கிடை மாடு பயணம் பல அறிய தகவல்களையும், அவர்களின் வாழ்வையும் வெளிச்சம்போட்டு காட்டுகிறது. இன்னும் இன்னும் என்ற ஆவல் குறையவே இல்லை. கூட்டமாக நின்று கொண்டிருக்கும் நாட்டு இன மாடுகளை பார்க்கும்போது அதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அவைகளும் நம்மை பார்த்து ஏதோ கேட்டுக் கொண்டே இருக்கின்றது. நாம் அவைகளுக்கு பெரிதாக என்ன கொடுத்துவிட முடியும் ? இந்த பூமியில் சுதந்திரமாக மேய்வதை விட.
இந்த முறை ஐந்து தலைமுறையாக புலிக்குளம் கிடைமாடு வளர்க்கும் திரு.முத்துப்பாண்டி அவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாம் இதுவரை சந்தித்தவர்களில் இவர் சற்றே வித்தியாசமானவர். கிடைமாடுகளுக்காக மாநிலங்களைக் கடந்து, வெளிநாடு வரை போராடியுள்ளார். அதனால் பயன் ஒன்றுமில்லை என்று அவர் கூறும்போது, பல வெற்றிகள் கடுமையான இழப்புக்கு பின்னரே கிடைத்ததை ஞாபகப்படுத்தாமல் இல்லை.
இவரது தந்தை கிடைமாடு மேய்க்கும் பொழுது சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அந்த சம்பவத்திற்குப் பிறகும் கிடைமாடுகளை காக்க வேண்டும், குலத் தொழில் அழிந்து விடக்கூாது என்பதற்காகவே தந்தையின் மரணத்தை தாண்டி இத் தொழிலை கையில் எடுத்துள்ளார்.
எத்தனையோ சவால்கள் இதில் உள்ளது. எங்களின் நிலையை சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு தீர்வு காண்பதற்குள், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை தீர்ந்துவிடும் என்றுதான் அச்சப்படுகின்றேன் என்றார் கனத்த குரலில். தனக்குத் தெரிய 700 மாடுகள் இருந்த இடத்தில் 100 மாடுகளாக சுருங்கியதற்கு முக்கிய காரணம் விளை நிலங்கள் சுருங்கியதுதான். மேய்யச்சலுக்கு இடம் இ்லாமல் போனதும், நான்கு வழிச் சாலையும் எங்களை இன்னும் சிரமத்திற்குள்ளாக்குகிறது.
முக்கியமாக மழைக் காலங்களில் மலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க வேண்டும், மாடு மேயக்கும் தொழிலை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு அரசின் அடையாள அட்டை வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இரண்டு கோரிக்கைகளும் எதற்கு என்ற விவரத்தை வீடியோவில் தெளிவாக பதிவு செய்துள்ளார். இந்த கோரிக்கைகள் நிறைவேறினால், கிடைமாடுகளுக்கு பொற்காலம் தான்.
கிடைமாடு மேய்ப்பவர்களான கீதாரிகளின் வாழ்க்கை நவீன யுகத்திற்கும், பழமைக்கும் இடையே நிகழும் போர் போல் உள்ளது. இதன் விளைவு அடுத்த தலைமுறையினர் இத் தொழிலை தேர்ந்தெடுப்பார்களா ? என்ற கேள்விக்கு பதில் வாய்ப்பு குறைவு என்பதாகும். அப்படியே இத்தொழிலுக்கு வந்தாலும், முந்தைய தலைமுறையினரிடம் இருந்த பக்குவமும், பொறுமையும் இவர்களுக்கு இருக்குமா என்றால் ?
நாங்கள் எங்களின் உரிமைக்காக போராடிக் கொண்டே இருக்கின்றோம். இனி எங்களுக்கு வேறு வேலையும் பார்க்க இயலாது. கிடைமாடு மேய்த்துதான் பிழைப்பு நடத்த வேண்டும் என்ற நிலையும் எங்களுக்கு இல்லை. அடுத்த தலைமுறையும் இதற்குள் நுழைய விருப்பம் இல்லை. ஆயினும் இந்த வாயில்லா நாட்டு மாடுகளும், எங்கள் முந்தைய தலைமுறையினர் வழி வழியாக வலிகளை தாங்கி வளர்த்து வந்த குலத் தொழில் அழிந்து போய்விடுமே என்பதுதான் இன்றைக்கும் பொட்டல் காட்டில் எங்களின் பாதங்கள் புலம்பிக் கொண்டே போகிறது என்கிறார்கள் கீதாரிகள்.
தங்களது பெரும்பாலான நேரத்தை மாடுகளோடு கழிக்கும் இவர்களின் வாழ்வு இன்று வரை தரிசு நிலமாக கிடக்கிறது. நல்ல வீடு, வாசல், தோட்டம் என எல்லாமே இருந்தும், இவர்கள் நிம்மதியான உறக்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். இதில் நல்லாதான் சம்பாரிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் எவரும் மாடு மேய்க்க முன் வருவதில்லை. இதுவே உண்மை நிலை.
மீண்டும் வேறு ஒரு கீதாரியின் வாழ்க்கை பயணத்தில் சந்திப்போம். நன்றிகள்.
________________________________________________________
ஹலோ மதுரை சேனல்
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. ( Whats app )
Hello Madurai Raj – 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
? App Link: https://play.google.com/store/apps/de…
? Facebook :https://www.facebook.com/maduraivideo
?web site : https://hellomaduraitv.com/
?web site : https://hellomadurai.in/
?web site : https://tamilvivasayam.com/
? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
#கீதாரி #கிடைமாடு #மலைமாடு #ஜல்லிக்கட்டு #நாட்டுமாடு #கீதாரி #கிடைமாடுவாழ்க்கை #கிடைமாடுபயணம் #மாடு #கிடைமாடு #புலிக்குளம்மாடு #காங்கேயம்காளை #நாட்டுஇனம் #நாட்டுஇனமாடுகள்
#cow #cows #farm #nature #cowsofinstagram #cattle #animals #farmlife #milk #calf #love #bull #photography #farming #animal #k #agro #dairy #farmer #kuh #cowstagram #naturephotography #agriculture #cowboy #vaca #moo #photooftheday #horse #art #bhfyp #indiabulls #hcl #tcs #india #embassyresidency #elcot #microsoft #accenture #techmahindra #malles #ibm #perumbakkam #cts #wipro #infosys #globalhospital #ishavilla #salon #unisex #essensuals #rahejadevelopers
#bull #dog #cow #bulldog #cattle #love #bully #bullterrier #dogs #dogsofinstagram #farm #pitbull #puppy #pet #bulldogfrances #bulls #follow #instagram #a #calf #toro #frenchbulldog #toros #instadog #cowboy #frenchie #animals #americanbully #art #bhfyp
#cattle #farm #cow #cows #farmlife #farming #livestock #agriculture #cowsofinstagram #beef #bull #ranchlife #agro #beefcattle #ranch #cowboy #calf #animals #angus #milk #cats #ganado #cattleranch #cattlefarm #nature #pecuaria #zootecnia #ganaderia #ranching #bhfyp