நெல் சாகுபடி செய்ய ஏற்ற பட்டங்கள் ஓர் பார்வை

பரபரப்பான வாழ்க்கை உலகில் பாரம்பரிய முறைகளை கை நழுவ விட்டது என்னமோ உண்மைதான். பாரம்பரியம் என்பது பழமையான முறையல்ல அது வரைமுறை என்பது பொருள். வரைமுறை என்பது வேறொன்றுமில்லை. ஒரு விளை பொருளை உற்பத்தி செய்யக்கூடிய முறையான வழிமுறைகள் அவ்வளவுதான். இன்னும் எளிமையாக கூறினால் ஒன்று கூட்டல் ஒன்று = இரண்டு. இது மூன்றாகது. அப்படித்தான் இப்படித்தான் பயிரிட வேண்டும். இதற்கு இன்ன உரமிட வேண்டும். இந்த மண்தான் ஏற்றது. தண்ணீரை இத்தனை முறை பாய்ச்ச வேண்டும். இத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற வரைமுறையின் படி பயிர் செய்வதே பாரம்பரியம் ஆகும்.

இவை எல்லாவற்றையும் விட, அது நம் முப்பாட்டன் காலத்திலிருந்து வழி வழியாக வந்த ரகங்கள் ஆகும். அதாவது ஹைபிரிட் ரகங்கள் இல்லாதவைகள். பாரம்பரியத்தை மறந்தோம் நாம் அனைவரும் பலத்தை இழந்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்துள்ள தருணத்தில் நாம் மீண்டும் அதை நோக்கி பயணிப்பதில் மகிழ்ச்சியே. இந்த பதிவில் நெல் ரகங்கள் குறித்தும், அதை விதைக்கும் பட்டங்கள் குறித்தும் நாம் பார்ப்போம்.

அறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற குறுகிய கால (60 முதல் 120 நாட்கள்) ரகங்கள், குறுவைப் பட்டத்துக்கு ஏற்றவை. தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிகப்புக் கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடவாழை போன்ற மத்தியகால (130 முதல் 140 நாட்கள்) ரகங்கள், சம்பா பட்டத்துக்கு ஏற்றவை.

மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, தங்கச் சம்பா, நீலஞ்சம்பா, வாடன் சம்பா போன்ற நீண்டகால (140 முதல் 200 நாட்கள்) ரகங்கள், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஏற்றவை தமிழ்நாட்டில் எந்தெந்தப் பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது? ”நவரை, சொர்ணவாரி, கார், குருவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி” ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நவரைப் பட்டம் :

 • டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலம், நவரைப் பட்டம். இப்பட்டத்துக்கு 120 நாட்களுக்குக் குறைவான
  வயது கொண்ட குறுகிய கால நெல் ரகங்கள் ஏற்றவை.
 • திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப் புரம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, தேனி, சேலம், நாமக்கல்,
  திண்டுக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்களில் இப்பட் டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
சொர்ணவாரிப் பட்டம் :
 • ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையி லான காலம், சொர்ணவாரிப் பட்டம். இதுவும், 120 நாட்களுக்குக் குறைவான வயது கொண்ட
  குறுகிய கால நெல் ரகங்களுக்கு ஏற்ற பட்டம்.
 • திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சொர்ணவாரிப்
  பட்டத்தில் சாகுபடி நடக்கிறது.
கார் பட்டம் :
 • மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலம், கார் பட்டம். இதிலும் குறுகிய கால நெல் ரகங்கள்தான் சாகுபடி செய்யப்படுகிறது.
 • திருநெல்வேலி, கன்னியா குமரி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தருமபுரி
  ஆகிய மாவட்டங்களில் இப்பட்டத்தில் சாகுபடி நடக்கிறது.
குறுவைப் பட்டம் :
 • ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலம், குறுவைப் பட்டம். இதுவும் குறுகிய கால நெல் ரகங்களுக்கு ஏற்றது.
 • திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக் கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறுவை
  சாகுபடி நடக்கிறது.
முன் சம்பா பட்டம் :
 • ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலம், முன் சம்பா பட்டம். இதில், 130 நாட்கள் முதல் 135 நாட்கள் வயது கொண்ட மத்திய கால மற்றும் நீண்டகால ரகங்களுக்கு ஏற்ற பட்டம்.
 • திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், மதுரை, தேனி, ராமநாதபுரம், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இப்பட்டத்தில் நெல் சாகுபடி நடக்கிறது.
பின் தாளடி :
 • அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலம், பின்தாளடி பட்டம். 115 முதல் 120 நாட்கள் வயது கொண்டகுறுகிய கால நெல் ரகங்களை இப்பட்டத்தில் பயிரிடலாம்.
 • தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பின் தாளடி சாகுபடி செய்யப்படுகிறது.
சம்பா பட்டம்:
 • ஆகஸ்ட் மாதம், சம்பா பட்டம். மத்திய கால ரகம் மற்றும் நீண்ட கால ரகங்கள் இப்பட்டத்துக்கு ஏற்றவை.
  தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சம்பா சாகுபடி நடக்கிறது.
பின் சம்பா/தாளடி/ பிசாணம் பின் பிசாணம் :
 • செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில காலம் பின் சம்பா பட்டம். இது தாளடி, பிசாணம் எனவும் சொல்லப்படுகிறது.
  மத்திய கால ரகம் மற்றும் அதற்குமேல் நீண்ட கால ரகங்களுக்கு ஏற்ற பட்டம்.
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
1
+1
6
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
பகிருங்கள்