வாடியில் சிக்காத வாடிப்பட்டி கொம்பன்

வாடிப்பட்டி கிராமத்தில் உள்ள எஸ்.பெருமாள்பட்டி எனும் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருபவர் திரு.அலெக்ஸ் பாண்டியன் எனும் இளைஞர். கப்பலூரில் பிறந்து வளர்ந்தாலும், வாடிப்பட்டி மீதான காதல் தனிக்கதை.

திரு.அலெக்ஸ் பாண்டியன் நம்மை தொடர்பு கொண்டு நான் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இரு ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகின்றேன். அதில் ஒரு காளையின் பெயர் கொம்பன். இதுவனை 11 வாடியில் அடைத்துள்ளேன். இதுவரை பிடிபடாத காளை. இவனை பதிவு செய்ய வருவீர்களா என்று கேட்டுக் கொண்டார்.

கரும்பு தின்ன கூலியா வேண்டும். நிச்சயமாக என்று கூறிய பதிலுக்கு விடையாக 29.07.2021 அன்று காலை வழக்கம்போல் 6 மணிக்கு புறப்பட்டு 7.30 மணிக்கு அங்கு சென்றோம். நாங்கள் வாடிப்பட்டி மாதா கோவில் எதிர்புறம் காத்திருந்தோம், சற்று நேரத்தில் அங்கு வந்த அவரது தம்பி நம்மை அழைத்துச் சென்றார். ரயில் தண்டவாளங்களுக்கு அடியில், ஏதோ சுரங்கத்தை கடந்ததுபோல், தாண்டிச் சென்றோம். அதை தாண்டியதும், எஸ்.பெருமாள்பட்டி குளுமையாக இருந்தது. நிலக்கடலை சாகுபடியும், கொய்யா சாகுபடியும் நிறைந்த விவசாயப் பகுதி. செம்மறி, வெள்ளாடுகள், கோழிகள் என எல்லாமே நம்மை அன்புடன் வரவேற்றன.

நாம் சென்றவுடன் திரு.அலெக்ஸ் பாண்டியன் அன்புடன், ரமேஸ் அண்ணே வாங்க என்று அழைத்தார். அடுத்த கனத்தில், மரியாதை செய்ய பொன்னாடையை கையில் எடுத்துக் கொண்டார். நாம் எவ்வளவோ கூறியும், எங்கள் ஊருக்கு வந்து இருக்கீங்க சின்ன மரியாதை என்றார். தட்டிக்கழிக்க முடியவில்லை ஏற்றுக் கொண்டோம். அந்த புகைப்படத்தை வீடியாவில் முதலில் பதிவு செய்துள்ளேன். இது எங்களது பணிக்கு கிடைத்த முதல் மரியாதையாக கருதுகின்றோம். இந்த பெருமை எனது தம்பி ராஜ் குமாருக்கும் (கேமரமேன்) சேரும்.

பின், தேனீர் அருந்திவிட்டு, தனது அண்ணன், தம்பி மற்றும் குடும்பத்தினரை அறிமுகம் பிறகு, தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைகள் குறித்து விரிவாக தெரிவித்தார். பேட்டியை எடுக்க அதற்கான இடத்தை தேடிபிடித்து, பதிவு செய்ய ஆரம்பித்தோம். திரு.அலெக்ஸ் பாண்டியன் எதார்த்தமான பேச்சு, என்னை கவர்ந்தது. நிச்சயமாக உங்களையும் அவரது பேச்சு கவரும் என்று நம்புகின்றேன்.

அவரது அனுபவம் மற்றும் தான் வாங்கி வளர்த்து வரும் காளை எங்கிருந்து ? எப்படி? வளர்க்கப்படுகிறது என்பது குறித்தும், வாடியில் அவிழ்த்த அனுபவம் குறித்தும், பழனி நெய்க்காரப்பட்டியில் துள்ளிக் குதித்து பாய்ந்து தங்களது குடும்பத்திற்கு பெயர் வாங்கிக் கொடுத்த கொம்பன் காளை பற்றியும் முழுமையாக பேசினார்.

அதேபோல் அடுத்தாண்டில், முதன் முதலாக களத்தில் இறங்க காத்திருக்கும் (2022) தான் கன்றிலிருந்து வளர்த்து வரும் விருமாண்டி காளை குறித்தும் பகிர்ந்தார் திரு.அலெக்ஸ் பாண்டியன். வீடியோ பதிவு முடிந்த உடன் வீடியோவுக்கு தேவையான பின்புலக் காட்சிகளை பதிவு செய்தோம். நாங்கள் சென்ற நேரத்தில் கொம்பன் சாந்தமாக இருந்தான். கோவம் என்பதே வரவில்லை. விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு அன்றைக்கு இல்லை. சில முயற்சிகளுக்கு பிறகு, விளையாட ஆரம்பித்தான். ஆனாலும் அவனது மன நிலை கருதி நாங்கள் போதும் என்று, வேறு காட்சிகளை பதிவு செய்தோம்.

திரு.அலெக்ஸ் பாண்டியன் அவசரமாக இருப்பதுபோல் தெரிந்தது. அதன் பிறகுதான் எங்களுக்கு புரிந்தது. அண்ணே வேலைக்கு நேரம் ஆயிருச்சு கிளம்பனும் என்றார். 9.30 மணிக்கு அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், அவசர அவசரமாக நம்மை விட்டு பிரிய மனமில்லாமல் கிளம்பிச் சென்றார்.

வாடிப்பட்டியில் இன்னமும் நிறைய எடுக்க வேண்டியது இருக்கு அண்ணே, தொடர்ந்து வாருங்கள் என்று கூறிவிட்டு, சிட்டாய் பறந்து சென்றார். அதுவேறு ஒன்றுமில்லை. சிட்டு என்று எல்லோராலும் செல்லமாக அழைக்க கூடிய காளை ஒன்று உள்ளது. அடுத்த முறை அதை கட்டாயம் பதிவு செய்ய வாருவோம் என்ற நம்பிக்கையோடு, நாங்கள் அங்கிருந்து மதுரைக்கு கிளம்பினோம்.

வரும் வழியில் நமது நேயர் தனக்கன் குளத்தில் உள்ள கருப்பன் சாமி மாட்டினை எடுங்கள் என்று கூறியது நினைவில் வர, அங்கு சென்று அதுகுறித்து விசாரித்து தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டோம். அநேகமாக அடுத்த ஜல்லிக்கட்டு வீடிேயா பதிவுக்கு அங்கு செல்லலாம் என்று நினைக்கின்றேன்.

அதற்கு முன்பு மதுரை அருகில் கிடைமாடு போடப்பட்டிருக்கும் இடம் குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளதால். நாளை மனப்பாறை கிடைமாடு குறித்த பதிவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம். அந்த பயண அனுபவத்துடன் நாளை உங்களை சந்திக்கின்றேன். அதுவரை காத்திருங்கள்.நன்றிகள்.
________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whats app)Hello Madurai Raj – 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
#jallikattu #manjuvirattu #rekalarace #official #tamil #tamilanda #pollachi #kaalai #tamilnadu #sevalsandai #jallikattulovers #madurai #reklarace #nature #seval #instagram #trending #coimbatore #tamilan #tamilculture #thala #jallikattuforever #kattuseval #savenativebreeds #thalapathy #photography #chennai #sivagangai #kongu #bhfyp

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்