மாட்டுக் கொட்டகை வகைகளும், கன்றுகளுக்கு கொட்டகை அவசியமும்

கால்நடைகளைப் பராமரிக்க கொட்டகை அமைத்தல் மிக அவசியம் இல்லாவிடில் அவை திறந்த வெளியில் சென்று தேவையற்ற வற்றையும் உண்டு. சூழ்நிலைமாற்றத்தாலும் அவதியுறும். எனவே கொட்டகைப் பராமரிப்பு இன்றியமையததாகிறது. நம் நாட்டில் பொதுவாக இரண்டு விதப் பராமரிப்பின் கீழ் வளர்க்கப்படுகின்றன. அவை

திறந்த வெளி மேய்ச்சல் முறை தீவிர மற்றும் மிததீவிர முறை என மூன்று வகைகளாகும். இது அந்தந்த இடங்களின் தட்பவெப்பநிலையையும் பணவசதியையும் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

கொட்டகை அமைப்பு

கொட்டகையின் சுற்றுச்சுவர் நீள, அகல, உயரம் முறையே 5” அளவு இருக்க வேண்டும். தீவனம் பெட்டு ஒரு கால்நடைக்கு 2லிருந்து 21/2 அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும். தேவையான அளவு குடி தண்ணீர் அளிக்க 10” அளவு அகலமான தண்ணீர்த் தொட்டியில் அமைக்க வேண்டும். மேலும் தண்ணீர் தொட்டி தீவனத் தொட்டிக்கு அருகே அதிக நீர் சேதாரம் ஆகாமலும் இருக்க வேண்டும். அதைத்தாண்டி ஒரு திறந்த நடைப்பாதை 40” x 35”. 5” சுற்றளவுடன் ஒரு கதவுடன் இருக்க வேண்டும். தீவனம் உட்கொள்ளும்போது கால்நடைகள் வடக்கு நோக்கியவாறு இருத்தல் வேண்டும். கோடையில் குளிர்காற்று வீசும்போது சுற்றுச்சுவர் மாடுகளை குளிரிலிருந்து பாதுகாக்குமாறு அமைந்திருக்க வேண்டும்.

கன்றுகளுக்கான கொட்டகை

பசுக்கொட்டகையின் ஒரு பக்கத்தில் சுற்றுச் சுவருடன் கூடிய 10″ x 15″ அளவுள்ள கொட்டகை கன்றுகளைக்கென தனியாக அமைக்க வேண்டும். தேவையான அளவு இடவசதி கன்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப இருக்க வேண்டும். இதையடுத்து சுற்றுச்சுவருடன் கூடிய 20″ x 10″ திறந்தவெளி இருக்க வேண்டும். இதில் கன்றுகள் சுதந்திரமாக உலவ விடுதல் நலம்.

இதேபோன்று கன்று மற்றும் மாடுகளுக்கென 50″ x 50″ பரப்பளவுள்ள கொட்டகை தேவை. இதில் 20 மாடுகள் வரை வளர்க்கலாம். இதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லையெனில் நமது வசதிக்கேற்ப சாதாரண கட்சா (katcha) சுற்றுச் சுவர் முறையில் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டி சிமென்டினால் போடப்படுவதே சிறந்தது.

மரபு வழி தானியக் களஞ்சியம்

இந்த முறை தானியக்கடங்குகள் சற்று விலை உயரந்தது. மேலும் இதன் பயன்பாடு பரவலாகக் குறநை்து வருகிறது. எனினும் இம்முறையில் கால்நடைகள் மோசமான தட்பவெப்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுகிறது.

ஒரு கால்நடைப் பண்ணையில் கீழ்க்காணும் கிடங்குகள் அவசியம்.
 • மாட்டுக் கொட்டகை
 • கன்று ஈனும் கொட்டகை
 • தனிக் கொட்டகை/நோய்ப் பராமரிப்புக் கொட்டகை
 • இளங்கன்று கொட்டகை
 • எருது கொட்டகை

மேலும் பசுக்களின் பால் உற்பத்தித் திறன் வயது மற்றும் அவைகளின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி அவற்றைத் தனித்தனிக் கொட்டகைகள் அடைப்பது எளிதான பராமரிப்பிற்கு உதவுகிறது.

மாட்டுக் கொட்டகை

பால் தரும் பசுக்களைத் தனிக் கொட்டகையில் நன்கு பராமரிக்க வேண்டும். பசுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஒரே வரிசையிலும் எண்ணிக்கை 10ற்கும் மேற்பட்டதாக இருந்தால் இரண்டு வரிசையாகவும் அமைக்கலாம்.

பொதுவாக ஒரு கொட்டகையில் 80லிருந்து 100க்குள் மட்டுமே பசுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். பால் பண்ணைகளில் மாடுகள் இரண்டு வரிசையாகக் கட்டப்படும்போது அவைகளின் முகங்கள் ஒன்றையொன்று பார்த்தவாறோ அல்லது (head to head) அல்லது பின் பாகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறோ (அருகருகில்) (tail tp tail) அமைக்கலாம்.

முகப்புறம் அருகருகே உள்ள முறையின் பயன்கள்

பசுக்கள் இவ்வாறு அமைந்திருப்பதன் மூலம் சுற்றுப்புறத்தையும் தீவனமிடுவோரையும் காணமுடிகிறது. இந்த முறையில் பசுக்கள் எளிதாக உணரும். சூரிய ஒளியானது அதன் வடிகால் பகுதியில் தேவையான அளவு விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. பசுக்களுக்குத் தீவனம் அளித்தல் எளிது. குறுகிய கொட்டகைகளுக்கு இம்முறை சிறந்தது.

வால்புறம் அருகே உள்ள முறையின் சிறப்பம்சங்கள்

சாதாரணமாக ஒரு பண்ணைக்கு வருடத்திற்கு 125லிருந்து 150 ஆட்சுலி தேவைப்படுகிறது. ஒரு ஆராய்ச்சியின் முடிவின்படி கறவை மாடுகளின் பராமரிப்பில் 40 சதவீத நேரம் அதன் முன் பாகத்திலும் 60% நேரம் பின் பகுதியிலும் செலவிடப்படுகிறது. எனவே இந்த முறையில் ஆட்களின் நேர விரயம் குறைக்கப்படுகின்றது.

பசுவை சுத்தப்படுத்தி, பால் கறப்பது இந்த முறையில் எளிதாகின்றது. மாடுகளிடையே நோய் பரவுவது இம்முறையில் குறைவாக இருக்கும். வெளிப்பக்கத்திலிருந்து தூய காற்று கிடைக்கிறது. ஏதேனும் நோய் பரவினாலோ அல்லது பசுக்களில் மாற்றம் தெரிந்தாலோ எளிதில் கண்டு பராமரிக்க இலகுவான முறை.

தரைப்பகுதி

கொட்டகையின் உட்பக்கத் தரையானது வழுக்கக் கூடியதாக இல்லாமல் அதேநேரம் ஈரத்தை உறிஞ்சாமல் எளிதில் உலரக் கூடியதாக இருத்தல் வேண்டும். நீண்ட திண்டு சிமென்ட் கான்கிரீட் தளங்கள் மிகவும் ஏற்றவை.

சுவர்கள் மற்றும் கூரைகள்

கொட்டகையின் உட்புரச் சுவர் சீராக சிமென்ட் கொண்டு பூசப்பட்டதாக இருக்க வேண்டும். அது வெளிப்புற தூசிகளையோ அல்லது ஈரப்பதத்தையோ உள்ளே அனுமதிக்காதவாறு இருக்க வேண்டும். 4 லிருந்து 5 அடி வரை உயரமுள்ள குட்டையான சுற்றுச்சுவரும் கூரையானது இரும்புத் துண்களால் தாங்கப்பெருமாறு அமைத்தால் தூண்களின் இடைவெளியில் காற்று தாங்கப்பெருமாறு ஏற்றதாக இருக்கும்.

கூரை

கூரை ஓடுகள் அல்லது ஏஸ்பஸ்டாஸ் (asbestos) கொண்டு வேயப்படுதல் நலம். அல்லது அலுமினியம் பூசப்பட்ட இரும்புத் தகரங்களையும் பயன்படுத்தலாம். வெறும் இரும்புத் தகரங்களை விட இது சூரிய ஒளியை எதிரொளித்து கொட்டகையின் உள்ளே சீரான வெப்பத்தைத் தருகிறது. 8 அடி உயரமும் பக்கங்கள் 15 அடி அளவுள்ள கொட்டகையில் காற்று போதுமான அளவு கிடைக்கும். ஒரு கறவை மாட்டிற்கு 800 கியூபிக் அடி அளவு காற்றானது தேவைப்படுகிறது.

தீவனத்தொட்டி

கான்கிரீட் சிமென்ட் தளத்தாலான வெளியேற்றும் அமைப்புடன் கூடிய தீவனத் தொட்டிக்குள் பராமரிப்புக்கு ஏற்றவையாக இருக்கும். சின்ன தொட்டியாக இருந்தால் 1்-4் உயரமும் பெரியதெனில் 6்-9் உயரமும் போதுமானது. பசுவைப் பொறுத்தவரை சின்ன தொட்டிகளே (low front manger) போதுமானது என்றாலும் பெரியதாக இருந்தால் தீவனம் அதிகஅளவு வீணாகாமல் தடுக்கலாம்.

கழிவு நீர் வடிகால்

2” அகலமுள்ள சாணி, மற்றும் சிறுநீர் எளிதில் வந்து விழுமாறு தேவையான இறக்கத்துடன் இருக்க வேண்டும். அதேசமயம் மாட்டின் பின் சற்று இடைவெளியுடன் எளிதாக கழிவுகள் வெளியேறுமாறு அமைத்தல் அவசியம்.

கதவுகள்

கதவுகள் திறக்கும்போது சுவர் வரை விரிந்தி திறக்குமாறு இருக்க வேண்டும். மாடுகள் ஒரு வரிசைமுறையில் கட்டப்பட்டிருப்பின் கதவு அளவு 5” அகலம் மற்றும் 7” உயரம் கொண்டதாகவும் அதுவே இரு வரிசையெனில் அகலம் 8” ற்குக் குறைவாக இருக்க கூடாது.

கன்றுஈனும் இடம்

பால் கறக்கும் இடத்தில் கன்று ஈன அனுமதித்தல் மிகவும் தவறு. கன்று ஈனுவதற்கென்று சுற்றுச் சுவருடன் கூடிய நல்ல காற்றோட்டமான படுக்கை வசதியுடன் கூடிய தனியறை இருப்பது அவசியம். அது 100 லிருந்து 150 சதுர அடி இருக்க வேண்டும்.

நோய் பராமரிப்புக் கொட்டகை

ஏதேனும் நோய் தாக்கினால் தாக்கப்பட்ட மாடுகளை தனித்தனிக் கொட்டகையில் மற்ற மாடுகளிலிருந்து பிரித்து வைக்க வேண்டும். அதற்கென 150 சதுர அடிகொண்ட கொட்டில்கள் அமைத்தல் நலம். இக்கொட்டில்கள் மாட்டுக் கொட்டகையிலிருந்து சிறிது தொலைவில் அமைத்தல் வேண்டும். ஒவ்வொரு கொட்டிலும் சரியான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும்.

இளங்கன்றுக் கொட்டில்கள்

இளங்கன்றுகளுக்கு நல்ல சுத்தமான காற்று மிக அவசியம். எனவே அவற்றை மாட்டுக் கொட்டகையில் வளர்க்காமல் தனி கொட்டிலில் நல்ல வெளிச்சமும் சுகாதாரமான காற்றும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். மேலும் சிறந்த பாரமரிப்பிற்கு கன்றுகளை

 • பிறந்த இளங்கன்றுகள்
 • காளைக்கன்றுகள்
 • கிடாரி (பெண்) கன்றுகள்

என வகைப்படுத்தி வேறுவேறு கொட்டிலில் வளர்த்தல் நலம். கன்றுக் கொட்டில் தாய் மாடுகளின் கொட்டகை அருகே இருக்க வேண்டும். ஒவ்வொரு கன்றுக் கொட்டிலின் அருகே ஒரு திறந்த புல்வெளி இருத்தல் நலம். குறைந்தது 100 ச.அடியாவது 10 கன்றுகளுக்குத் தேவை. ஒரு வயதிற்குட்பட்ட கன்றுகளை 3 பிரிவாகப் பிரித்து இடங்களை ஒதுக்கலாம்.

 • 20-25 ச.அடி மூன்று மாதம் வயதுள்ள கன்றுகளுக்கு
 • 25-30 ச.அடி 3 லிருந்து 6 மாத வயதுள்ள கன்றுகளுக்கு
 • 30-40 ச.அடி 6 லிருந்து 12 மாத வயதுள்ள கன்றுகளுக்கு
 • 40-45 ச.அடி ஒரு வருடத்திற்குமேற்பட்ட கன்றுகளுக்கு

இவ்வாறு பிரித்து கன்றுகளுக்கு புல்வெளியில் இடமளிப்பதன் மூலம் கன்றுகள் சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வளரும். புல்வெளியில் அங்கங்கே தண்ணீர் தொட்டிகள் அமைத்தால் சுத்தமான நீரையும் கன்றுகளுக்கு அளிக்க முடியும்.

எருதுகளின் கொட்டில்கள்

எருதுக் கொட்டில் அமைக்கும்போது கவனிக்க வேண்டியது கையாள்வதற்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். கரடுமுரடான தரையில் எருதுகளின் கால்கள் நகங்கள் கீரி காயம் உண்டாவதுடன் அதன் இனவிருத்தத் திறனும் குறைந்துவிடும். எனவே கான்கிரீட் சிமென்ட் தளத்தாலான சமமாண தரை அவசியம். மேலும் 15் / 10் பரிமானம் கொண்ட நல்ல காற்று மற்றும் வெளிச்சத்துடன் கூடிய அறையில் தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகள் இருக்க வேண்டும்.

முடிந்தவரை எருதுக்கு தீவனம் வெளியில் இருந்து வழங்குமாறு கொட்டில் அமைக்கவேண்டும். சுற்றுச் சுவரானது எருது தாண்ட முடியாத அளவு 2” அளவும் உள்ளே எருது சுதந்திரமாக உலவுமாறு இருக்க வேண்டும். அதேசமயம் எருது மற்ற கால்நடைகளைப் பார்க்க இயலுமாறு அமைத்தல் அதன் தனிமையைக் குறைக்க உதவும். இனவிருத்தி செய்யும் இடத்திற்க்குப் பக்கத்தில் அமைத்தல் சிறந்தது (service crate).

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்