முனியாண்டி அய்யாவின் முரட்டு வேட்டை நாய்கள் | பகுதி 02

தமிழ் விவசாயம் நேயர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நாட்டு நாய்குறித்து நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்கப்போவது, கன்னி நாய்களுக்காக கல்யாணம் செய்யாத முனியாண்டி அய்யாவை பற்றித்தான். இவரிடம் இருக்கும் வேட்டை நாய்கள் அத்தனையும் முரட்டுத்தனமானவைகள்.

வேட்டை நாய்கள் வளர்ப்பில் 35 ஆண்டுகள் அனுபவமுள்ள முனியாண்டி அய்யா அவர்கள் தனது அனுபவத்தில் 300க்கும் மேற்பட்ட வேட்டை நாய்களை வளர்த்துள்ளார். விருதுநகர், அருப்புக் கோட்டை ஆகிய இரண்டு வழியாகவும் இவர் வசிக்கும் பாப்பாக்குடி எனும் கிராமத்திற்கு வரலாம். மிகச் சிறிய கிராமம்தான். 50 குடும்பங்கள் இங்கு இருந்தாலே ஆச்சர்யம். சுற்றிலும் விவசாயப் பகுதியாகும்.

அய்யா பேசிய பேட்டி ஒன்று முன்னதாக பதிவு செய்துள்ளோம். அந்த வீடியோவிற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அந்த வீடியோவின் லிங்

https://www.youtube.com/watch?v=rGwuI…

பிறகு ஏன் இந்த வீடியோ என்றால் அந்த வீடியோவில் அய்யாவின் நாய்கள் மற்றும் குட்டிகளை முழுமையாக காட்ட இயலவில்லை. ஆதலால் இதில் அவரது நாய்களின் வீடியோக்களை பதிவு செய்துள்ளோம்.

தான் வளர்க்கும் நாய்களுக்கு பல முறை மருந்து வைத்து கொல்லப்பட்டுள்ளது. அதை எல்லாம் தாண்டி இன்றுவரை அய்யா தொடர்ச்சியாக வேட்டை நாய்களை வளர்த்து வருகின்றார். அவருக்கு காலை பொழுது விடிவதும், மாலை பொழுது சாய்வதும் அவர் வளர்க்கும் நாய்களுடன்தான். எப்பொழுதும் அவரைச் சுற்றி குறைந்த பட்சம் 5 நாய்களாவது இருக்கும். அவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து செல்வது வழக்கம்.

அய்யா தோட்டத்தில் இருந்தபடி ஒரு விசில் அடித்தால் போதும், ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் அவரது நாய்கள் அந்த விசில் சத்தத்தை கேட்டவுடன் ஓடி வந்துவிடும். விவசாய வேலைக்கு செல்வதுண்டு. அப்படிச் சென்ற பணத்தை இந்த நாய்களுக்குத்தான் செலவு செய்கின்றார். குட்டிகளுக்கு போதுமான அளவு பால் வாங்கிக் கொடுப்பதுவம், நாய்களுக்குத் தேவையான உணவுகள் வழங்குவதும் இவரது அன்றாட பணி.

இவர் விழித்திருக்கும் வரை நாய்கள் குரைக்க மட்டுமே செய்யும். தூங்கிவிட்டர்ல போதும், காவலுக்கு ஒட்டு மொத்தமாக சேர்ந்து முன்னாடி நிற்கும். வேற்று நபர்களின் காலடி ஓசை கேட்டாலே போதும், குரைத்து கடிக்க தாயாராகி விடும். ஆதலால் அய்யா நிம்மதியாக தூங்குவது வழக்கம்.

அதேபோல், இவர் தனது குட்டிகளை ரூ.5000 முதல் ரூ.7500 வரை விற்பனை செய்கின்றார். அந்த பணத்தையும் நாய்களுக்கே செலவு செய்கின்றார். மேலும், இவர் உயரமான நாய்கள் வைத்திருப்பதில்லை. நடுத்தரமான நாய்களே வைத்துள்ளார். நாங்கள் பார்த்த வரை ஒரு கன்னி நாய் மட்டும் 28 இன்ஞ் உயரத்தில் இருந்தது. மற்ற நாய்கள் அனைத்தும் 24 முதல் 25 இன்ஞ் உயரத்தில் இருந்தது.

கல்யாணம் செய்யாமல், தனது வாழ்நாளை வேட்டை நாய்களுக்காகவே வளர்த்து வரும் இவரது நாய்கள் அத்தனையும் சற்று முரட்டுத்தனமானவைதான். அதே நேரத்தில் பழகிவிட்டால் போதும், அது தன் பாசத்தை எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் நன்றி மறவாமல் வாலை ஆட்டி, நாவால் நீவி கொஞ்சி விளையாடும். அய்யாவைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முதலாவதாக பதிவு செய்துள்ள வீடியோவைப் பாருங்கள். அங்கில்லாத, அவர் வளர்க்கும் நாய்கள் மற்றும் குட்டிகளின் வீடியோவை இங்கு கண்டு ரசியுங்கள். நன்றிகள்.
________________________________________________________
ஐயா முனியாண்டி தொலைபேசி எண்:
80981 83226, 91590 24817
________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. ( Whats app )
Hello Madurai Raj – 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
#dogs #dogsofinstagram #dog #dogstagram #puppy #instadog #doglover #dogoftheday #doglovers #pets #doglife #love #puppylove #pet #puppies #cute #dogsofinsta #puppiesofinstagram #instagram #of #doggo #petsofinstagram #ilovemydog #dogslife #animals #cats #petstagram #doglove #adoptdontshop #bhfyp

#dogphotography #dogsofinstaworld #dogsofig #doggy #lovedogs #instadogs #instagood #nature #k #rescuedog #perros #photooftheday #animal #cat #hund #bhfyp #labrador #puppylife #happydog #cutedog #pitbull #photography #goldenretriever #pup #hundeliebe #dogmom #cachorro #happy #feature #chihuahua

#indiandog #dogsofinstagram #dog #dogs #doglife #dogstagram #dogoftheday #doglovers #puppy #labrador #doglover #indiandogs #instadog #puppylove #dogsofinsta #pets #india #dogsofindia #puppiesofinstagram #adoptdontshop #desidog #doggo #goldenretriever

#cute #petsofinstagram #pettransport #chowchow #indiandogsofinstagram #lovedogs #dogfriendly #desidogsofinstagram #doglove #chowchowbrasil #goldenchow #doglifethor #cachorronapraia #dogtravels #travel #pettravel #traveldog #puppies #scotchthegoodboy #gopetfriendly #indianpets #dogtraveler #indianpariah #goldenchowchow #happydog #cutedogs #of #puppygram #wolfdog #streetdogs

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்