விதைச்சான்று
விதைச் சான்றளிப்பின் நோக்கம்
மத்திய மைய அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் ரகங்களில் உயர்தரமான விதைகள் உற்பத்தி செய்து, சான்றளிப்பின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதை சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.
சான்றுவிதையின் முக்கியத்துவம்
சான்று விதைதான் பயிர் வளர்ச்சியின் வெற்றி மற்றும் அபாய நிலையை மேம்படுத்தும் ஒரு கருவி ஆகும்.
சான்று விதை பயன்படுத்துவதற்கான 10 காரணிகள்
விதை தூய்மை
சான்று விதையானது உற்பத்தி தரத்தை பூர்த்தி செய்யும்படி வளர்க்கப்படுகிறது. இந்த விதை குறைந்தபட்ச களை விதை அல்லது பிற கலப்பினங்களைக் கொண்டுள்ளது.
இனத்தூய்மை
சான்றுவிதை உபயோக அமைப்பு மரபுத் தூய்மையை அதிகப்படுத்துகிறது. பிற இரகம், இதர பயிர் விதைகள் மற்றும் களைவிதைகளை குறைக்கின்றது.
விதைத்த உத்திரவாதம்
வயல் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் மூன்றாவது நபர் ஆய்வு மேற்கொள்வதால் நமக்குத் தேவையான தரமான விதைகள் கிடைக்கின்றது. இதன் மூலம் தாம் எதிர்பார்த்த விதைத்தரம் மற்றும் பிறருக்கு விதைத்தர உத்திரவாதம் கொடுக்க முடிகிறது.
புதிய தொழில்கள் உருவாதல்
உணவுப் பொருள்களை தயாரிப்போருக்குத் தேவையான ரகங்களை கொடுக்க முடியும். சான்று விதைகளை உபயோகிப்பதன் புதிய தொழில்வாய்ப்புகளும், சந்தை வாய்ப்புகளும் உருவாக வழிவகை செய்கிறது.
புதிய மரபுப் பண்புகள்
அதிக விளைச்சல், பூச்சி எதிர்ப்பு சக்தி, வறட்சி தாங்கும் சக்தி, களைக் கொல்லி எதிர்ப்புத் திறன் மற்றும சில ஆய்வுகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட விதைகளை விதைச்சான்று மூலம் வழங்கப்படுகிறது.
வார்த்தையின் உட்பொருள்
சான்று விதைகளை உபயோகிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மற்றவர்களிடம் கூறும் பயிர் ரகங்களை உறுதியாக வழங்க முடிகிறது.
பயிர்கடனுக்கு உத்திரவாதம்
சான்று விதைகள் பயிர்கடன் வாங்குவதற்கு தேவையான ஒப்புதல் வழங்குகிறது. சான்றுவிதை உபயோகிப்பதால் அபாயம் குறைகிறது என்பதை கடன் வழங்குவோர் அறிந்துள்ளனர்.
பிற இடுபொருள்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்துதல்
சான்று விதை மரபு மற்றும் இனத்தூய்மையை கொண்டுள்ளதால் பிற இடுபொருள்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது. இதன்மூலம் பிறஇடுபொருள்களின் தரம் அதிகரிக்கிறது.
சந்தையில் கூடுதல் விலை
நல்ல இடுபொருள் நல்லப் பயிரை உருவாக்குகிறது. ஆனால் விதைதான் முதன்மை இடுபொருளாக அதிக விளைச்சல் மற்றும் கூடுதல் விலை கொடுக்கின்றது.
தோற்றம் கண்டறிதல்
உணவு பாதுகாப்பு மற்றும் அறியும் திறன் இவை இரண்டும் வேளாண்மையில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றது. பொருட்களின் தோற்றம் தெரிந்தால் அந்தப் பொருட்களுக்கு நம்மால் உறுதியாக உத்திரவாதம் வழங்க முடியும். தொடக்கத்திலிருந்து சான்று விதையானது ஒரு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சான்றுவிதை, அதனை கண்டறிவதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.
கேள்வி பதில்கள்
1. சான்று விதை என்றால் என்ன ?
ஆதார விதையின் சந்ததியாக உற்பத்தி செய்யப்படும் சான்றுவிதை, அவ்விதைப் பயிர்க்கு தேவையான தரங்கள், இனத்தன்மை மற்றும் இனத்தூய்மையை உறுதி செய்யும் நிலையில் இருக்கவேண்டும். சான்று விதைகளை, ஆதார விதை நிலை Iன் பின் மூன்று தலைமுறைக்கு மேல் பெருக்கம் செய்யப்படாத சான்று விதைகளில் இருந்தும் உற்பத்தி செய்யலாம்.
2. சான்று விதைகள் உற்பத்தி செய்யும் மையங்கள் யாவை ?
சான்று விதை உற்பத்தி செய்ய விருப்பம் உள்ள எவரும் அதனை உற்பத்தி செய்யலாம். தற்பொழுது, மாநில விதை கழகங்கள், தேசிய விதை கழகங்கள், மாநிலப் பண்ணை கழகம், மாநில வேளாண் துறைகள், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் விவசாயிகள் போன்றோர் சான்று விதையை உற்பத்தி செய்கின்றனர்.
3. விதை சான்றிதழ் பெறத் தேவையான விதிமுறைகள் மற்றும் செயல்முறைகள் யாவை ?
- மனுவை பெறுதல் மற்றும் சரிபார்த்தல்
- விதையின் மூலம், பிரிவு மற்றும் விதைப்பயிர் உற்பத்திக்குத் தேவையான ஆதாரங்களை உறுதிப்படுத்துதல்
- குறிப்பிட்ட வயல் தரங்களுக்கு உட்பட்டுள்ளதை வயலாய்வுகள் மூலம் உறுதி செய்தல்.
- அறுவடை பின் சார் நிலைகளான சுத்திகரிப்பு மற்றும் பைகளில் அடைப்பது போன்றவற்றை கண்காணித்தல்.
- விதை மாதிரி எடுத்தல் மற்றும் ஆய்வு செய்தல், இதனில் இனத்தூய்மை ஆய்வு விதை ஆரோக்கியம் ஆய்வு மற்றும் குறிப்பிட்ட தரங்களை கொண்டுள்ளதை ஆய்வு செய்தல் போன்றவை அடங்கும்.
- சான்றட்டை மற்றும் சான்றிதழ் அளித்தல், சான்றட்டை பொருத்துதல் மற்றும் அடைத்தல்.
4. விதைச் சான்றிதழ் அளிக்க அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் யாவை ?
விதைச்சட்டம் பிரிவு 8ன்படி குறிப்பிடப்பட்ட மையங்கள் (மாநில அரசு மற்றும் தன்னாட்சி அமைப்புக்கள்) விதைச் சான்றிதழ் அளிக்க அங்கீகரிக்கப்பட்டவையாகும். தற்போது நாட்டில் மொத்தம் 21 மாநில விதைச் சான்றிதழ் மையங்கள் உள்ளன.
ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்