பாரம்பரிய நெல் ரகம் அறுபதாம் குறுவை சாகுபடி செய்து எப்படி ?

பாரம்பரிய நெல் ரகங்களில் அறுபதாம் குறுவையும் ஒன்று. அறுபதாம் குறுவை என்ற பெயருக்கு காரணம் அறுபதி நாட்களில் அதாவது இரு மாதத்தில் அறுவடை செய்யக்கூடிய நெல் ரகம் ஆகும். குறுவை என்றால் குறுகிய நாட்கள் என்று பொருள் ஆகும். ஆதலால்தான் இதனை அறுபதாம் குறுவைசாகுபடி என்று கூறுகின்றனர். அறுபதாம் குறுவை நெல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த அரிசி ரகம் ஆகும். முக்கியமாக இந்த அரிசியில் கூடுதலாக கால்சியம் சத்துகள் உள்ளன. பார்ப்பதற்கு கேரளா அரிசி போலத் தோன்றும். இந்த வகை அரிசி  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன. விதைக்காகவும் பல்வேறு விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த நெல் ரகம் விதை ரூ.50 முதல் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை முதல் 25 மூட்டை வரை விளைச்சல் கிடைக்கும். நடவு செய்ய ஏற்ற பருவம் என்று எடுத்துக் கொண்டால் ஆடி மாதத்திற்கு முன்பாகவும் பயிரிடலாம். விதைப்புக்கு கார்த்திகை, ஆவணி ஆகிய மாதங்கள் ஏற்றது. பாவி நடவு செய்வதென்றால் மாசி, வைகாசியில் நடலாம். இதில் கார்த்தினை மாதம் நடவு செய்தால் நெற் கதிர் 4 அடிக்கு மேல் வரை வளரக்கூடும். மற்ற மாதங்களில் நட்டால் குட்டையாக வரும்.

விதைப்பு முறையில் 60 நாட்களில் அறுவடை செய்யலாம். நாத்து முறையில் நடவு செய்தால் 70 நாட்களில் அறுவடை செய்யலாம். நடவுக்கு முன்பாக தொழுவுரம் ஒரு முறை அடிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு முறை களை எடுத்தால் போதுமானது. அதேபோல் களைக்கு பிறகு வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, மண் புழு உரம் ஆகியவை கலந்து தெளிக்க வேண்டும். பஞ்சகாவியம் ஒரு முறை, பூச்சி விரட்டி ஒரு முறை தெளத்தால் போதும். தண்ணீரைப் பொறுத்தவரையில் காய்ச்சலும், பாய்ச்சலுமாக விட்டால் போதும். அதிகப்படியான தண்ணீர் தேவையிருக்காது. வறட்சியான பகுதியைச் சேர்ந்தவர்கள் மழைக்காலங்களில் நடவு செய்யலாம்.

ஒரு நாத்து நடவு செய்தால் 35 முதல் 40 கிளைகள் வரை வரும். அறுவடைக்கு ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 மூட்டை வரை விளைச்சல் கிடைக்கும். இதன் அரிசி குண்டு குண்டாக இருக்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும். பால்கட்டு அதிகம் உள்ள அரிசி இது. வாயில்போட்டு மென்றால் அதிகமாக பால் வருதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த அரிசியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது. எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை இதில் அதிகம் உள்ளது. முக்கியமாக மூட்டுத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக மிக ஏற்றது. இந்த ரகம் சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசை மற்றும்  முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களும் இதில் செய்யலாம்.

குறிப்பு: இந்த ரகத்தை பொறுத்தவரையில் இயற்கை முறையில் விவசாயம் செய்தால் அதிக விளைச்சல் எடுக்கலாம். வானம் பார்த்த பூமியில் நிலம் உள்ளவர்களும் மழை காலத்தில் பயிரிட ஏற்றது.

இயற்கை முறையில் அறுபதாம் குறவை சாகுபடி செய்யும் விவசாயிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்க்பபட்டுள்ளன. அவர்களை தொடர்பு கொண்டு விதை நெல் வாங்கி நீங்களும் உங்கள் நிலத்தில் அறுபதாம் குறுவை சாகுபடி செய்து ஆரோக்கியமாய் வாழலாம்.

மதுரை முருகவேல் பாண்டியன்: 99440 81821
சிவகங்கை சிவராமன்: 8489207699
காரைக்கால் பாஸ்கர்: 91 94435 73530

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
3
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்