெட்கஸ் | – | 1000-1200/ 1 மணி நேரம் |
5. | தெர்மேக்ஸ் | – | 1000 / 1 மணி நேரம் |
6. | ஓசா | – | 800 / 1 மணி நேரம் |
7. | அக்ரோசா | – | 500 / 1 மணி நேரம் |
8. | டூகாஸ் | – | 300 / 1 மணி நேரம் |
சுத்திகரிப்பு நிலையங்கள் அங்கீகாரம்
விதைச்சான்றிதழ் இயக்குநரால் சான்றிதழ் பணிகளுக்கு ஐந்து வகையான சுத்திகரிப்பு நிலையங்கள் கீழ்க்கண்டவைகலுள் குறிப்பிடப் பட்டுள்ளது.
- விதைச் சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை நிலையம்
- அரைவை நிலையம்
- அரைவை, சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை நிலையம்
- பஞ்சு நீக்கும் நிலையம்
- தூய்மைப்படுத்தும் மற்றும் சான்றட்டை நிலையம்.
அங்கீகாரம் பெற சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை
- தூய்மைப்படுத்துதல், தரம் பிரித்தல், நேர்த்தி செய்தல், எடையிடுதல், பையிலிடுதல் மற்றும் ஈரப்பதம் ஆய்வு ஆகியவற்றிற்கு தேவைப்படும் சாதனங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- மூலவிதைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட விதைகளை சேமிக்கத் தேவையான இடவசதி இருக்கவேண்டும்.
- உலர வைக்கும் தன்மை, பார்பாலின் மற்றும் சாக்குகள் போன்றவை தேவையான அளவு இருக்கவேண்டும்.
- காற்றோட்டம், சூரிய ஒளி மற்றும் செயற்கை ஒளிக் கட்டிடம் இருக்கவேண்டும். கட்டிடத்தின் மேற்கூரை, தரைதளம் மற்றும் சுவர்கள் நீர்க்கசிவு படியாமலும், வெடிப்பு மற்றும் துவாரங்கள் இல்லாமலும் இருக்கவேண்டும்.
- குறைந்த பட்ச விதைச் சிதைவு உள்ளபடி வடிவமைக்கவேண்டும்.
- பல்வேறு அளவு சல்லடைகள் இருக்கவேண்டும்.
அரைவை நிலையம்
- காற்றோட்டம், சூரிய ஒளி மற்றும் செயற்கை ஒளிக் கட்டிடம் இருக்கவேண்டும். கட்டிடத்தின் மேற்கூரை, தரைதளம் மற்றும் சுவர்கள் நீர்க்கசிவு படியாமலும், வெடிப்பு மற்றும் துவாரங்கள் இல்லாமலும் இருக்கவேண்டும்.
- உடைந்த மற்றும் வளர்ச்சி குன்றிய விதைகளை பிரிக்கத் தேவையானன சல்லடைகள் இருக்கவேண்டும்.
- எடைத்தராசு இருக்கவேண்டும்.
- பஞ்சு நீக்கியவுடன் விதைகளை உடனடியாக உலர வைக்கத் தேவையான உலர வைக்கும் தளம் இருக்கவேண்டும்.
- பருத்தியை முன் தூய்மை செய்யத் தேவையான வசதிகள் இருக்கவேண்டும்.
அரைவை, சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை நிலையம்
- அரைவை நிலையத்திற்கு மேற்கூறிய வசதிகளுடன், கீழ்க்கண்டவையும் இருக்கவேண்டும்.
- விதைத் தரம் பிரிக்கத் தேவையான சல்லடைகள், பைகள் அடைக்கும் கருவி, எடைத் தராசு மற்றும் ஈரமானி.
- மூல விதைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட விதைகள் சேமிக்கத் தேவையான இடவசதி இருக்கவேண்டும்.
- உலர வைக்க மற்றும் தூய்மைப்படுத்தும் தளங்கள் இருக்கவேண்டும்.
- தேவைப்படும் அளவு மூடாக்குகள் மற்றும் பாரிபாலின்கள் (Tarpaulin) இருக்கவேண்டும்.
- தரம் பிரிக்கும் கருவி, ஒப்பு அடர்த்தி பிரிப்பான், பஞ்சு நீக்கும் கருவி போன்றவை இருக்கவேண்டும்.
பஞ்சு நீக்குதல்
- பஞ்சு நீக்குதலுக்கு தேவைப்படும் பொருட்களும், கருவிகளும், இடம் பெறவேண்டும்.
- சுத்திகரிக்கப்படாத மற்றும் பஞ்சு நீக்காத விதைகளை சேமிக்க இடவசதி இருக்கவேண்டும்.
- உலர வைக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் தளங்கள் இருக்கவேண்டும்.
தூய்மைப்படுத்துதல் மற்றும் சான்றட்டை பொருத்துதல்
- காற்றோட்டம், சூரிய ஒளி மற்றும் செயற்கை ஒளிக் கட்டிடம் இருக்கவேண்டும். கட்டிடத்தின் மேற்கூரை, தரைதளம் மற்றும் சுவர்கள் நீர்க்கசிவு படியாமலும், வெடிப்பு மற்றும் துவாரங்கள் இல்லாமலும் இருக்கவேண்டும்.
- தூய்மைப்படுத்தும், சான்றட்டைப் பொருத்த மற்றும் சேமிக்கத் தேவையான இடவசதி வேண்டும்.
- தூய்மைப்படுத்தத் தேவையான சல்லடைகள், பைகளை அடைக்கும் கருவி, எடைத்தராசு (சிறிய அளவு) மற்றும் தேவைப்படும் மூடாக்குகள் இடம் பெற்றிருக்கவேண்டும்.
- அங்கீகாரம் பெற்ற எந்த நிலையங்களிலும் பஞ்ச நீக்குதல் செய்யலாம். ஆனால் உரிமம் பெற மனு செய்யும் போது அதனை குறிப்பிடவேண்டும்.
அங்கீகாரம் பெற விரும்புபவர் இயக்குனர் (விதைச் சான்றளிப்பு) அவர்களுக்கு மாதிரிப் படிவம் கூறியபடி மனு (நான்கு பிரதிகள்) மற்றும் பரிந்துரைத்த கட்டணம் ஆகியவற்றை முறையான வழியில் அனுப்பவேண்டும். உரிமம் காலாவதி ஆகும் முன்னரே விண்ணப்பம் செய்யாவிடில், அக்காலத்திற்கு மேல் ஒரு மாதத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். அதற்கு மேல் துணை இயக்குநர் (விதைச் சான்றளிப்பு) அவருக்கு அனுப்புவது நிராகரிக்கப்படும். அச்சமயங்களில் புதிய உரிமம் பெறவேண்டிய நிலைமை ஏற்படும்.
நிலையத்தின் உரிமையாளர் கீழ்க்கண்ட பதிவேடுகளை வைத்திருக்கவேண்டும்.
- சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை பதிவேடு
- சான்றட்டை கணக்கு வழக்கு பதிவேடு
- அரைவை நிலையப் பதிவேடு
- பஞ்சு நீக்குதல் பதிவேடு
- கையிருப்பு பதிவேடு
- விதிமுறைகள் புத்தகம்
பரிந்துரைக்கும் முன்னர், விதைச் சான்றிதழ் அலுவலர் அந்த நிலையத்தில் தேவையான குறைந்தபட்ச வரையறைகள் மற்றும் சாதனங்க்ள உள்ளதை உறுதி செய்யவேண்டும். அவருக்கு திருப்தி இல்லாவிடில், விண்ணப்படிவத்தை உரிமையாளருக்கு அக்காரணம் கூறி திருப்பி அனுப்பலாம். உரிமம் பெற தகுதி இருப்பின் துணை இயக்குநர் (விதைச் சான்றளிப்பு) அவர்களுக்கு பரிந்துரைத்து அனுப்பலாம்.
விண்ணப்பம் பெற்றவுடன், துணை இயக்குநர் (விதைச் சான்றளிப்பு) அவர்கள் அந்நிலையத்தை ஆய்வு செய்து பின் குறிப்புரையுடன் இணை இயக்குநர் (விதைச் சான்றளிப்பு) அவர்களுக்கு பரிந்துரைக்கலாம். இணை இயக்குநர் அவர்கள் அவ் விண்ணப்பத்தை ஆய்வு செய்து பின் அங்கீகாரம் பெறப் பரிந்துரைக்கலாம். புதியதாக அங்கீகாரம் பெறும் நிலையங்களை அவர் நேரில் ஆய்வு செய்து அவர் குறிப்புரையைப் பரிந்துரைக்கவேண்டும். துணை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகிய இருவரும் அங்கீகார பதிவேட்டை விதிமுறைகளின்படி வைத்திருக்கவேண்டும்.
விதைச் சுத்திகரிப்பு நிலைய உரிமம் புதுப்பித்தல்
உரிமம் பெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர் அக்காலக்கெடு முடியம் முன் உரிமம் புதுப்பிக்கத் தேவையான விண்ணப்பம், மூன்று பிரதிகளுடன் மற்றும் கட்டணம் ஆகியவற்றை விதைச் சான்றிதழ் துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்