பசுந்தீவன உற்பத்தி மூலம் கறவை மாடுகளில் பால் உற்பத்திப் பெருக்கம்

இந்திய வேளாண்மையில் கால்நடைச் செல்வத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகக் கால்நடைகள் குறிப்பாக கறவை மாடுகள் விளங்குகின்றன. விவசாயம் பொய்க்கும் காலங்களில் கறவை மாடுகள் தான் விவசாயிகளுக்கு வருமானத்தைக் கொடுக்கக் கூடிய பொருளாதார ஏணிப்படியாகும். தற்போது பால் உற்பத்திச் செலவில் 65 முதல் 70 சதவிகிதம் வரை தீவனச் செலவிற்கே சரியாகி விடுகிறது. ஆதனால் தீவனச் செலவைக் குறைக்கும் பொருட்டு கறவை மாடுகள் வளர்ப்போர் ஊட்டச் சத்துகள் குறைந்த விவசாயப் பயிர்களின் உபபொருட்களான வைக்கோல். சோளத்தட்டை போன்றவைகளை முக்கியத் தீவனமாக அளிக்கின்றனர். இந்த உலர் தீவனங்களரில் புரதம், தாது உப்புக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. அதனால் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் ஒரு கறவை மாட்டின் சராசரி பால் உற்பத்தி மிகக் குறைவாகவே உள்ளது. எனவே கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனங்கள் இன்றியமையாத பங்கினைப் பெற்றுள்ளன.

பொதுவாக நம் நாட்டில் கறவை மாடுகளுக்கு போதுமான அளவு பசுந்தீவனங்கள் அளிக்கப்படுவதில்லை. பெரும்பான்iயான கறவை மாடுகளுக்கு மேய்ச்சல் மூலம் கிடைக்கும் சிறிது பசுந்தீவனமும், ஊட்டச்சத்து குறைந்த உலர் தீவனமும் குறிப்பாக வைக்கோல் மட்டுமே அளிக்கப்படுகின்றது. கறவை மாடுகளுக்குக் கலப்புத் தீவனம் அதிகமாக அளிக்கப்படுவதால் கறவை மாடுகளின் தீவனச் செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைக் குறைக்க கறவை மாடுகளுக்கு பசுந்தீவனங்கள் அவசியம் அளிக்கப்பட வேண்டும். பசுந்தீவனங்களை உணவாகக் கொடுப்பதன் மூலம் கறவை மாடுகளுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை நாம் அளிக்கலாம். மேலும் கலப்புத் ;தீவனத்தின் அளவைக் குறைத்துத் தீவனச் செலவை மிச்சப் படுத்தலாமை. பசுந்திவனத்தைப் பயிர் செய்தன் மூலம் மண்வளம், மண்ணின்ன நீர் தாங்கும் சக்தி அதிகரிக்கப்படுகிறது. கணை மற்றும் உபயோகமற்ற புல் மற்றும் பூண்டுகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. பயறு வகைத் தீவனப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் மண்ணின் தழைச்சத்த அதிகரித்த மண்ணின் வளம் பெருகுகிறது.

பசுந்தீவனங்களின் அவசியம்:
 • கறவை மாடுகளுக்குத் தரமான பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து அளித்திடுவதன் மூலம் கறவை மாடுகளின் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறனை அதிகரிப்பதோட ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
 • பசுந்தீவனம் அளிப்பதால் தீவனச் செலவைக் குறைக்கலாம். பசுந்தீவனங்களில் உயிர்ச்சத்தக்கள் ;அதிகம் இருப்பதால் கலப்புத் தீவனத்தின் தேவைகளை இவைக் குறைக்கின்றன. ஐந்து லிட்டர் வரை பால் கறக்கும் ஒரு மாட்டிற்குத் தேவையான பசுந்தீவனம் மட்டுமே அளித்து கலப்புத் தீவனம் இல்லாமல் பராமரிக்க முடியும். ஐந்து லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்குத் தரமான பசுந்தீவனத்தைப் போதிய அளவு கொடுக்கும் பொழுது கலப்புத் தீவனம் கொடுக்கும் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
 • பசுந்தீவனத்தில் புரதம், தாது உப்புக்கள், உயிர்ச்சத்தக்கள் குறிப்பாக உயிர்ச்சத்து “ஏ” மறறும் “இ” ஆகியவை உலர் தீவனத்தை விட அதிகமாக உள்ளது. இவை மாடுகளின் வளர்ச்சிக்கும் அதிக பால் உற்பத்திக்கும் உதவி செய்கிறது.
 • பசுந்தீவனப் புரதத்தில் ஆர்ஜினின், லைசின் மற்றும் குளுடாமிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் மாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
 • பசுந்தீவனங்களில் உயிர்ச்சத்தக்களில் முக்கியமான பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இவை வைட்டமின் “ஏ” தேவையை பூர்த்தி செய்வதோடு மாடுகளின் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.
 • பசுந்தீவனங்களில் நார்ச்சத்தப் பொருட்கள் அதிகம் இருப்பதால் கறவை மாடுகளின் இரைப்பையில் உள்ள நுண்கிருமிகளால் ஜீரணிக்கப்பட்டு பால் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களாக மாற்றப்படுகின்றன.
 • பசுந்தீவனத்தில் உள்ள நார்ச்சத்துப் பொருட்கள் மலச் சிக்கல் ஏற்படாமல் பாதகாக்கின்றன.
 • பசுந்தீவனங்கள் எளிதில் செரிக்கக் கூடியவை. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவல்லது. இதனால் மாடுகளின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்றாள் அதிகரிப்பதோடு, பால் உற்பத்தித் திறனையும், அதிகரிக்கச் செய்கதிறது. ஊலர் தீவனங்களுடன் பசுந்தீவனங்களை சேர்த்;துக் கொடுப்பதால் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிப்பதோடு, உலர் தீவனத்தின் செரிமானத் தன்மையும் அதிகரிக்கிறது. குறிப்பாக கடலைக்கொடி, சோளத்தட்டு ஆகியவற்றுடன் மர இலைகள் மற்றும் பயறு வகைத் தீவனங்களை சேர்த்துக் கொடுப்பதால் உடல் வளர்ச்சி அதிகரிக்கிறது.
 • பசுந்தீவனப் பயிர்களை பயிரிடும் முன் நாம் கவனிக்க வேண்டியவை:
  பசுந்தீவனங்களைப் பயிரிடுமுன் சில முக்கியமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் எந்தெந்த பசுந்தீவனப் பயிர்களைப் பயிரிடலாம் என்று முடிவெடுக்கலாம்.
 • தீவனப் பயிர்கள் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தர வேண்டும்.
  ஆவற்றில் போதிய அளவு ஊட்டச்சத்து இருத்தல் வேண்டும்.
  காலநிலை மற்றும் மண்பாதகமாக இருந்தாலும் அதிக பலன் கொடுக்க வேண்டும்.
  பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்படாதவாறு இருக்க வேண்டும்.
  பயிர் செய்யும் விதம் எளிதாகவும் இருத்தல் வேண்டும்.

பசுந்தீவனப் பயிர் வகைகள்:

தீவனப்பயிர்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

 1. புல்வகைத் தீவனம்
 2. தானிய வகைத் தீவனம்
 3. பயறு வகைத் தீவனம்
 4. மரவகைத் தீவனம்

1. புல்வகை பசுந்தீவனப் பயிர்கள்:
கோ- 4இ கினியாப்புல்இ கொழுக்கட்டைப்புல்இ ஊசிப்புல்இ தீனாநாத் புல் ஆகியவை புல்வகை பசுந்தீவனப் பயிர்களாகும். இவற்றுள் கோ- 4 கால்நடைகளுக்காக அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

கோ – 4 புல்:
இது குறைந்த நிலப்பரப்பில் அதிக மகசூல் அளிக்கக்கூடிய சத்து நிறைந்த புல்வகைத் தீவனம் ஆகும். இதை இறவைப்பயிராக ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். இது பல்லாண்டுப் புல்வகைத் தீவனம் ஆகும். விதை அளவு ஒரு ஏக்கருக்கு 16000 கரணைகள். அடிஉரமாக தொழு உரம் 10 டன்இ யூரியா 40 கிலோஇ சூப்பர் பாஸ்பேட் 80 கிலோஇ பொட்டாஸ் 20 கிலோ இடவேண்டும். மேலும் ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 30 கிலோ யூரியா கொடுக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். நட்ட 60 நாட்களிலும் பின் 45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டிற்கு 100 முதல் 110 டன் வரை மகசூல் கிடைக்கும். கரும்பு நடுவது போன்று வரப்பு அமைத்து நடவு செய்ய வேண்டும்இ வரப்புக்கு வரப்பு 1½ அடி இடைவெளியில் கரணைக்கு கரணை 1½ அடி இடைவெளியில் நடவேண்டும்.

2. தானிய வகை பசுந்தீவனப்பயிர்கள்
மக்காச்சோளம்இ சோளம்இ கம்புஇ கேழ்வரகுஇ திணை மற்றும் சாமை ஆகியவை தானிய வகை பசுந்தீவனப் பயிர்களாகும்.

தீவனச்சோளம் கோ: 29 (கோ. எஃப். எஸ். 29)
குறைந்த விதை அளவில் அதிக மகசூலைத் தரும் சிறப்பை தீவனச்சோளம் கோ.29 (கோ.எஃப்.எஸ். 29) பெற்றுள்ளது. இதை மானாவரியாகவும், இறவையிலும் பயிரிடலாம். இதை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நீர் தேங்காத நல்ல வடிகால் நிலமாக இருந்தால் போதுமானது. எக்டருக்கு 12.5 கிலோ விதை தேவைப்படும். அடிஉரமாக தழைச்சத்து 30 கிலோஇ மணிச்சத்து 40 கிலோஇ சாம்பல் சத்து 20 கிலோ இடவேண்டும். மேலும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் தழைச்சத்து 30 கிலோ கொடுக்க வேண்டும். விதைத்த 25 முதல் 30 நாட்களில் களையெடுக்க வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்கு ஓரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைத்த 60 வது நாளிலும் அதன் பின் 55 நாட்களுக்கு ஒருமுறையும அறுவடை செய்ய வேண்டும். மகசூலாக ஆண்டிற்கு 160 முதல் 170 டன் வரை கிடைக்கும்.

3. பயறுவகை பசுந்தீவனப்பயிர்கள்;
வேலி மசால்இ காராமணிஇ அவரைஇ கொத்தவரைஇ குதிரை மசால்இ நரிப்பயறுஇ சணப்புஇ கொள்ளுஇ சங்கு புஸ்பம்இ ஸ்டைலோஇ சிராட்ரோஇ செண்ட்ரோஇ முயல் மசால்இ கடலைக்கொடி மற்றும் டெஸ்மாந்தஸ் ஆகியவை பயறுவகை பசுந்தீவனப் பயிர்களாகும்.

வேலி மசால்
வேலி மசால் ஒரு சிறந்த பயறு வகைத் தீவனம். நேராகவும், அடர்த்தியாகவும் வளர்ந்து அதிகமான விதை பிடிக்கும் தன்மையும் கொண்டது. வெட்ட வெட்ட மறுபடியும் துளிர்த்து சுவையான பசுந்தீவனத்தை தரும். எல்லா மண் வகைகளிலும் எல்லாப் பருவங்களிலும் நன்கு வளரும். இதனை கோ-4 புல்லுடன் கலப்புப் பயிராக சாகுபடி செய்யலாம். அதிக ஊட்டச் சத்து உள்ளதால் கால்நடைகள் விரும்பி உண்கின்றன. இப்பயிர் எளிதில் செரிப்பதால் சத்துக்கள் எளிதில் விரைவாக உறிஞ்சப்பட்டு பால் உற்பத்தி பெருகுகிறது.

ஓர் ஏக்கருக்கு 5 கிலோ விதைகளை விதைநேர்த்தியாக நன்கு கொதித்த நீரில் விதைகளை 5 நிமிடம் போட்டு நிழலில் உலர வைத்து பின் விதைக்க வேண்டும். அடிஉரமாக தொழு உரம் 10 டன்இ தழைச்சத்து 4 கிலோஇ மணிச்சத்து 24 கிலோஇ சாம்பல் சத்து 12 கிலோ இடவேண்டும். 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைத்த 40 முதல் 45 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். மகசூலாக ஆண்டிற்கு 120 டன் வரை கிடைக்கும்.

தீவனத் தட்டைப்பயறு (காராமணி):
இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.உயர் விளைச்சல் இரகமான தீவனத் தட்டைப் பயறு கொடி விட்டு நன்கு வளரும் தன்மை உடையது. செடிகள் அதிக இலையுடன் இலைகள் பெரிதாக இருக்கும். விதை அளவு ஏக்கருக்கு 16 கிலோ ஆகும். அடிஉரமாக தொழு உரம் 10 டன்இ தழைச்சத்து 10 கிலோஇ மணிச்சத்து 16 கிலோஇ சாம்பல் சத்து 8 கிலோ இடவேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பூத்தவுடன் 50 முதல் 55 நாட்கள் அறுவடை செய்ய வேண்டும். மகசூலாக ஆண்டிற்கு 8 டன்; வரை கிடைக்கும்.

4. மரவகைத் தீவனப் பயிர்கள்:

அகத்தி:
இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். 5 ஆண்டுகளுக்குப் பலன் தரக் கூடியது. ஓர் ஏக்கருக்கு 2 கிலோ விதை இடவேண்டும். விதை நேர்த்தியாக 80 டிகிரி செ. வெந்நீரில் 5 நிமிடங்கள் அல்லது குளிர்ந்த நீரில் 10 மணி நேரம் ஊற வைத்து விதைக்க வேண்டும். அடிஉரமாக தொழு உரம் 10 டன்இ தழைச்சத்து 10 கிலோஇ மணிச்சத்து 16 கிலோஇ சாம்பல் சத்து 8 கிலோ இடவேண்டும். நீர்ப்பாசனம் 15 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும். அறுவடையாக முதல் அறுவடை ஓர் ஆண்டிலும் பிறகு 40 நாட்களுக்கு ஒரு முறையும் எடுக்கலாம். மகசூல் ஆண்டிற்கு 30 டன் கிடைக்கும்.

சூபாபுல்:
சுண்ணாம்பு மற்றும் மணிச்சத்துள்ள நிலங்களில் இது நன்கு வளரும். அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. இதனை தோட்டங்களில் வேலி ஓரங்களில் வளர்த்து உயிர் வேலியாக அமைப்பதுடன் தேவையான பசுந்தீவனத்தையும் பெற முடியும். விதை அளவு ஏக்கருக்கு 3 கிலோ எடுத்துக்கொள்ளலாம். விதை நேர்த்தியாக ஒரு நாள் முழுவதும் நீரில் ஊற வைத்து விதைக்க வேண்டும். அடிஉரமாக தழைச்சத்து 20 கிலோஇ மணிச்சத்து 24 கிலோஇ சாம்பல் சத்து 12 கிலோஇ மேலுரமாக 60 கிலோ சூப்பர் பாஸ்பேட் கொடுக்கவேண்டும். வளம் குறைந்த பகுதியில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்இ வளமான பகுதியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் கோடைகாலங்களில் 6 வாரங்களுக்கு ஒரு முறையும் கொடுக்கவேண்டும். கடுமையான வறட்சியைத் தாங்கக் கூடியது. 5 முதல் 6 மாதங்களுக்கு ஈரம் காயாமல் இருப்பது நல்லது. முதல் அறுவடை ஓர் ஆண்டில். பிறகு அடுத்தடத்த 40 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். மகசூலாக ஆண்டிற்கு40 டன் கிடைக்கும்.

கிளைரிசிடியா:
குறுமர வகையைச் சேர்ந்த இம்மரம் அனைத்து வகையான மண்ணிலும் வளரக் கூடியது. விதை நேர்த்தியாக விதைகளை மணலுடன் சேர்த்துக் குத்தலாம் அல்லது 80 டிகிரி செ.கி வெந்நீரில் 5 நிமிடங்கள் வைக்கலாம். அடிஉரமாக தழைச்சத்து 20 கிலோஇ மணிச்சத்து 24 கிலோஇ சாம்பல் சத்து 12 கிலோ இடவேண்டும். நீர்ப்பாசனமாக 15 நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்சவேண்டும். நட்ட 6 மாதங்களிலும் பின் 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். மகசூல் ஒரு மரத்தில் ஒர் ஆண்டில் 30 கிலோ பசுந்தீவனம் கிடைக்கும்.

பசுந்தீவனம் கொடுக்கும் முறை:
பசும்புல் மற்றும் தானியவகைத் தீவனப் பயிர்களில் புரதச் சத்து குறைவாகவே உள்ளது. ஆனால் பயறுவகைத் தீவனங்களில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. ஆகையால் இவ்விரு வகைத் தீவனங்களையும் 3:1 என்ற விகிதத்தில் கலந்து சமச்சீர் உணவாக மாடுகளுக்கு அளிப்பது அடர்தீவனத் தேவையைக் குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கும். பால் கறக்கும் மாட்டிற்கு 20 முதல் 25 கிலோ வரையிலும், சினை மாடுகளுக்கு 15 முதல் 20 கிலோ வரையிலும், பால் வற்றி சினையின்றி உள்ள மாடுகளுக்கு 10 முதல் 15 கிலோ வரையிலும் பசுந்தீவனம் தர வேண்டும். மேலும் பசுந்தீவனங்களை அப்படியே தீவனத் தொட்டியில் போடுவதை விட சிறு சிறு துண்டுகளாக தீவன நறுக்கி கொண்டு நறுக்கிப் போடுவதால் மாடுகளின் தீவனம் உட்கொள்ளும் அளவு கூடுவதோடு, தீவன விரயம் 20 முதல் 30 சதவிகிதம் வரை குறைகிறது. மாடுகள் இலை மற்றும் தண்டு என்று பாகுபாடு இன்றி அனைத்து பாகங்களையும் உட்கொள்வதுடன் தீவனத்தின் செரிமானத் தன்மையும் கூடுகிறது. மாடுகளுக்குக் கிடைக்கும் நிகர எரிசக்தியின் அளவும் அதிகரிக்கிறது. எனவே தீவனச் செலவும் அதிக அளவில் குறையும்.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்