முக்கிய குறிப்புகள்வேளாண்மை

பூச்சிமருந்து பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை

Things to look out for when using pesticides

பூச்சி (அ) நோய் தாக்குதலை கண்காணித்து தேவைகேற்ப மருந்து தெளிக்கவும். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மட்டும் தெளிக்கவும். மருந்து கலன் மேல் உள்ள பரிந்துரைகளை கவனமாக பின்பற்றவும்.

பரிந்துரைக்கப்பட்ட அளவு மருந்து மற்றும் தெளிப்பு நீரை உபயோகிக்கவும். தெளிப்பான் மற்றும் தெளிப்பு முனைகளை சரியாக பராமரிக்கவும். கலக்கப்பட்ட மருந்தை உடனடியாக உபயோகிக்கவும். மருந்து தெளிக்கும்போது பாதுகாப்பு உடைகளை அணியவும்.

தெளிக்கும் மருந்துகளை பற்றிய குறிப்புகளை பதிவு செய்யவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். மருந்துகளை பாதுகாப்பான மற்றும் குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும். மருந்து தெளிக்க உபயோகித்த கொள்கலன்களை நன்றாக கழுவி வைக்கவும்.

காலியான மருந்து கலன்களை சரியான முறையில் அப்புறப்படுத்தவும் (குழிதோண்டி புதைத்துவிடவும்). கொட்டிய திரவ மருந்தை அப்புறப்படுத்த மரத்தூள் அல்லது மணலை பயன்படுத்தியபின் சுண்ணாம்பு கரைசலை சேர்த்து நச்சு முறிவு செய்து புதைத்து விடவும்.

மருந்து தெளித்த வயலில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் செல்லாமல் பார்த்துக்கொள்ளவும். எதிர்பாரத விபத்தின்போது உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவரை அணுகவும். பதிவுசெய்யப்படாத, பரிந்துரைக்கப்படாத மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை உபயோகபடுத்தகூடாது.

பரிந்துரைக்கப்பட்ட அளவிற்குமேல் பயன்படுத்த கூடாது. தொடர்ந்து ஒரே மருந்தை பயன்படுத்தகூடாது. இரண்டு ஒவ்வாத மருந்துகள் உரங்கள் நுண்நூட்டங்களை கலக்ககூடாது. மருந்துகளை அதற்குரிய கொள்கலனில் இருந்து வேறுகலனுக்கு மாற்றக்கூடாது.

காலியான மருந்து கொள்கலன்களை வயலிலோ, நீர்நிலைகளிலோ எறியகூடாது. காலியான மருந்து கொள்கலன்களை பயன்படுத்தகூடாது. மருந்து தெளிக்கும்போது உணவு நீர் அருந்துதலோ (அ) புகைபிடித்தலோ கூடாது. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது மருந்துகளை கையாளகூடாது.

காலாவதியான மருந்துகளை பயன்படுத்த கூடாது. வெறும் கைகளால் மருந்துகளை கலக்கக்கூடாது. காற்றின் திசைக்கு எதிராக மருந்து தெளிக்ககூடாது. மீதமான மருந்தை வரப்பு ஓரத்திலோ (அ) மற்ற பயிரிலோ தெளிக்ககூடாது.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்
Source
Image

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!