மதுரை பேச்சியம்மன் படித்துறை பெட்ஸ் சந்தை

ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மதுரையில் ஞாயிற்றுக் கிழமை சந்தை என்றால் அதற்கென ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். மற்ற நாட்கைள விட ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் மட்டும் தமிழ் சங்கம் ரோடு முழுவதும் களை கட்டும் இந்த சந்தையில் அனைத்துவிதமான பொருட்களும் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழ் சங்கம் ரோடு முழுவதும் அன்றைய தினம் சாலையின் இரு பக்கமும் பொருட்கள் குவிந்து கிடக்கும். இதற்கு இடையில் பெட்ஸ் விற்பனையும் முன்பு நடைபெற்றுள்ளது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ரோட்டில் விற்பனை செய்யப்படும் பெட்ஸ் கூட்டத்தால், ஞாயிற்றுக்கிழமை சந்தையின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், சாலையில் போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதாகவும், நாட்டுச் சேவல்களை மோதவிடும் நிகழ்வு நடப்பதாகவும் வந்த தகவலின் அடிப்படையில், பெட்ஸ் விற்பனைக்கு காவல்துறை கிடுக்குபிடிபோட்டது. இதனால் தற்காலிகமாக பெட்ஸ் விற்பனை அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது.

அதன்பிறகே பேச்சியம்மன் படித்துறை ஆத்து பாலத்தில் பெட்ஸ் விற்பனை நடத்த காவலடதுறையிடம் உரிய அனுமதி பெற்று, நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அன்று முதல் இன்று வரை இந்த படித்துறை பகுதியில் பெட்ஸ் விற்பனை வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்று வருகின்றது என்று இங்குள்ளவர்கள் கூறினார்கள்.

லாக்டவுன் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக இந்த சந்தை இயங்காமல் இருந்து வந்த நிலையில், லாக்டவுன் தளர்வால், மீண்டும் துவங்கியுள்ளது. நாமும் இந்த சந்தையில் என்னென்ன விற்பனை செய்யப்படுகிறது என்ற ஆவலுடன் அதைப் பார்க்கச் சென்றோம். நாம் சென்றபோது, படித்துறை முழுவதும் கூட்டம் நிறைந்து வழிந்தது. அவரவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெட்ஸ்களை கையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். பல தரபட்ட வயதினரும் இங்கு விற்பனை செய்வதை காண முடிந்தது.

இந்த சந்தையில் பெட்ஸ் வாங்க, மதுரையைச் சுற்றியுள்ள மேலூர், சிவகங்கை, தேனி பகுதிகள் உள்பட பல ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வருவதாக இங்கு வியாபாரம் செய்பவர் நம்மிடம் தெரிவித்தார். அவர் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மேலூரில் இருந்து இங்கு வந்து தான் வளர்த்து வரும் புறாக்களை விற்பனை செய்வதாக நம்மிடம் கூறினார்.

மேலும், இங்கு, நாட்டு இன சேவல், நாட்டு கோழிகள், முயல், புறா, வாத்து, நாய் குட்டி, பல்வேறு வடிவங்களில் கூண்டுகள், லவ்பேட்ஸ், ஃபின்ச்சஸ், வாத்து, கலர் மீன்கள் மற்றும் அவைகளுக்குத் தேவையான பொருட்கள் என அனைத்தும் சந்தையில் காணப்பட்டது. நாம் சென்ற தருணத்தில் புறாக்கள் மற்றும் நாட்டு சேவல்கள் அதிகமாக காணப்பட்டன. கூடுதலாக நாட்டுக் கோழி கறியும் விற்பனை செய்யப்பட்டது.

இங்கு ரூ.50 முதல் ரூ.5,000 வரையிலான பெட்ஸ் வியாபாரம் நடைபெறுகிறது. பெரும்பாலும் இந்த லாக்டவுனில் வீட்டில் வளர்த்த பெட்ஸ்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகளை மூன்று மணி நேரம் நடைபெறும் இச்சந்தையில் காணலாம். இப்பொழுது கூட்டம் குறைந்துவிட்டதாகவும், வியாபாரமும் குறைந்துவிட்டதாகவும், லாக்டவுனுக்கு முன்பு இன்றைய கூட்டம்போல் மூன்று மடங்கு இங்கு இருக்கும். அதேபோல் விற்பனையாளர்களும் 40 சதவீதம் பேர் மட்டுமே தற்போது வந்துள்ளதாக அங்கு விற்பனை செய்தவர்கள் கூறினர்.

கொரொனோ குறைந்து கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற சந்தைகள் தேவைதானா என்ற கேள்விக்குள், பெட்ஸ் வளர்ப்பாளர்கள் ஒவ்வொருவரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக மாறியிருப்பது உண்மைதான். நாங்கள் இன்றைக்கு மிகவும் கஷ்டப்படுகின்றோம். முன் இருந்த வேலையை விட்டுவிட்டு இப்பொழுது வீட்டில் இந்த வேலையை செய்கின்றோம் என்று ஒவ்வொரு விற்பனையாளரும் கூறும் பொழுது அவர்களின் தேவையை யார் பூர்த்தி செய்வது என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

இருந்தபோதும், நமது உயிர் பாதுகாப்பு கருதி முக கவசங்களை அணிவதும், சமூக இடைவெளியை மதிப்பதும் மட்டுமே நமது வியாபாரம் தொடர்ந்து நடத்த வழி வகுக்கும் என்பதை சொல்லிக் கொண்டு, வேறு ஒரு சந்தையில் உங்களை காணும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது, ஹலோ மதுரை ரமேஷ் நன்றி வணக்கம்.
________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்