ஆலோசனைகள்நெற்பயிர்பூக்கள்

நெற்பயிரிரைத் தாக்கும் பூச்சிகளைத் தடுக்கும் இயற்கை மருந்துகள்

Insects attack rice

நெற் பயிரை பல வகையான பூச்சிகள் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

பச்சை தத்துப்பூச்சி

ஐ. ஆர் 50, சி ஆர் 1009, கோ 46, பட்டாம்பி 2 மற்றும் 18 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்த வேண்டும். விளக்குக் கம்பத்தின் அருகில் நாற்றாங்கால் அமைப்பதை தவிர்க்க வேண்டும். 20 சென்ட் நாற்றாங்காலுக்கு 12.5 கிலோ வேப்பபுண்ணாக்கினை இட வேண்டும். நாற்று நட்ட நாள் முதல் 3 நாட்கள் வரை 2.5 சென்டி மீட்டர் அளவு நீரானது இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.

பழுப்புஇலை தத்துப்பூச்சி

பையூர் 3, கோ 42, ஆஷா, திவ்யா, அருணா, கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ண வேணி போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். நடவு வயலில் ஒவ்வொரு 2.5 மீட்டர் அகலத்திற்கும் 30 சென்டி மீட்டர் இடைவெளி விட வேண்டியது கட்டாயம். தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல். விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல். மேலும் 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு (25 கிலோ / ஹெக்டர்) அல்லது 2 சதவிகித வேப்பஎண்ணெய் (10 லிட்டர் / ஹெக்டர்) தெளிக்க வேண்டும்.

வெண் முதுகு தத்துப் பூச்சி

இந்த வகையான பூச்சிகளுக்கு முட்டை ஒட்டுண்ணியான, அனாகிரஸ் எனும் பூச்சியின் முதிர்பூச்சி மற்றும் இளங்குஞ்சுகளை வயலில் விடுவிக்கலாம்.

மாவுப் பூச்சி

நாற்று நடுவதற்கு முன்பாக வரப்புகளில் உள்ள புற்களையும், களைகளையும் அகற்ற வேண்டும். தாக்கப்பட்ட பயிர்களையும் சேர்த்து அழிக்க வேண்டும்.

நெல் கருநாவாய்ப் பூச்சி

களைகள் இல்லாமல் நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும். தேவைக்கு அதிகமான நீரை அகற்ற வேண்டும். விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல். கருநாவாய்ப் பூச்சிகளை, வாத்துகளை நாற்றுகளில் விடுவதன் மூலம் கட்டுப்படுத்துதல்.

கதிர் கருநிற நாவாய்ப் பூச்சி

வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம். நொச்சி இலைப் பொடியின் சாறு 5 சதம்.

நெல் தண்டுதுளைப்பான்

ரத்னா, ஜெயா, டி.கே.எம் 6 , ஐ. ஆர் 20 & 26 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல். நாற்றுப் பறித்து நடவு செய்வதற்கு முன் நாற்றின் நுனியைக் கிள்ளி எடுத்தல் வேண்டும். இதனால் பூச்சிகளின் முட்டைகளையும் அகற்றலாம். முட்டைகளை சேகரித்து அழித்தல். பாதிக்கப்பட்ட கொத்தினை பிடுங்கி அழித்தல். டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30-வது மற்றும் 37-வது நாட்களில் விட வேண்டும்.

வேளாண்மை தகவல்

ச.சுப்பையன்
வேளாண்மை உதவி இயக்குநர்
கொள்ளிடம்

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button