விதைகள்

வாரணாசியில் தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்

இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சக நிறுவனமான இது. விதையை ஆராய்ச்சி செய்ய, சான்று வழங்க, பயிற்சி தர உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது.

விதையை தரமாக தயாரிக்க தரத்தை உயர்த்த இது பாடுபடுகிறது.சிறந்த தர கட்டுப்பாடு ஆய்வகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரே மாதிரியான தரத்துடன் இந்திய அளவில் தரமான விதையை உற்பத்தி செய்கிறது. விதை ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்கிறது.

விதையை உற்பத்தி செய்து விற்பனை செய்வோருக்கு பயிற்சி அளிக்கிறது (இலவசம்). விதை சான்றளிப்பு / மார்க்கெட்டிங், எண்ணெய்வித்து மற்றும் சிறு தானிய தரமான தயாரிப்பு தொழில்நுட்பம். விதைகளை புதிய முறையில் ஆய்வு செய்தல். விதை தரத்தை சோதித்தல். ஒருங்கிணைந்த விதை மேம்பாடு, அறுவடை (முன் மற்றும் பின்) விதை தர தொழில்நுட்பம். அகில உலக விதை வாணிபம்.

விதைகளை சோதனை செய்ய, பயிற்சி பெற, ஏற்றுமதி ஆலோசனை பெற, தமிழக விவசாயிகள் இந்நிலையத்தை அணுகலாம். ஒரே மாதிரியான, தரமான விதைகளை தயாரித்து, அதன் மூலம் உற்பத்தியை பெருக்குவதே இந்நிலைய நோக்கமாகும். முதலில் அனுமதி பெற்று நேரில் சென்று பயிற்சியும், ஆலோசனையும் பெற்று பயன் பெறலாம்.

முழு விபரம் பெற, பயிற்சி பெற:
Sri R.K.Trivedi, Director, National Seed Research and Training Centre, Govt. of India, G.T.Road, Varanasi, Utterpradesh. Ph: 0542 237 0222. email : dirnsrtcup@nic.in, www.nsrtc.nic.in.

– எம்.ஞானசேகர்,
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர், 93807 55629.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!