மண்ணுக்கும் உரமாகும் முள்ளங்கி பயிர்

முள்ளங்கி மனிதர்கள் விரும்பி உண்ணும் காய்கறிகளுள் ஒன்று. இதை உணவு பயிராக பயிரிடுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதே முள்ளங்கியை மண்ணுக்கும் உணவாக வளர்க்க முடியும் என்பது புதிய செய்தி அல்லவா? முள்ளங்கி மண்ணுக்கு உரமாகுவதோடு, அடுத்து வளரும் பயிருக்கு உழவாகி கால்நடைகளுக்கு தீவனமாகவும் ஆக உதவுகின்றது.

முள்ளங்கி

தமிழ தட்பவெப்பத்துக்கு ஏற்ற வகையில் வளரும் பெரும்பாலான பயிர்களைப் பற்றி தமிழக விவசாயிகள் அறிந்து இருப்பார்கள். ஆனால் முள்ளங்கியை மூடு பயிராக பயன்படுத்துவது உண்மையிலேயே நூதன முயற்சியாகும். முக்கிய பயிரை அறுவடை செய்து அடுத்த வருட பயிர் போடும் முன் முள்ளங்கியை மூடுபயிராக வளர்ப்பதன் மூலம் உழவுக்கும் (no tilage), அடுத்த பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான உணவை அளிக்கவும், மண்ணின் கரிம வளத்தை அதிகரிக்கவும், களையை கட்டுபடுத்தவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்

பயன்கள்

முள்ளங்கியின் ஆணி வேர் சுமார் 50 செமி நீளத்திற்கு வளரக்கூடியது. இது சாதாரண உழவு எந்திரம் மண்ணுக்கு கீழே ஊடுருவி செல்லும் ஆழத்தை விட அதிகம். இவ்வாறு ஆழமாக ஊடுருவி சென்று மண்ணுக்கு அடியில் இருக்கும் அனைத்து வகை சத்துக்களையும் எடுத்து முள்ளங்கி தண்டில் சேமிக்கிறது. இந்த முள்ளங்கி தண்டை மண்ணில் மக்க விடுவதன் மூலம் அடுத்து பயிரிடும் பயிர்களுக்கு தேவையான நேரத்தில் (முதல் 3 மாதங்களுக்கு) வேர் பகுதியிலேயே எளிதான உணவு கிடைக்கிறது.(Bio-Drilling) அவ்வாறு வேர் மற்றும் வேர் தண்டு மக்கும் போது காற்று மற்றும் நீர் ஊடுருவி செல்ல ஏதுவாக இருக்கிறது. முள்ளங்கி வளரும் போது தனது இலைகளால் பூமியின் மேல் பரப்பை மறைத்து விடுவதால் களை செடிகள் வளர்வது கட்டுப்படுத்தப்படும்.

முள்ளங்கி மக்கும் போது ஐசோதயோசயனேட் போன்ற குளுகோசினோலேட்குகள் வெளியாகிறது. அவை பயிருக்கு நோயை உருவாக்கும் நெமட்டோட் மற்றும் காளான்களை அழிக்கும் தன்மை உள்ளது. மக்கிய முள்ளங்கி அதிக அளவு மண்புழுக்களையும் நல்லது செய்யும் நுண்ணியிரிகளையும் கவர்ந்திழுக்கிறது. கால்நடைகளை இந்த முள்ளங்கியை மேயவிட்டு தீவனமாகவும் உபயோகப்படுத்தலாம். முள்ளங்கியோடு சில புல் வகைகளையும் கலந்து பயிரிட்டால் கால்நடைகளுக்கு நல்ல உணவாகும்

எப்படி பயன்படுத்துவது

கடுங்குளிர் வருவதற்கு 3 – 10 வாரம் முன் இந்த முள்ளங்கியை பயிரிட பரிந்துரைக்கிறார்கள். குளிர் காலம் வந்தவுடன் தானாகவே பயிர் இறந்துவிடும். அடுத்த வருடம் மார்ச் முதல் ஜூலை வரை மண்ணில் மக்கி அதிக சத்துக்களை அப்போது வளரும் முக்கியப்பயிருக்கு அளிக்கிறது. குளிர் இல்லாவிட்டால் கால்நடைகளை மேய விட்டோ, களைகொல்லி மூலமாகவோ, பயிரை அழித்துவிடலாம் இந்தியாவின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப முள்ளங்கியை எப்போது பயிட்டால் அடுத்த பயிருக்கு முழுமையாக பலன் கிடைக்கும். தற்போது இந்தியாவில் கால்நடைகள் குறைந்து விட்டதால் மண்வளம் காக்க சாணி எரு கிடைப்பது அறிதாகியுள்ளது. எனவே இயற்கையாக மண்வளம் காக்க உதவும் இது போன்ற தொழில்நுட்பங்கள் வரவேற்க தக்கவையே. அடுத்த கட்டுரையில் மரக்கரி கொண்டு எவ்வாறு மண்வளம் காக்கலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்