பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிகள்

மழைக்காலங்களில் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய் தாக்கும்போது, சூடாமோனாஸ் ப்ளோரசன்ஸைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பூம்பாறை, வில்பட்டி, மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, செண்பகனூர், கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பீன்ஸ் பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

மஞ்சள் கருகல் நோய்:
பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய் வருவதற்கு முக்கிய காரணம் அதிக மழையே. அதாவது மழைக்காலங்களில் பயிரிடப்படும் பீன்ஸ் செடியின் பாத்திகளில் தண்ணீர் தேங்கி, பயிரில் மஞ்சள் கருகல் நோய் ஏற்படுகின்றது.

சூடோமோனோஸ் ஃப்ளோரசன்ஸ்:
இந்த நோயைக் கட்டுப்படுத்த சூடோமேனாஸ் ஃப்ளோரசன்ஸை ஒரு டேங்க்கிற்கு (Tank) 30 முதல் 40 மில்லிகிராம் என்ற வீகிதத்தில் கலந்து பீன்ஸ் செடிகளில் அடித்தால், நோய்க் கட்டுப்படும் என்றார். காலை அல்லது மாலை வேளைகளில் ஏதேனும் ஒருமுறை மருந்தைத் தெளித்தால் நல்லப் பலன் அடையலாம் என்றும், அருகில் உள்ள வேளாண் நிலையத்தில் இந்த மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்