தோட்டக்கலை

மதுரை விவசாயிகளுக்கு தோட்டக்கலை செடிகள் விநியோகம்

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் (டான்ஹோடா) 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும் 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன.

இப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளுண், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மரவேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி மற்றும் அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செயயப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவுச்செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவுச்செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்தும் வழங்கப்படும்.

அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச்செடிகள் ரூ. 5 மதுல் ரூ. 10 வரையிலும் வேம்பு, புங்கம் போன்ற மரச்சிடகள் ரூ.10 முதல் ரூ. 20 வரெயிலும், பழச்சடிகள் ரூ. 8 முதல் ரூ. 60 வரையிலும், மலர்ச்செடிகள் ரூ.8 முதல் ரூ. 30 வரையிலும் விற்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள பூஞ்சுத்தி அரசு தோட்டக்கலைப் பண்ணையின் மூலம் இதுவரை இந்து ஆண்டு மட்டும் 11,560 மரக்கன்றுகள், பழக்கன்றுகள் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டகலை உதவி இயக்குனர் அலுவலைகத்தையோ அல்லது மாவட்ட அளவிலாந தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தையோ அணுகி இத்திட்டத்தின் கீழ் பயனடைய முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இது தவிர இ-த்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை கீழ்கண்ட முகவரிகளில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இணையதளம்: http://tnhorticulture.tn.gov.in/horti
கட்டணமில்லா தொலைபேசி எண் 18004254444
தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண். 0452-2432351
தொடர்பு கொள்ள வேண்டிய பண்ணை மேலாளர் அலைபேசி எண்.

திரு. ராஜசேகரன்
பண்ணை மேலாளர்
7010971163, 9791309415

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!