விதைகள்

விதை உற்பத்தியில் உயரிய தொழில்நுட்பங்கள்

Advanced technologies in seed production

வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் விதைகள் பெரும் பங்குவகிக்கின்றன. வித்தே விளைவின் ஆதாரம், விதை பாதி, வேலை பாதி, சொத்தைப் போல் வித்தைப் பேண வேண்டும், கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர் விதைத்தால் போர் உயரும் ஆகிய பழமொழிகள் விதை மற்றும் விதை உற்பத்தியின் அவசியத்தை எடுத்துரைக்கின்றன.

விதைகள் நல்ல தரத்துடன் இருப்பது அவசியம். விதைகள் நல்ல தரத்துடன் இருந்தால் மட்டுமே, பயிர்கள் மற்ற அனைத்து இடுபொருட்களையும் ஏற்றுக் கொண்டு நல்ல முறையில் வளர்ந்து அதிகரித்த விளைச்சலை அளிக்கும். நல்ல தரமான விதைகள் என்பது இனத்தூய்மை, புறத்தூய்மை, முளைப்புத் திறன், வீரியம் மற்றும் விதை நலம் போன்ற குணாதிசயங்களில் மேம்பட்டு இருக்கும். நல்ல தரமான விதைகளின் பயன்பாடு மட்டுமே உற்பத்தியில் 15 சதவிகிதம் அதிகரித்த விளைச்சலுக்கு வழி வகுக்கிறது. மேலும், தரமான விதை மற்றும் தகுந்த உழவியல் முறைகளை கையாள்வதால் 40 சதவிகிதம் வரை பயிர் விளைச்சலை மேம்படுத்தலாம். அல்லது மிகவும் முதிர்ச்சியடைந்த காய்களை காலம் தாழ்த்தியோ அறுவடை செய்வது விதைத் தரம் மற்றும் விளைச்சலை பெருமளவில் பாதிக்கும்.

அறுவடை செய்த விதைகளை தகுந்த முறையில் சுத்திகரிப்பு செய்வது மிகவும் அவசியம். விதைகளை சுத்திகரிப்பதற்கு அந்தந்த பயிருக்கேற்ற பல்வேறு சுத்திகரிப்பு கருவிகள் உள்ளன. அவற்றின் மூலம் விதைகளில் உள்ள தேவையற்ற குப்பைகள், அளவில் சிறிய மற்றும் மிகப் பெரிய விதைகள், உடைந்த விதைகள் போன்றவற்றை நீக்கி ஒரே சீரான அளவுள்ள விதைகளை பெறலாம். சாதாரணமாக பல்வேறு அளவுள்ள சல்லடைகளைப் பயன்படுத்தி விதையின் அளவிற்கேற்ப தரம் பிரிக்கலாம்.

விதை சேமிப்பு

  • உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உடனே விற்பனை செய்ய முடியாமல் இருக்கும் பொழுது விதைகளை சேமித்து வைக்கலாம்.
  • விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.
  • விதைகளை சேமிப்பதற்கு முன் தகுந்த அளவு ஈரப்பதத்திற்கு வரும் வரை (8 முதல் 13 சதவிகிதம்) நன்கு உலர்த்தி பூச்சிக் கொல்லி (இமிடாகுளோபிரிட் 2 மி.லி. / கிலோ) அல்லது பூஞ்சாணக் கொல்லிகளைக் (பெவிஸ்டின் 2 கி. / கிலோ) கொண்டு விதை நேர்த்தி செய்து சேமிக்கலாம்.
  • பயறு வகை விதைகளை குறைந்த அளவு வெப்ப நிலையில் (100 சென்டிகிரேட்) இரு வாரங்கள் வைத்து பின் சேமிக்கும் போது பயறு வண்டின் தாக்குதல் குறைந்து காணப்படும்.
  • சேமிக்கும் கால அளவைப் பொறுத்து சேமிக்கும் கொள்கலன்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • குறுகிய கால சேமிப்பிற்கு, சாக்குப் பைகளையும், இடைப்பட்ட கால சேமிப்பிற்கு குறைந்த அடர்வுள்ள பாலித்தீன் பைகளிலும், நீண்ட கால சேமிப்பிற்கு அதிக அடர்வுள்ள பாலித்தீன் பைகளையும், அலுமினிய தாள் பைகளையும், காற்றுப் புகாத கொள்கலன்களையும் பயன்படுத்தலாம்.
  • எனவே, விதை உற்பத்தியில் தகுந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதால் கூடுதல் விளைச்சலைப் பெறலாம் என்பதை உறுதிபடக் கூறலாம்.
  • விதைகள் இனத்தூய்மையுடன் கூடிய நல் விதைகளாக அதன் பாரம்பரிய குணங்களிலிருந்து மாறுபடாமல் இருக்க பல்வேறு விதை உற்பத்தி நிலைகளில் வல்லுநர் விதைகளிலிருந்து ஆதார மற்றும் சான்று நிலை விதைகளாக விதைச் சான்றளிப்புத் துறையின் மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்பட்டு தகுந்த விதைத் தரத்திற்காக சான்றளிக்கப்படுகிறது. இவ்வாறு சான்று பெற்ற விதைகளையே விதை உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும்.
  • விதையினை உற்பத்தி செய்வதில் தகுந்த கவனம் செலுத்தி உயரிய தொழில் நுட்பங்களைக் கையாள்வது அவசியம்.
  • நம் நாட்டின் விதை உற்பத்தி பெருக்கம், விதைச் சட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. விதை உற்பத்தி மேம்பாட்டிலும், நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு அளிப்பதிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இச்சட்டத்தின் படி விற்பனை செய்யப்படும் விதைகள் அதன் தரத்திற்கென சான்று பெற்றிருப்பது அவசியம்.
  • தரமான விதை உற்பத்தியில் பல்வேறு வகையான மேலாண்மை முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றுள் விதை நேர்த்தி, பயிர் மேலாண்மை, அறுவடை, சுத்திகரிப்பு மற்றும் விதை சேமிப்பு முறைகள் ஆகியவை தகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும்.

விதை நேர்த்தி முறைகள்

  • விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தினை அதிகரிக்கவும், விதைகளை பூச்சி மற்றும் பூஞ்சாணங்களிலிருந்து பாதுகாக்கவும் பல்வேறு விதை நேர்த்தி முறைகள் கையாளப்படுகின்றன.
  • இதனை விதைக்கும் முன் செய்வதால் விதை முளைப்பு மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதுடன் பயிர் எண்ணிக்கை தகுந்த அளவில் பராமரிக்கப்பட்டு அதிக விளைச்சல் கிடைக்க ஏதுவாகிறது.
  • விதை நேர்த்தி முறைகளில் முக்கியமானவைகளாக விதை உறக்கத்தை நீக்குதல், விதை உருபடமேற்றுதல், விதை முலாம் பூசுதல் மற்றும் ஒருமித்த விதை நேர்த்தி முறைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

விதை உறக்கம் நீக்குதல்

  • விதை உறக்கம் என்பது, விதை முளைப்புக்கேற்ற தகுந்த சூழ்நிலை மற்றும் காரணிகள் இருந்த போதிலும் உயிருள்ள விதைகள் முளைக்காமல் இருப்பதாகும்.
  • விதை உறக்கம் விதையின் மரபியல் தன்மையை பொறுத்தே அமைகிறது. பொதுவாக, தொடர்ந்து உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இருக்கும் பயிர் இரகங்களில் விதை உறக்கம் அதிகமாக காணப்படுவதில்லை. குறிப்பாக, நெல் இரகங்களான ஏடீடி 36, ஏடீடி 37 மற்றும் ஏடீடி 38, எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி, தண்டுக்கீரை, தீவனப்பயிர்கள் மற்றும் மரவகைப் பயிர்களிலும் விதை உறக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்.
  • விதை உறக்கம் குறிப்பிட்ட கால அளவிற்கு பிறகு இயற்கையாகவே நீங்கிவிடும்.
  • விதை உறக்கம் தன்மையைப் பொறுத்து பின்வரும் பல்வேறு விதை நேர்த்தி முறைகளை பயிருக்கேற்றவாறு கையாண்டு விதை உறக்கத்தை நீக்கலாம்.

விதை உருபடமேற்றுதல்

  • விதைகளை உருபடமேற்றுவதற்கு, விதைகளை நீரிலோ அல்லது பரிந்துரைக்கப்பட்ட கரைசல்களிலோ, ஒரு பங்கு விதைக்கு ஒரு பங்கு கரைசல் என்ற அளவில் விதைகளின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட நேரத்திற்கு ஊறவைத்து பின்பு, முன்பு இருந்த ஈரப்பதம் வரும் வரை உலர வைத்து விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் விதைகள் எத்தகைய சூழலிலும் நன்கு முளைத்து வீரியமுள்ள நாற்றுக்களை உற்பத்தி செய்யும். உருபடமேற்றிய விதைகளை, விதை விதைக்கும் கருவிகள் மூலமாகவும் விதைப்பிற்கு பயன்படுத்தலாம்.

விதைகளை உருபடமேற்ற பரிந்துரைக்கப்படும் வழி முறைகள் பின்வருமாறு.

விதை முலாம் பூசுதல்

பொதுவாக அளவில் மிகச்சிறிய விதைகளை விதைப்பில் கையாள்வது கடினம். மேலும், விதைப்பிற்கும் அதிக அளவில் விதைகள் தேவைப்படும். இத்தகைய விதைகளை விதை முலாம் பூசுவதன் மூலம் விதையின் அளவு மற்றும் வடிவத்தை, விதைப்பிற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். மேலும், முலாம் பூசப்பட்ட விதைகளின் முளைப்பு மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் வயலில் தகுந்த பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக விளைச்சலுக்கு வழி வகுக்கிறது.

விதை முலாம் பூசுவதற்கு, ஒட்டும் பொருள் மற்றும் நிரப்பு பொருட்கள் தேவைப்படுகின்றன. ஒட்டும் பொருட்களாக, அரிசி மற்றும் மைதாக் கஞ்சி, மரப்பிசின் போன்றவற்றையும், நிரப்பு பொருளாக மரத்தூள், கரித்தூள், தாவர இலைப்பொடிகள் போன்றவற்றையும் அதனுடன் பயிருக்கு ஏற்றவாறு தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள், உயிர்க் கட்டுப்பாட்டு காரணிகள், உயிர் உரங்கள், பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். தற்போது அதிக அளவில் விதைகளை முலாம் பூசுவதற்கு ஏற்ற இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு உபயோகத்தில் இருக்கின்றன. முலாம் பூசப்பட்ட விதைகள், துல்லிய பண்ணையத்திற்கு ஏற்ற நாற்றுக்களை உற்பத்தி செய்ய பயன்படும் குழித்தட்டு நாற்றங்காலில் விதைப்பான் மூலம் விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும். விதைத் தேவையின் அளவும் குறையும். முலாம் பூசப்பட்ட விதைகளை வனப்பெருக்கத்திற்கு வான்வெளி விதைப்பின் மூலம் விதைப்பது உலகளவில் நடைமுறையில் உள்ளது.

விதை பூச்சு

விதைகள் தற்போது பெருமளவில் தனியார் உற்பத்தி நிறுவனங்களால் பாலிமர் எனும் விதைப் பூச்சு கலவையை கொண்டு நேர்த்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்த விதைப் பூச்சு பாலிமரில் ஒட்டும் திரவம் மற்றும் விதை முளைப்பு சேர்க்கப்படுவதால் பாலிமர் விதை பூசப்பட்ட விதைகள் நன்கு முளைத்து வீரியமுள்ள நாற்றுக்களை உற்பத்தி செய்கின்றன. தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலும் விதை பூச்சிற்கென புதிய விதைப் பூச்சு கலவை கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கலவையில் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ற நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் விதையின் முளைப்பு மற்றும் பயிரின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது. விதைப்பூச்சு கலவையை ஒன்று முதல் பத்து கிராம் என்ற அளவில் பத்து முதல் 200 மி.லி. நீருடன் கலந்து பயிருக்கேற்றவாறு விதைப் பூச்சிற்கு பயன்படுத்தலாம். விதைப் பூச்சினை பெருமளவில் செய்வதற்கு விதைப் பூச்சு இயந்திரம் உள்ளது. இதனைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ விதை என்ற அளவில் விதைப் பூச்சு செய்யலாம். விதைப் பூச்சு இயந்திரத்தில் உலர்த்தியும் இணைந்துள்ளதால், விதைப் பூச்சு செய்யப்பட்ட விதைகள் உடனடியாக தேவையான அளவிற்கு உலர்த்தப்பட்டு விடுகின்றன. இந்த விதைகளை, உடனடி விதைப்பிற்கோ அல்லது சேமிப்பிலோ வைத்துப் பயன்படுத்தலாம்.

வடிவமைக்கப்பட்ட விதை நேர்த்தி முறைகள்

பல்வேறு விதை நேர்த்தி முறைகளான ஊக்குவித்தல், விதை முலாம் பூசுதல் அல்லது விதைப் பூச்சு கலவை பூசுதல் போன்றவற்றை ஒருங்கிணைந்து விதை நேர்த்தி செய்வதால் தனிப்பட்ட ஒவ்வொரு விதை நேர்த்தியின் பயனும் ஒருங்கிணைந்து கிடைக்க ஏதுவாகிறது. முக்கியமான பயிர்களுக்கு பரிந்துரைக்கப்படும் வடிவமைக்கப்பட்ட விதை நேர்த்தி முறைகள் பின்வருமாறு.

  • தரமான விதை உற்பத்திக்கு விதைப்பிலிருந்து பயிரின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் தக்க தொழில் நுட்பங்களை கையாள்வது அவசியமாகிறது.
  • விதை உற்பத்திக்கென தேர்வு செய்யப்பட்ட வயலை நன்கு உழுது சமன் செய்து விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும்.
  • இது தவிர தேர்வு செய்யும் நிலத்தில் முன் பருவத்தில் பிற இரக பயிர்களோ, மண்ணில் நோய்க் கிருமிகளோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • விதைகளை அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற பருவத்தில் தேவையான இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.
  • இது தவிர நடவின் முன், விதை நிலத்தில் அந்தந்த பயிர்களுக்கு தேவையான பயிர் விலகு தூரத்தினை கடைப்பிடிக்க வேண்டும். இதனால் பயிரின் இனத்தூய்மை பாதுகாக்கப்படும்.
  • நாம் பயிரிடும் நிலங்களின் குணாதிசயங்களை அறிந்து அதற்கேற்ப உரமிடுதல் அவசியம்.

மேலும், பயிர்களின் தேவைக்கு ஏற்ப தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அடியுரமாக இடுதல் வேண்டும். உதாரணமாக நிலக்கடலை மற்றும் சூரியகாந்திப் பயிர்களில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு, விதை அளவு மற்றும் விளைச்சலை பெருமளவில் பாதிக்கும்.

எனவே, இப்பயிர்களுக்கு போரான் மற்றும் ஜிப்சம் ஆகிய நுண்ணூட்டச் சத்துக்களை இடுவது அவசியம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு பயிருக்கென பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்ட கலவை உள்ளது. (Micro Nutrient Mixture). இதே போல் தழை மற்றும் சாம்பல் சத்தினை, பயிரின் வேறுபட்ட வளர்ச்சிப் பருவங்களில் தேவைக்கேற்ப பிரித்து அளிப்பதால் அதிக விதை விளைச்சலுக்கு வழி வகுக்கும்.

விதைப் பயிருக்குத் தேவையான அடியுரம் இட்டால் மட்டும் போதாது, அதன் பூக்கும் பருவத்தில் இலை வழி உரம் அளிப்பதால் காய்ப் பிடிப்பு அதிகரித்து விதை விளைச்சலும் அதிகரிக்கும். எல்லாப் பயிர்களுக்கும் ஒன்று முதல் இரண்டு சதம் டி.ஏ.பி. கரைசலை பூக்க ஆரம்பிக்கும் தருணத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிப்பது அவசியம். இதனால் விதைத் தரத்துடன் விதை விளைச்சலும் கணிசமாக உயர்கிறது. விதைப்பயிரில் பூக்கள் உதிர்வதைத் தடுக்க நாப்தலின் அசிடிக் அமிலத்தை (200 பிபிஎம்) பூக்கும் போது பயறு வகை மற்றும் பருத்திப் பயிர்களுக்கு தெளிப்பது அவசியம். இது தவிர அந்தந்த பயிருக்கு தேவையான நுண்ணூட்ட கரைசல்களையும் (துத்தநாக சல்பேட், இரும்பு சல்பேட்), திரவ இயற்கை உரங்கள் மற்றும் உயிர்க் கட்டுப்பாட்டுக் காரணிகளையும் இலைவழி தெளிப்பதன் மூலம் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். நிலக்கடலையில் பூக்கும் தருணத்தில் நாப்தலின் அசிடிக் அமிலத்தை (200 பிபிஎம்) தெளிப்பதன் மூலம் நல்ல தரமான காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

விதை உற்பத்தி செய்யும் போது களைகள் இல்லாமல் வயல் தூய்மையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். களைகள் அகற்றப்படவில்லை என்றால் விதை உற்பத்தி குறைவதோடு விதையின் புற மற்றும் இனத்தூய்மையும் பாதிக்கப்படும். விதைச் சான்றளிப்பில் அந்தந்த பயிர்களுக்கென குறித்து அறிவிக்கப்பட்ட களைச் செடிகள், தரச் சான்றுக்கென நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மிகுதியாகாமல் அவ்வப்போது அவற்றை கண்டறிந்து நீக்கி விட வேண்டும். விதைப் பயிர்களுக்கு வளரும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் முதிர்ச்சி பருவம் ஆகிய பருவங்களில் கண்டிப்பாக நீர்ப்பாசன வசதியளிக்க வேண்டும். இது விதை விளைச்சல் குறையாமல் இருக்க வழி வகுக்கும்.

கலவன் அகற்றுதல்

  • விதைப் பயிர் எனில் எல்லா செடிகளும் ஒரே மாதிரியான ஒருமித்த குணாதிசயங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • விதை உற்பத்தியின் போது விதைப் பயிரின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்ட பயிர்கள், பிற இரக பயிர்கள் ஆகியவை விதைப்பயிரின் இனத் தூய்மையைப் பாதிக்கும் என்பதால் அவற்றை பயிரின் பல்வேறு நிலைகளான பூக்கும் பருவத்திற்கு முன்பும், பூக்கும் பருவத்திலும், காய்பிடிப்பின் போதும் மற்றும் அறுவடைக்கு முன்பும் குட்டையான செடிகள், உயரமான செடிகள், மாறுபட்ட இலை, தண்டு, பூக்களின் நிறம் கொண்ட செடிகள் மற்றும் காய்களின் தன்மையில் வேறுபட்டிருக்கும் செடிகள் ஆகியனவற்றை நீக்க வேண்டும்.
  • இதனால் தரமான இனத்தூய்மையுடன் கூடிய விதைகளை உற்பத்தி செய்யலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

விதைப்பதற்கு முன் விதைகளை, பரிந்துரைக்கப்பட்ட பூசணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பதால் விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் நாற்றுகளின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படுகிறது. பயிர்களைத் தாக்கக்கூடிய அனைத்து பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை அவ்வப்போது கண்டறிந்து தகுந்த பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் விதையின் தரம் மற்றும் விளைச்சல் குறைபாடு தவிர்க்கப்படும். மேலும், சரியான நேரத்தில், சரியான அளவு பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகளைத், அந்தந்த பயிர்களுக்கென பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளித்தல் வேண்டும்.

அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்திய விதை மேலாண்மை

விதைப் பயிரினை வினையியல் முதிர்ச்சியடைந்த தருணத்தில், அறுவடை செய்தல் வேண்டும். ஏனெனில், அத்தருணத்தில் விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியம் அதிக அளவில் இருக்கும். விதையின் நிறம் மற்றும் ஈரப்பதத்தை கணக்கில் கொண்டு அறுவடைக்கு ஏற்ற தருணத்தை நிர்ணயம் செய்யலாம். பொதுவாக விதையின் ஈரப்பதம், 20 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கும் போது பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும் போது விதைக் காயங்கள் ஏற்படாதவாறு கவனமுடன் இருக்க வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!