பன்னீர் ரோஜா அதிகம் பூ பூக்க அருமையான ஆலோசனை

இப்படி செய்து பாருங்கள் உங்களது பன்னீர் ரோஜா அதிகம் பூ பூக்க வழிவகுக்கும்…… ஐந்திலிருந்து ஆறு வாழைப்பழத் தோல், காய்ந்த தோலாக இருந்தாலும் பரவாயில்லை, அல்லது பச்சையாகவே இருந்தாலும் பரவாயில்லை. 1/2 கப் அளவு டீ தூள்(50கிராம்), 2 டேபிள் ஸ்பூன் அளவு காபி தூள், அரை கப் அளவு புளித்த தயிர்.

மேல் குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஒரு லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி, ஒரு மூடி போட்டு மூடி வைத்துவிடுங்கள். மூன்று நாட்கள் இந்த தண்ணீர் அப்படியே இருக்கட்டும். மூன்று நாட்கள் கழித்து இந்த தண்ணீரை துறக்கும் போது, அது நுண்ணுயிர் சத்துக்கள் நிறைந்த தண்ணீராக மாறி இருக்கும்.

ஒரு லிட்டர் அளவு இருக்கும் இந்த தண்ணீரை, 5 லிட்டர் நல்ல தண்ணீரோடு கலந்து, குளிக்க பயன்படுத்தும் கப்பில் 1/2 கப் அளவு, உங்களுடைய பன்னீர் ரோஜா செடிகளுக்கு மாதத்திற்கு இரண்டு முறை ஊற்றி வாருங்கள். அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை. கூடிய விரைவில் ரோஜாச் செடியில் உள்ள கிளைகள் அனைத்திலும் மொட்டு வைத்து பூ பூக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதோடு சேர்த்து மாதத்திற்கு ஒரு முறை ஊட்டச்சத்து நிறைந்த மண்புழு உரத்தையும் ரோஜா செடிகளுக்கு போட வேண்டும்.

இதேபோல் ரோஜா செடிகளுக்கு எந்த உரத்தை போடுவதாக இருந்தாலும், மண்ணை நன்றாக கிளறி விட்டு விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மண் இறுக்கமாக இறுகி இருக்கக்கூடாது. வேர், மண்ணில் ஊன்றி வளர்வதற்கு சிரமப்படும். ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை சூரிய உதயத்திற்கு முன்பு ஊற்ற வேண்டும். அப்படியில்லை என்றால் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு ஊற்றுவது நல்லது.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்