விதைச் சேமிப்பை பாதிக்கும் காரணிகள் ஓர் பார்வை

சேமிப்புக் காரணிகள்

விதைச் சேமிப்பை பாதிக்கும் காரணிகள்

  • உயிர்க் காரணிகள்
  • உயிரற்ற காரணிகள்

உயிர்க் காரணிகள்

  • விதை சம்பந்தமானவை
  • விதையின் மரபியல் தன்மை
  • முன் விதைத்தரம்
  • விதையின் பிறப்பிடம் / தோற்றம்
  • விதையின் ஈரப்பதம்

மற்ற உயிர்க் காரணிகள்

  • பூச்சிகள்
  • பூஞ்சாண்
  • எலிகள்
  • மாதிரி எடுத்தல் மற்றும் ஆய்வின் போது கையாளும் விதம்

உயிரற்ற காரணிகள்

  • வெப்பநிலை
  • ஈரப்பதம்
  • விதைச் சேமிப்புச் சுகாதாரம்
  • வாயு மண்டல சூழ்நிலை
  • அடைக்கும் பொருள்கள் / சேமிக்கும் பைகள்

விதைக் காரணிகள்

மரபியல் காரணிகள்

விதையின் மரபியல் தன்மையானது அதன் சேமிப்பைப் பாதிக்கின்றது. சில வகை விதைகள் இயற்கையாகவே குறுகியக் கால வாழ்வு கொண்டவை. எ.கா வெங்காயம், சோயாபீன்ஸ், நிலக்கடலை போன்றவை மரபியல் தன்மையைக் கொண்டு விதைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

நுண்ணுயிர்             –          குறுகிய வாழ்நாள்
நடுத்தர உயிர்           –          மிதமான வாழ்நாள்
பேருயிர்                –           நீண்ட வாழ்நாள்

முன் விதைத்தரம்

பார்டன் (1941) என்பவரின் கூற்று யாதெனில், “குறைந்த வீரியமுள்ள விதைகளைக் காட்டிலும் முன்பே அதிக வீரியமுள்ள விதைகள் சாதகமில்லாத சேமிப்பு சூழ்நிலைகளை எதிர்க்கும் ஆற்றல் நிறைந்தவையாக இருக்கும். அடிப்பட்டு காயமடைந்த விதைகள் தம் வீரியத்தன்மையை விரைவில் இழந்துவிடும். பெரிய விதைகளை காட்டிலும் சிறிய விதைகள், சேதமடைவது குறைவாகும். (எ.கா) பீன்ஸ், லிமா பீன்ஸ் மற்றும் சோயாபீன்ஸ், உருண்டை வடிவுள்ள விதைகள் தட்டையான மற்றும் தாறுமாறான வடிவ விதைகளை விட பாதுகாப்பானவையாகும்.

விதைத் தோற்றத்தின் விளைவு

விதைத் தோன்றிய (அ) உற்பத்தியான இடத்தைப் பொருத்து சேமிக்கும் திறன் மாறுபடும். (எ.கா) க்ளோவர் (சிகப்பு வகை) என்ற பயிரின் சேமிப்புக் காலம் கனடாவில் 4 வருடம் (80 சதவிகிதம் முளைப்புத் திறன்) ஆகவும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்தில் 3 வருடமாகவும் இருந்தது. இரு வேறு பகுதிகளின் மாறுபட்ட மண் தன்மை மற்றும்  தட்பவெப்பச் சூழல் காரணமாக இருக்கலாம்.

காற்றின் அளவு

ஏற்றத்தாழ்வு கொண்ட வெப்பநிலை, விதை உருவாகுவதையும் அதன் முதிர்ச்சியையும் பாதிக்கும். அறுவடைக்கு முன் பெய்யும் மழையும் விதையின் வீரியத்தை கட்டுப்படுத்தும்.

சுகாதாரத்திற்கான அறுவடைக்கு முன் மருந்து இடுதல்

பயிறு வகைகளில், பூச்சித் தாக்குதலானது நிலங்களில் இருந்தே தொற்றுகிறது. (எ.கா) பயிறு வண்டுகள்.

விதையின் ஈரப்பதம்

சேமிப்புத் திறனை பாதிக்கும் முக்கியக் காரணி விதைகளின் ஈரப்பதமே சேமிப்பின் போது விதையின் வீரியத்தை கட்டுப்படுத்தும் முக்கியக் காரணியாகும்.

விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும் பொழுது சேமிக்கும் காலம் குறைகிறது. அதிக ஈரப்பதமானது பூஞ்சாண்களின் தாக்குதலை அதிகப்படுத்துகிறது. குறைந்த ஈரப்பதமும் (14 சதவிகிதம்) விதைகளை சேதமாக்கும் ஏனெனில் விதைகள் அதிகமாக உலர்ந்தும், (அ) கடின விதைகளாக மாறிவிடும்.

ஈரப்பதத்தை மையமாகக் கொண்டே விதையின் வாழ்நாள் தீர்மானிக்கப்படுவதால் விதைகளை குறிப்பிட்ட அளவு ஈரப்பதத்திற்கு உலர்த்துதல் அவசியமாகிறது. அந்த அளவு ஈரப்பதத்திற்கு உலர்த்துதல் அவசியமாகிறது. அந்த ஈரப்பதமானது சேமிப்புக் காலம், சேமிக்கும் கொள்கலன்கள், அடைக்கும் பைகளிக் வகை (அ) விதையின் இரகம் ஆகியவற்றைப் பொருத்தே அமையும். சாதாரணமாக சேமிக்கும் சூழலில் தானியங்களின் ஆயுட்காலம் 12-18 மாதங்கள் ஆகும். இவற்றின் ஈரப்பதம் 10 சதவிகிதம் இருப்பது சாதகமானதாகும். ஆனால் பைகளில் அடைத்து சேமிக்கும் பொழுது 5-8 சதவிகிதம் ஈரப்பதம் தேவைப்படும். இது பயிர்களுக்கிடையே மாறுபடும்.

ஹாரிங்டன் கோட்பாடுகள் (விதை ஈரப்பதம்)

விதையின் ஈரப்பதம் 1 சதவிகிதம் குறையும் போது அவற்றின் ஆயுட்காலம் இரட்டிப்பாகிறது. 4-12 சதவிகிதம் ஈரப்பதம் வரையில் இது பொருந்தும். ஈரப்பதத்தின் இழப்பைக் கொண்டு விதைகளின் சகிப்புத் தன்மை பொறுத்து விதைகள் இரு வகைகளாக பாகுபடுகின்றன.

மென்தோல் விதைகள்

ஈரப்பத இழப்பை தாங்கிக் கொள்ளும் இவ்வகை விதைகள் இது போன்ற குறைந்த ஈரப்பதம் விதைச் சேமிப்பிற்கு சாதகமாக அமையும்.

எ.கா நெல், மக்காச்சோளம்.

தடித்தோல் விதைகள்

மென்தோல் விதைகளுக்கு எதிர் மாறான ஈரப்பத இழப்பை தாங்கிக் கொள்ள முடியாதவை இவ்விதைகள் ஆகும். வீரியத்தன்மையைப் பராமரிக்க அதிக அளவு ஈரப்பதம் தேவைப்படும்.

நுண்ணுயிர், பூச்சிகள், சிலந்திகள்

இவ்வகை உயிரினங்களின் தாக்குதலால் விதைகளின் வீரியத்தன்மை குறைந்துவிடும். நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை, கட்டுப்படுத்துவது விதையின் ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஈரப்பதம் போன்றவை பூஞ்சாணக்கொல்லியில் நேர்த்தி செய்யப்படும் விதைகள் நீண்டகாலம்  சேமிக்கும் திறன் பெற்றிருக்கும். வாயு நச்சுவைக் கொண்டு விதைகளை நேர்த்தி செய்தால், அதிக நேரம் விதைகளை சேமிக்க முடியும்.

வாயு நச்சு மீத்தைல் ப்ரோமைட், ஹைட்ரஜன் சயனைடு, எத்திலின் டைக் குளோரைடு, கார்பன் டெட்ரோ குளோரைடு கார்பன் டை சல்பைட் மற்றும் நாப்தலீன் (ம)அலுமினியம் பாஸ்பின்.

உயிரற்ற காரணிகள்

சுற்றுச் சூழல் ஈரப்பதம்

காற்றின் ஈரப்பதம் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் காற்றின் அதிகபட்ச ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறனில் உள்ள உண்மையான ஈரப்பதத்தின் விகித அளவு ஆகும். காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை ஆகிய இரண்டும் விதையின் சேமிப்பு காலத்தைப் பாதிக்கும் காரணிகள் ஆகும். வெளிப்புறக் காற்று மண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தில் வைக்கப்படும் பொழுது விதைகள் ஒரு குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான ஈரப்பதத்தை அடைகின்றன. இந்தத் தனித்துவமான ஈரப்பதம் தான் நிலையான ஈரப்பதம், ஒரு குறிப்பிட்ட காற்றின் ஈரப்பதத்தில், வெப்பநிலை குறையும் பொழுது அதிகரிக்கும். சேமிப்பில் விதையின் ஈரப்பதமானது காற்றிலுள்ள வெப்பத்தை காட்டிலும் அதன் ஈரப்பதத்தைக் கொண்டே இயங்குகிறது.

இந்த நிலையான ஈரப்பதத்தின் விதையின் ஈரப்பதமானது ஏற்றம் மற்றும் இறக்கம் இல்லாமல் நிலைத்து இருக்கும்.

வெப்பநிலை

வெப்பநிலை வாழ்நாள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது பூச்சிகள் மற்றும் பூஞ்சாணங்களின் தாக்குதலும் அதிகரிக்கும். விதையின் ஈரப்பதம் அதிகபட்சமாக இருக்கும் பொழுது வெப்பத்தில் தாக்குதல்  இருக்கும். சேமிப்பின் பொழுது வெப்பநிலை மற்றும் விதை ஈரப்பதம் குறைப்பது விதையின் தரத்தை மேம்படுத்தும் முறைகளாகும். ஹாரிங்டன் கோட்பாடுகள் ஈரப்பதம் மற்றும் விதையின் வெப்பநிலைக் கொண்டு விதைத் தரம் மாறுபடுவதைக் கண்டறிந்துள்ளனர். அவை.

ஒவ்வோர் 1 சதவிகிதம் ஈரப்பத வீழ்ச்சிக்கும் விதை வாழ்நாள் இரட்டிப்பாகிறது. இது 5-14 சதவிகிதம் வரை உள்ள ஈரப்பதத்திற்குப் பொருந்தும்.

ஒவ்வோர் 5 டிகிரி செ வெப்பநிலை குறையும் போது வாழ்நாள் இரட்டிப்பாகும். இது 0-5 டிகிரி வரையில் பொருந்தும்.

சேமிப்புச் சூழலில் ஈரப்பத சதவிகிதம் 45 (அ) அதற்கு மிகாமல் இருந்தால் நல்லதொரு விதைச் சேமிப்பு இருக்கும். இச்சூழலில் தனி ஈரப்பதத்துடன் மற்றும் வெப்பமும் தனித்து 50 டிகிரி செ மிகாமல் இருக்கவேண்டும்.

மும்முனை வழிப்படம்

ராபர்ட்ஸ் (1972) என்பவர் வெப்பநிலை, விதை ஈரப்பதம் மற்றும் வீரிய காலம் ஆகிய மூன்று காரணிகளுக்கு உள்ள தொடர்பினை ஒரு கோட்பாட்டின் மூலம் விளக்குகிறார். இந்தத் தொடர்பினைக் கொண்டு ஒரு விதை வீரிய மும்முனை வழிப்படம் விளக்கப்பட்டது. குறிப்பிட்ட சேமிப்புச் சூழலில் உள்ள விதையின் வீரியம் பற்றிய விளக்கப்படம் தான் இது.

விதையின் வீரியத்தை தக்க வைக்கும் காலத்தை நிர்ணயிக்கக்கூடிய வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் பிணைப்பை இவ்வழிப்படம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வாயு மூலம் சேமிப்பு

அதிக ஆக்சிஜன் அழுத்தம் விதையின் வீரிய காலத்தைக் குறைக்கும். கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆகியவை விதையின் சேமிப்புக் காலத்தை அதிகரிக்கும்

 

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்