பாரம்பரிய நெல் ரகம் அன்னமிளகி

நம் நாட்டில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக நெல் ரகங்கள்  விளைந்துள்ளது என்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது. அதே நேரத்தில் அதில் இப்பொழுது 174 மட்டுமே புழக்கத்தில் உள்ளது என்பது சோகத்தை அளிக்காமல் இல்லை.  அதிலும் நாம் இப்பொழுது உண்ணும் நவீன அரிசியில் ருசியும் இல்லை, சத்தும் இல்லை. இப்படிபட்ட சக்கை அரிசியை கிலோ ரூ.50க்கு மேல் கொடுத்து வாங்கி உண்பதில் என்ன பயன் ? என்றுதான் தெரியவில்லை !!  ஆனால் அன்றைக்கு நாம் சத்துள்ள நம் பாரம்பரிய நெல் என்னவெல்லாம் இருந்துள்ளது. அவற்றி எப்படி சாகுபடி செய்வது என்பது குறித்து இங்கு தொடர் பதிவுகளில் காணப்போகின்றோம். நம் மண்ணில் விளைந்த நெல் ரகங்களையும், அதன் பயன்களையும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமல்லவா.

அதில் நாம், முதலாவதாக  பார்க்கப்போவது அன்னமிளகி. இப்பொழுது இந்த அரிசி அதிகம் பயன்பாட்டில் இல்லை. ஆனால் நம் உடலுக்கு ஒரு மருத்துவரைப்போல் செயல்படக் கூடியது. அன்னமிளகி எனும் அரிசி  பெயரே எவ்வளவு அழகாக உள்ளது. அன்னம் என்றால் உணவு என்ற பொருளும் உண்டு. அப்படிப்பட்ட உணவே பெயராகிய அன்னமிளகி பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை.

அன்னமிளகி ( Annamazhagi -அன்ன மழகி) பாரம்பரிய நெல்வகைகளில் ஒன்று. இது புல் வகையைச் சார்ந்த தாவரம் என்று கூறப்படுகின்றது. மிகவும் தித்திப்பு சுவையுள்ள இந்த நெல் சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியதாகும். நமது உடலுக்கு அனைத்துவிதமான சுகத்தையும் அளிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

இந்த அரிசியுடன் மோர் சேர்த்து சமைத்து உண்டால் சிறுநீர் எரிச்சல் பறந்துபோகும் என்று கூறப்படுகின்றது. அதாவது சிலருக்கு சிறுநீர் போகும்போது ஒரு வித எரிச்சல் இருக்கும். அதற்கு இந்த அரிசி சரியான தீர்வை தந்துள்ளது. அதுமட்டுமின்றி தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு போன்றவைகளுக்கும்மோர் கலந்து சமைத்த இந்த சாதம் அரும்மருந்தாகும் எனக் கூறப்படுகின்றது.

மேலும,  இரவில் நீரூற்றிய சோறான பழையதை விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்றும், உடலில் பொலிவு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வெறிநோயை முற்றிலும் நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்றும் சொல்லப்படுகின்றது. கூடுதலா பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்குமென்றும், இரவில் நன்றாக தூக்கம் வருமென்றும் கூறப்படுகிறது. இதையே அளவுக்கு அதிகமாக உண்டால்  தூக்கம் வராதவருக்கும் கண்கள் சொக்கி தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் கூறப்படுகின்றது.

இப்போது இந்த அரிசி பயன்பாட்டில் இல்லை என்பது வருந்ததக்க தகவல். இது தமிழனத்தில் எங்கே அதிகம் விளைவிக்கப்பட்டது. எத்தனை நான் சாகுபடி என்ற எந்த விபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் இந்த தித்திப்பான மருத்துவ அரிசியை நம் முன்னோர்கள் பல காலமாக உணவாக சாப்பிட்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை. நமது தலைமுறைக்கு இந்த அன்னமிளகி அரிசி தெரியாமல் போனது எத்தனை அப்பதமானது.

சான்று:
இதற்கு என்ன சான்று உள்ளது என்று கேட்பவர்களுக்கு அகத்திய முனிவர் தனது பாடலில் இதை எழுதிவைத்துள்ளார். அதுவே இதற்கு தக்கச் சான்றாகும். அந்த பாடலின் வரிகள்.

“அன்ன மழகியரி ஆரோக்கிய ங்கொடுக்குந்
தின்ன வெகுரிசியாஞ் செப்பக்கேள் – இந்நிலத்து
நோயனைத்துந் தூளாய் நொறுங்கத் தகர்த்துவிடுந்
தீயனலைப் போக்குந் தெளி.”

மேற்கூறிய பாடலின் பொருளானது, மிகுந்த சுவையுள்ள அன்னமழகி அரிசி, எல்லா சுரங்களையும், வெப்பத்தையும் போக்கி, உடற்கு நன்மை கொடுக்கும் என கூறப்படுகிறது.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்