மதுரையில் மூன்று தலைமுறைகளாய் ரேக்ளா வண்டி செய்யும் பட்டறை

மதுரை அழகர்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ள அப்பன்திருப்பதியில் மூன்று தலைமுறையாக தட்டு வண்டி, மாட்டு வண்டி, பந்தய வண்டி, கட்ட வண்டி ஆகியவை செய்துவரும் உர்திரு. கண்ணன் அவர்களை நோர்காணல் எடுக்கச் சென்றோம்.

முந்தைய நாள் மழை காரணமாக அழகர்கோவில் செல்லும் வழி எல்லாம் ஈராமாகவும், பச்சையாகவும் இருந்தது. அப்பன் திருப்பதியை அடைந்தவுடன் மாட்டு வண்டி செய்ரவங்க எங்க இருக்காங்க என்று விசாரிக்க, அதை தாண்டி வந்துடீங்க, வந்த வழியா போனீங்களா 5 கடைக்கு தள்ளி அந்த பட்டறை இருக்குப்பா என்றார் அந்த ஊர் மளிகை கடைக்காரர்.

அப்படி சென்றோம். அவர் சொன்னதுபோல் சொன்ன இடத்தில் புதிதாக செய்யப்பட்ட ரேக்ளா வண்டி ஒன்று நம்மை வரவேற்பதுபோல் இருந்தது. பழைய செம்மண் கட்டிடம், தாடியோடு சட்டையில்லாமல் அமர்ந்திருந்தார் திரு.கண்ணன் அவர்கள். நாங்கள் எங்களை அறிமுகம் செய்துவைத்தோம். சில உரையாடலுக்குப்பின் நேர்காணல் ஆரம்பமானது. அப்போது அவரது மனைவியும் உடன் இருந்தார்கள்.

அரை மணி நேரம் சில கேள்விகளை மட்டுமே நம்மால் கேட்க முடிந்தது. ஏனெனில் வண்டி மாடு குறித்து தெரிந்து கொள்ள ஏகப்பட்ட விசயம் இருக்கு. ஆதலால் அவரது 35 ஆண்டு கால அனுபவத்தையும், இந்த தொழில் நிலவரத்தையும் கேட்டு தெரிந்து கொண்டோம்.

நாங்கள் அங்கு என்னென்ன கேட்டோம் என்பது எல்லாம் மேலே வீடியோவில் உள்ளது. நேரலை முடிந்ததும், எங்களுக்கு தேவையான வீடியோக்களை வழக்கம்போல் பதிவு செய்து கொண்டு, நாங்களும் வண்டி அருகில் நின்றபடி புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.

ஒரு காலத்தில் ஓகோ என்று ஓடிய தொழில், இன்றைக்கு ஒரு சில ஆட்கள் மட்டுமே இதை பரம்பரயைாக செய்து வருகிறார்கள் என்பது மட்டும் எங்களுக்கு நன்றாக புரிந்தது. மதுரை வட்டாரத்தில் இவர்களது குடும்பத்ரைத தவிர வேறு யாருக்கும் இந்த தொழில் தெரியாது.

இவர்களின் அடுத்த தலைமுறையும் இந்த தொழிலை வேண்டாம் என ஒதுக்கும் நிலைக்கு வந்துவிட்டது பெரும் கவலை. இன்னும் 15 ஆண்டுகளில் இந்த தொழில் செய்பவர்கள் இல்லாமல் போனாலும் ஆச்சர்யம் இல்லை என்றார் திரு.கண்ணன்.

இந்த பேட்டியில் அண்ணன் திரு.கண்ணன் மிக எதார்த்தமாக பேசிய பேச்சு என்றபோதும், அவர் கூறிய இரண்டு வார்த்தைகள் ஆழமான கருத்து நிறைந்தது. ஒன்றுஇன்றைக்கு இருந்த இடத்தில் இருந்தே எல்லாம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். எதையும் தேடி அலைவதில்லை என்பதும், எதிர்காலத்தில் இதுவெல்லாம் பொருட்காட்சியில் மட்டுமே பார்க்கும் நிலை உருவாகும் என்று கூறியதுதான்.

வாகனங்கள் பெருக்கம், வண்டிமாடுகளின் தடங்களை அழித்துக் கொண்டே வருகிறது. காலம் காலமாக செய்து வந்த பழக்கங்கள் எல்லாம் நவீன உலகத்தின் காலுக்கடியில் நசுக்கப்படுகிறது. மாறிவரும் கால சுழற்சியில் மறைந்து வரும் சக்கரங்கள், காணாமல்போகும் காலம் கலிகாலம் என்ற கனத்த இதயத்தோடு அங்கிருந்து கிளம்பினோம். எனது பைக்கின் இரு சக்கரங்கள் பறந்தாலும் மனதிற்குள் வண்டி மாட்டுச் சக்கரங்கள் சுழன்று கொண்டே இருந்தது.

நாளை வேறு ஒரு பயண அனுபவத்தில் சந்திப்போம்.

நன்றிகள் !!

திரு.கண்ணன் தொலைபேசி எண்: 99528 74597

_________________________________________________________
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்