பழமையான ஆட்டு தோல் சந்தை | என்ன நடக்கிறது | எங்கு இருக்கிறது

கால்நடை குறித்த தேடலில் நமக்கு பல்வேறு ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்துக் கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. மிகச் சாரதாரணமான விசயம் கூட தெரியும் வரை மிக்பெரிய விசயம் என்பதை நிரூபித்துள்ளது ஆட்டு தோல் சந்தை வீடியோப் பதிவு.

மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் போதெல்லாம் இந்த ஆட்டின் தோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும். அதைப் பார்க்காமல் கடந்துவிட முடியாது. நீண்ட நாட்களாக இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தேனூர் பிட் ஒன்னில் இந்த தோல் சந்தை அமைந்துள்ளது. இது மிகப் பழமையான தோல் சந்தை ஆகும். 1829 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 192 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த சந்தை நம் கண்ணில் பட்டு காட்சியாக மாறியுள்ளது மகிழ்ச்சி என்றபோதும், இன்றைக்கு இத்தொழில் கடுமையாக முடக்கியுள்ளது என்ற தகவல் கசப்பாகவே உள்ளது.

டபேதார் தோல் சந்தை என்று அழைக்கப்படும் இந்த சந்தையை உருவாக்கியவர் டபேதார் முகமது ஆரிப் என்பவர். மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆட்டுத் தோல்கள் இங்கு கொண்டு வரப்பட்டு உப்புபோட்டு பதப்படுத்தப்படுகிறது. இவ்வாறு வாரம் முதல் சேகரிக்கப்பட்ட தோல் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

அன்றைய காலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சந்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வெள்ளாட்டுத் தோலை விட செம்மறி ஆட்டு தோலுக்கு கூடுதலாக ரூ.10 கிடைக்கும் என்றும், அதேபோல் கிடாய் தோலுக்கும் விலை சற்று கூடுதல். ஒரு ஆட்டு தோல் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அந்த காலத்தில் வாரத்திற்கு 15,000க்கும் மேற்பட்ட ஆட்டு தோல்கள் இங்கு வருவதாகவும், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் இது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் இங்கு வியாபாரம் செய்பவர்கள் தெரிவித்தனர்.

இச்சந்தைக்கு திண்டுக்கல்லில் இருப்பவர்கள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். பின்னர் இந்த ஆட்டு தோல்கள் பதப்படுத்தப்பட்டு, வேறு ஒரு நபரிடம் கை மாற்றப்பட்டு, அதன் பிறகு சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இறுதியாக அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி, பல்வேறு பொருட்களுக்கு இது பயன்படுத்தப்படுவதாக இங்கு வியாபாரம் செய்பவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இத் தொழில் கடுமையாக சரிந்துள்ளது என்றும், தோல்கள் வீணாக கழிக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு உரங்களாக பயன்படுகிறது என்றும் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக எந்த ஒரு தோலும் வீணாகுவதில்லை. தற்போது தோல் விற்பனை செய்வது கடுமையாக உள்ளது என்கிறனர்.

தோல உரிச்சு உப்பு கண்டம் போட்டு விடுவேன் என்று கிராமத்தில் சொல்வார்கள். ஆனால் இங்கு தோலுக்கே உப்பு போட்டு பதப்படுத்தப்படும் காட்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இத்தொழிலை நம்பி 2 இலட்சத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் முழுக்க நடைபெற்ற ஆட்டு சந்தை இன்றைக்கு 3 மணி நேரம் மட்டுமே நடக்கும் அளவிற்கு இத் தொழில் சரிந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆட்டு சந்தைகள் இருந்தாலும், இன்றைக்கு மதுரை மற்றும் ஈரோட்டில் மட்டுமே ஆட்டு தோல் சந்தை இயங்குவது குறிப்பிடத்தக்கது.

பழமையான இந்த ஆட்டு தோல் சந்தை பற்றி ஆடு வளர்ப்பவர்கள் முதல் கறிக்கடைக்காரர்கள் வரை தெரிந்திருந்தாலும், என்னைப் போன்ற பலருக்கும் இது தெரியாத தகவல் ஆகும். அவர்கள் அறிந்து கொள்ளவே இந்த பதிவு என்பது மட்டுமின்றி, ஆட்டு தோல் தேவைப்படுபவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும். இன்னும் இது குறித்த தகவல்கள் மற்றும் தொடர்பு எண்கள் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இதுபோல் ஒரு வித்தியாசமான களத்தில் உங்களை சந்திக்கின்றேன். இந்த வீடியோ குறித்த கருத்தினை தவறாமல் எங்களுக்கு பதிவு செய்யுங்கள். நன்றிகள் !!

________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. ( Whats app )
Hello Madurai Raj – 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
#ஆட்டுதோல் #ஆட்டுதோல்சந்தை #வெள்ளாடு #செம்மிறஆடு #ஆட்டுகுட்டி #வெள்ளாட்டுதோல் #செம்மறிஆட்டுதோல் #தோல்ஏற்றுமதி #தோல்பொருட்கள் #சந்தை #மதுரை #மதுரைசந்தை #மதுரைதோல்சந்தை #தேனூர் #ஆட்டுசந்தை

#goats #goat #goatsofinstagram #goatlife #farmlife #babygoats #farm #goatlove #goatstagram #animals #goatfarm #goatlover #goatsofig #pygmygoats #cabras #goatkids #babygoat #nigeriandwarfgoats #nature #farmanimals #babygoatsofinstagram #goatsareawesome #cutegoats #goatsarefamily #goatyoga #sheep #homestead #dairygoats

#sheeps #sheep #sheepofinstagram #farm #nature #animals #sheeplove #goats #farming #sheepfarming #love #sheepfarm #lamb #sheepworld #farmlife #bakra #sheeplife #lambs #naturephotography #follow #photography #k #qurbani #eidmubarak #bakraeid #bakrid #photooftheday #trending #cow #bhfyp

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்