வீடியோக்கள்

ரேக்ளா மாடுகளுக்கு பால் கொடுக்கும் ரகசியம்

The secret of giving milk to Rekla cows | Tamil Vivasayam

தமிழ் விவசாயம் நேயர்கள் அனைவருக்கும் அன்பாக வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மூன்று தலைமுறைகளாக ரேக்ளா ரேஸ் மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுவரும் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த நகை கடை முருகன் அவர்களிடம் ரேஸ் மாடுகள் வளர்ப்பு மற்றும் பந்தயம் குறித்த வீடியோ ஒன்று பதிவு செய்தோம். அந்த வீடியோவுக்கான லிங் கீழே கொடுத்துள்ளோம்.

பந்தய மாடுகள் குறித்து நாங்கள் அங்கு காட்சி பதிவு செய்தபோது, அவரின் பந்தய மாடுகளுக்கு சுடச்சுட கரந்த பால் வித்தியாசமாக குழந்தைக்கு பீடிங் பாட்டிலில் கொடுப்பதுபோல் கொடுக்கப்பட்டது. அதை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு, ஏன் ? எதற்காக ? என்று நாங்க கேட்க, அதைப் பற்றி அவர் கூறிய விசயங்கள் எங்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பொதுவாக பந்தய மாடுகள் வளர்ப்பவர்கள் எல்லோரும், அவர்கள் வளர்க்கும் பந்தய மாடுகளுக்கு தினமும் 1 லிட்டர் பால் கொடுப்பது வழக்கம். முதலில் பால் கொடுக்கும்போது மாடுகள் கக்கி விடும், பிறகு பழக்கமான பின்பு குடித்து விடும். மாடுகளுடன் பழக்கமானவர் பால் கொடுத்தால் எளிதாக குடித்துவிடும். புதிய ஆட்கள் கொடுத்தால் கொஞ்சம் மிரட்சி அடையும். ஆனாலும் பாலை குடித்துவிடும்.

பந்தய மாடுகள் வளர்ப்பவர்கள் இதற்கென ஒரு பசு மாட்டை ஒதுக்கி அதன் பாலை கொடுப்பார்கள். அதுவும் நாட்டு மாட்டு பால் கொடுத்தால் இதில் கூடுதல் பலன் கிடைக்கும். ஆனால், பசு மாடுகள் வளர்க்க இயலாதவர்கள் பாக்கெட் பால் கொடுக்கின்றனர்.

ஒரு மாட்டிற்கு தினமும் ஒரு லிட்டர் கொடுக்கப்படுகிறது. ஒரு லிட்டருக்கு மேல் கொடுப்பதில்லை. இந்த பால் மாட்டிற்கு காலை 12 மணிக்குள் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் கொடுக்கும் பழக்கம் கிடைக்காது. அப்படிக் கொடுத்தாலும் அதன் முழு பலன் கிடைக்காது.

ஏன் தினமும் பால் கொடுக்கப்படுகிறது என்றால், மாடுகள் ரேஸ்க்கு போகும்போது, நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக சத்தான உணவுகள் கொடுக்கப்படுகிறது. அப்படி கொடுக்கப்படும் சத்தான உணவுகள் கொழுப்பாக மாறிவிடும். இப்படி அதிகப்படியாக மாடுகளின் உடலில் சேர்ந்த கொழுப்பினை கரைக்க இயற்கையான சற்று காட்டமான மருந்துகள் கொடுப்பது வழக்கம்.

அப்படி மருந்துகள் கொடுக்கும் பொழுது மாடுகளின் வயிற்றில் புண்கள் ஏற்படும். அந்த புண்களை ஆற்றும் சக்தி மாட்டு பாலுக்கு இருப்பதால், தினமும் ஒரு லிட்டர் ஒரு மாட்டிற்கு கொடுக்கப்படுகிறது. மருந்து கொடுக்கும் காலத்தில், மாடுகளுக்கு ஒரு நாள் பால் கொடுக்கவில்லை என்றால், மறு நாள் அது தெரிந்துவிடும். ஆதலால் ரேஸ் மாடு வளர்ப்பவர்கள் அனைவரும் தினமும் பால் கொடுப்பார்கள். மேலும் இந்த பால், மாடுகளுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும்.

அதேபோல் பந்தயம் செல்வதற்கு மூன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். பந்தயம் ஓடி வந்த பிறகு மீண்டும் தொடர்ச்சியாக பால் கொடுக்கப்படும். பந்தயம் இல்லாத காலத்திலும் சரி, தினசரி ஒரு லிட்டர் பால் கொடுப்பது வழக்கமாக நடந்து கொண்டே இருக்கும்.

முடிந்த வரை பாக்கெட் பாலை தவிர்த்து, நாட்டு மாட்டு பால் கொடுத்தால் அதற்கான பலனை பந்தயத்தில் நிச்சயமாக காணலாம். நான் 10 ஆண்டுகளாக இந்த மாடுகளுக்கு தினமும் இப்படி பால் கொடுத்து வருகின்றேன் என்றார் நகை கடை முருகன் நகைத்துக் கொண்டே.

பந்தய மாடுகளுக்கு பால் கொடுப்பதில் இவ்வளவு விசயம் உள்ளதா ? என்று உங்களைப் போல் நாங்களும் மலைத்துப்போய், மாடுகள் அழகாய் பாலைக் குடிக்கும் காட்சியைப் பார்த்து ரசித்தோம். மீண்டும் இதுபோல் ஒரு அரிய தகவல்களுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது ஹலோ மதுரை ரமேஷ். மறக்காமல் நம்ம சேனலை சப்கிபைர் செய்து, பெல் பட்டனை கிளிக் செய்து எங்களை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் கருத்தையும் கமென்டில் பதிவு செய்யுங்கள். நன்றிகள். வணக்கம்.

ரேக்ளா ரேஸ் நகை கடை முருகன் | ரேக்ளா பந்தய மாடு வளர்ப்பு வீடியோ லிங்க் :
https://www.youtube.com/watch?v=KpEhB…
________________________________________________________

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!