Tamil Vivasayamகால்நடைகள்வளர்ப்பு, பராமரிப்பு

பால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்கள்

Exotic cattle used for milk production

ஜெர்சி – Jersey

இங்கிலாந்தின் ஜெர்சி தீவில் உருவான சிறிய மாட்டினம். இந்தியாவின் தட்பவெப்பநிலைக்கு இந்த இன மாடுகள் நன்கு ஏற்றவையாக உள்ளன. எனவே இவை இந்தியாவின் நாட்டு மாடுகளின் கலப்பினத்திற்கு பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன.

இம்மாடுகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும். இம்மாடுகள் தட்டையான முன்பகுதி தலையுடன், கச்சிதமான உடலமைப்புடனும் காணப்படும். இம்மாட்டினங்களின் பாலில் 5.3 % கொழுப்பு மற்றும் 15% இதர திட சத்துக்களும் இருக்கிறது.

ஹோல்ஸ்டியன் –ஃபிரீசியன் – Holstein Friensian

இம்மாட்டினம் நெதர்லாந்தின் வட பகுதிகளில் குறிப்பாக ஃபிரீஸ்லாந்து பகுதியில் உருவானது. இவை நன்கு உருவான உடலமைப்புடன், பெரிய பால் மடிகளையும் கொண்டவை. இவை அதிக பால் கொடுக்கும் பெரிய மாட்டினங்களாகும். நன்கு வளர்ந்த மாடுகள் 700 கிலோ உடல் எடை வரையுடன் இருக்கும்

இவற்றின் உடல் கருப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுகளுடன் காணப்படுவதால் இவற்றை எளிதில் அடையாளம் காணமுடியும். ஒரு கறவை காலத்தில் இவற்றின் சராசரி பால் உற்பத்தி 6000-700 கிலோக்களாக இருக்கும். ஆனால் இம்மாட்டினங்களின் பாலில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும் (3.45%.

பிரவுன் ஸ்விஸ் – Brown swiss

இம்மாட்டினங்கள் ஸ்விட்சர்லாந்தின் மலைப்பகுதிகளிலிருந்து தோன்றியவை. ஸ்விட்சர்லாந்தில் இம்மாட்டினங்கள் பெயர்பெற்றவை. மேலும் இவற்றின் உடல் நன்கு பெரியதாகக் காணப்படுவதுடன், இவற்றின் பால் உற்பத்தியும் அதிகம். கரன் ஸ்விஸ் எனப்படும் மாட்டினம் இந்தியாவின் நாட்டு மாடுகளுடன் பிரவுன் ஸ்விஸ் மாட்டினங்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த கலப்பின மாட்டினமாகும்.

ரெட் டேன் – Reddane

டேனிஸில் உருவான இம்மாட்டினங்களின் உடல் சிவப்பு நிறத்துடனோ அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடனோ அல்லது அடர்ந்த பழுப்பு நிறத்துடனோ காணப்படும். இவை நன்கு வளர்ந்த பெரிய மாட்டினங்களாகும். காளைகள் 950 கிலோ உடல் எடை வரை இருக்கும். பசு மாடுகள் 600 கிலோ வரை உடல் எடையுடன் இருக்கும். ரெட் டேன் மாடுகளின் பால் உற்பத்தி 3000-4000 கிலோக்களாக, 4 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட கொழுப்புச்சத்துடன் இருக்கும்.

ஆயிர்ஷையர் – Ayshire

இம்மாட்டினங்களின் தாயகம் ஸ்காட்லாந்திலுள்ள ஆயிர்ஷையர் ஆகும். இவை பால் உற்பத்தி செய்யும் அழகான மாட்டினங்களாகும். இவை மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதால் இவற்றை மேலாண்மை செய்வது கடினம்.

இவற்றின் பால் உற்பத்தி குறிப்பிடும் படியாக இல்லை, மேலும் பாலின் கொழுப்புச்சத்தும் மற்ற மாட்டினங்களை போலவே (4%) இருக்கும். இந்த மாட்டினம் டன்லப் மாடு அல்லது கன்னிங்ஹாம் மாடு என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ன்சி – Guernsey

இம்மாட்டினங்கள் பிரான்சின் கர்ன்சி எனும் தீவிலிருந்து தோன்றியவை. இவற்றின் பாலில் அதிக அளவு புற்றுநோயினைத் தடுக்கும் பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து இருப்பதால் பொன்னிறத்துடன் இருக்கும்.
இம்மாட்டினங்களின் பாலில் அதிக அளவு கொழுப்புச்சத்தும் (5%), அதிக அளவு புரதச்சத்தும் (3.7%) இருக்கிறது.

கர்ன்சி மாடுகள் ஒரு வருடத்தில் 6000 லிட்டர்கள் வரை பால் உற்பத்தி செய்யும். இம்மாட்டினங்கள் அதிக பால் உற்பத்தி செய்வதாலும், கன்று ஈனும் போது மிகக்குறைந்த சிரமங்களே இருப்பதாலும், நீண்ட நாள் வாழ்வதாலும் இவற்றை வளர்க்கும் பால் பண்ணையாளர்களுக்கு அதிக நன்மைகள் உண்டு.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்
Source
ஆதாரம்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!