பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை

எந்த வகையான பூச்சி தாக்குதலினையும் எளிதான முறையில் கட்டுப்படுத்தும் வழி முறை அக்னி அஸ்திரம் பயன்படுத்துதல் ஆகும்.குறிப்பிட்ட இடைவெளியில் அக்னி அஸ்திரம் தெளித்தால் பூச்சி தாக்குதலில் இருந்து விடுபடும். நாட்டு பசுமாட்டு சிறுநீர், புகையிலை, பச்சை மிளகாய், வேம்பு இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்தநீர் தான் அக்னி அஸ்திரம்.

தேவையான பொருட்கள்

  1. புகையிலை – அரை கிலோ,
  2. பச்சை மிளகாய் – அரை கிலோ,
  3. பூண்டு – அரை கிலோ,
  4. வேம்பு இலை – 5 கிலோ
  5. பசுமாட்டு சிறுநீர் – 15 லிட்டர்

தயாரிக்கும் முறை

  • இதை நான்கு முறை அரைத்து கரைக்கவேண்டும்.
  • நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும்.
  • 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

பயன்படுத்தும் முறை, நன்மைகள்

100 லிட்டர், நீரில் 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு புச்சிகள் காணாமல் போய்விடும். பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் இதனை விவசாயிகள் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்