விதை கிராமம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

விதை கிராமம்

விதை கிராமம்

விதையே விவசாயத்திற்கு தொடக்கமாகும் மற்றும் இதர இடுப்பொருட்களின் உற்பத்திற்கு மூலகரமாகும். நல்ல தரமுள்ள விதை மட்டுமே 15 – 20 % உற்பத்தியை அதிகரிக்கும். 2025 ஆம் ஆண்டு நம் நாட்டில் 1.4 கோடி மக்களின் உணவுத் தேவைக்காக விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதுமட்டுமின்றி விவசாயிகள் அதிக திறன் உள்ள மேம்படுத்தப்பட்ட விதை இரகங்களை உற்பத்தி செய்வது முக்கியமானதொன்று.

இந்த விதைத் திட்டத்தில் மாநில அரசு, வேளாண்மைப் பல்கலைக்கழக முறைகள், பொதுத்துறை கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றது. இந்த அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தினால், 15 – 20 % விதையின் தரத்தை உற்பத்தி செய்ய முடிகிறது. சில சமயங்களில் விவசாயிகள் பயிரிடுவதற்காக அவர்களின் பண்ணை விதைகளையே பயிர் உற்பத்திக்காக விதைக்கின்றனர். இதனுடன் விதைப்பதற்கு சில வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான பயிர்கள் விற்பனைக்காக பயிரிடப்படுகிறது. இதில் சிறிய பங்கு விதைகளை தனியாக பிரித்தும், சேமித்தும் மற்றும் அடுத்து பருவத்திற்கு விதையாகப் பயன்படுத்துகின்றனர். இந்த விதைகள் எதிர்பார்த்த அளவிற்கு விதைத்திறன் கிடைக்காது.

உற்பத்தி திறனுக்கு நல்ல தரமுள்ள விதைகளை இடுப்பொருளாக பயன்படுத்தலாம். அடுத்தடுத்தக் காலங்களில் பழைய விதையைப் பயன்படுத்துவதனால் விதைகளின் தரம் குறைகிறது. எனவே புதிய விதைகளை மாற்றி பயன்படுத்த வேண்டும். எப்பொழுதும் கலப்பின விதைகளை வருடத்திற்கு ஒருமுறையும் மற்றும் கலப்பின மற்ற விதைகளை 3 முதல் 4 வருடத்திற்குள் மாற்றம் செய்ய வேண்டும். எனவே விதையின் மாற்ற விகிதத்தை அதிகரிக்க விதையின் தரத்தை முன்னேற்ற வேண்டும்.

இருப்பினும் ஒருங்கிணைந்த விதைத் திட்டத்தின் மூலம் 15% வரைதான் விதை மாற்றம் விகிதம் அடைந்துள்ளது. இதனால் நல்ல தரமுள்ள விதைகளின் தேவை மற்றும் விநியோகத்திற்கு நடுவில் நீண்ட இடைவேளை அமைந்துள்ளது. இந்திய விதை நிறுவனங்களான தனியார் விதை நிறுவனங்கள் மட்டுமே விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திலி சிறந்து விளங்குகின்றது. ஆனாலும் இன் நிறுவனங்களில் குறைந்த அளவிளான அதிக விலையுள்ள விதைகளை உற்பத்தி செய்வதினால் சில விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படுகிறது.

இன்னும் பொது துறைகளில் நெல் ரகங்கள், எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள் போன்றவற்றை குறைந்த விலையில் அதிகளவில் விநியோகம் செய்கின்றனர். குறைவான விதை மாற்று விகிதம் காரணம், நல்ல தரமுள்ள பயிறு வகை மற்றும் எண்ணெய் வித்து விதைகள் இல்லாததே முக்கிய காரணமாகும். எனவே இந்த வகையான பயிறுகளை அதிகமாக உற்பத்தி செய்தால் நல்ல தரமுள்ள விதைகளை விநியோகம் செய்யலாம்.

விதை கிராமம் என்றால் என்ன?

விதை கிராமம் என்றால் ஒரு குறிப்பிட்ட கிராமங்களில் பயிற்சியளிக்கப்பட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த பயிர் விதைகளை தங்கள் தேவைக்கும் தங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும் அடுத்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் தகுந்த விலையில் விதைகளை பரிமாறிக் கொள்கின்றனர்.

கருத்துக்கள்

  1. விதைகளை ஒரே இடத்தில் உற்பத்தி செய்யலாம்
  2. பழைய இரகங்களுக்கு பதிலாக புதிய இரகங்களை மாற்றம் செய்யலாம்
  3. விதை உற்பத்தியை அதிகரிக்கலாம்
  4. உள்ளூர் தேவைக்காக தகுந்த நேரத்தில், தகுந்த விலையில் விதைகளை விநியோகம் செய்யலாம்
  5. கிராமங்களில் சுயசார்பு மற்றும் தன்னிறைவு அடையலாம்
  6. விதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கலாம்

சிறப்பியல்புகள்

  1. அனைத்துப் பண்ணைகளிலும் உரிய நேரத்தில் விதைகள் கிடைக்கும்
  2. சந்தை விலையை விட குறைவான விலையில் விதைகள் கிடைக்கும்
  3. விவசாயிகள் சுயமாக விதைகளை உற்பத்தி செய்வதால் அவர்களிடம் தரத்தின் மேல் அதிகப்படியான தன்னம்பிக்கை அடைந்துள்ளனர்
  4. விற்பனையாளர் மற்றும் நுகர்வோர், இதனால் சமமாக பயன் அடைந்துள்ளனர்
  5. புதிய வகையான ரகங்களை அனைவருக்கும் உடனடியாக கிடைக்கச் செய்கின்றன

விதை கிராமங்கள் ஏற்படுத்துதல்

தற்போது விதை கிராமத் திட்டத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.

பல பயிர்களின் விதை உற்பத்தி:

விதை கிராமத்தின் நோக்கம் உற்பத்தி செய்கின்ற விதைகள் அடிப்படை விதையாகவும், சான்று பெற்ற விதையாக இருக்க வேண்டும். பயிரிடத் தேவையான இடத்தை தேர்ந்தெடுத்து அதில் ஒரே இரகமான பயிரை பயிரிட வேண்டும்

தேர்வு செய்ய வேண்டிய இடம்:

  • நீர் பாசனம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும்
  • ஒரு பருவக் காலத்திற்கு மேல் தகுந்த தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு பயிரை பயிரிட வேண்டும்
  • வேலை ஆட்கள் தேவைப்படும்
  • குறிப்பிட்ட பயிரைப் பற்றிய முழுவிவரமும் விவசாயிகள் தெரிந்திருக்க வேண்டும்
  • பூச்சி மற்றும் நோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்
  • பயிரிட்ட முந்தைய இடம், தற்போது விதை பயிரிட ஏற்றவாறு இருக்க வேண்டும்
  • சராசரியான மழை இருக்க வேண்டும்
  • விதை மற்றும் இதர இடுப்பொருள் பரிமாற்றத்திற்காக நகர் புறம் அருகில் இருக்க வேண்டும்

விதை விநியோகம்

விஞ்ஞானிகள், விதை உற்பத்திற்காக தகுந்த இடத்தை அடையாளம் காட்டுகின்றனர். ஆதரவு தொகையாக 50% குறிப்பிட்ட விவசாயிகளுக்கு பல்கலைக்கழக விவரச் சீட்டு அடங்கிய விதைகளை வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் தரமான விதைகளை தங்களுடைய விவசாய நிலத்தில் தங்கள் சொந்த உபயோகத்திற்காக விதைகளை உற்பத்தி செய்கின்றனர். நெல், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் விதைகளை உற்பத்தி செய்கின்றனர்.

கொள்திறன் அமைப்பு

  • தொழில்நுட்பம் மற்றும் சமூக பங்கேற்ப்புக்கான இணைப்பை பலப்படுத்த நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளின் கொள்திறன் அதிகப்படுத்த சிறப்பு வழியுறுத்தல் வழங்கப்படுகிறது.
  • விவசாயிகளினுடைய தொழில்நுட்ப அதிகாரம் அளித்ததற்காக விதைக் கிராமங்களின் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு விதை உற்பத்தி மற்றும் விதை தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விதை கிராம திட்டம்

தரமுள்ள விதைகளை உற்பத்தி செய்யவும் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதைக் கிராமத் திட்டத்தை அரசு உதவியுடன் இயங்கும் மூன்று ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 13 – வேளாண் அறிவியல் நிலையங்களின் மூலம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது.

பயிர்கள்

நெல், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்கள்:

2006 – 07 2007 – 08
திட்டங்கள் செயல் படுத்தப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 34 173
திட்டங்கள் செயல் படுத்தப்பட்ட பரப்பளவு (ஏக்கர்) 1886 12618
விதைகள் விநியோகம் (டன்னில்) 38.80 301.90
பயன்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 1932 12681

விதை சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்துதல்

அறுவடைக்கு பின் விதைகளை கையாலுவது முக்கியமானதாகும், மற்றும் தரமுள்ள விதை இரகங்கள் சந்தைகளில் உபயோகிக்கக் கூடியதாகும். இந்த விதைகளை நன் முறையில் கையாலாவிட்டால், கூட்டு முயற்சி அனைத்தும் விணாகும். அதனால் விதை சுத்திகரிப்பு மற்றும் பெட்டியிலிடுதல் ஆகியவை விதை உற்பத்திக்கு முக்கியமானவையாகும். விதை சுத்திகரிப்பு மையங்கள் அடிப்படை வசதியுடன் இருக்க வேண்டும். இந்த இடங்களில் போக்குவரத்து வசதியுடையதாக இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு விதை சுத்தகரிப்பு மையங்களுக்கான உள்கட்டமைப்புகள்.

  1. விதை தோட்டம் மற்றும் சுத்தப்படுத்தும் கருவி
  2. பை தைக்கும் கருவி, பொருள் எடுத்து செல்லும் வண்டி, அளவுகோள் மற்றும் அறைகலன்
  3. வீட்டு உபயோகிக்கும் கருவிகளுக்கான கட்டமைப்பு
  4. விதை சேமிப்பு கட்டமைப்பு
  5. விதை கதிரடித்தல் மற்றும் உலர்த்தும் களம்

தகவல் மையம்

விதை தேவை, சந்தை நிலவரம், வேளாண் சந்தை அட்டவனை, வானிலை முன் அறிவிப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகிய அனைத்து தகவல்கள் இணையதளம் வழியாக தெரிந்துக் கொள்ளும் படியாக தகவல் மையம் இருக்க வேண்டும்.

விதை கிராமத்தின் பயன்கள்

  • தடுப்பு இடைவெளியைக் குறைத்தல், அயல் மகரந்தச் சேர்க்கை பயிர்களான மக்காச்சோளம் மற்றும் சூரிய காந்தி போன்றவற்றில் தடுப்பு இடைவெளி அதிகம் தேவைப்படுகிறது. எனவே இப்பயிர்கள் பயிரிடும்போது அப்பகுதி முழுவதும் ஒரே இரகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • எனவே பண்ணை இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும்.
  • விதை அறுவடைக்குப் பின் கையாலுவது சுலபமாகும்.
  • இவ்வாறு ஒரே இரகத்தை பயிரிடும் போது, அறுவடைக்குப் பின் உலர்த்துதல், பதப்படுத்துதல் போன்ற செயல்களின் போது பல இரக விதைகள் ஒன்றோடொன்று கலப்பது தவிர்க்கப்படுகிறது.
  • விதை சான்று கண்காணிப்பாளர், பெருமளவு பரப்பை கண்காணித்தல் எளிது.
  • இடுபொருள் செலவு குறைகிறது.
  • கலப்படமற்ற தூய விதைகள் கிடைக்கும்.

 

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்