பயிர்களுக்கு ஏற்படும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை சரி படுத்துவதற்காக திரமி – நொதித்த தாவரசாறு (TFPE) பயன்படுகிறது. எனவே விவசாயிகள் தங்களது பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்திற்கு திரமி நொதித்த தாவரசாற்றினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை எங்கும் வெளியில் சென்று வாங்கத் தேவையில்லை, இதனை மிக எளிமையாக நீங்களே செய்யலாம். எப்படிச் செய்வது என்றும், அதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் இதனைப் பயன்படும் முறை, நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
தேவையானபொருட்கள்
- (அ) புளி அல்லது துத்தநாகம்,
- (ஆ) அவரை, செம்பருத்தி, அல்லது வல்லாரை (செம்பு),
- (இ) கறிவேப்பிலை, முருங்கை இலை, அல்லது பிற கீரை இலைகள் (இரும்பு),
- (ஈ) எருக்கு (போரான்),
- (உ)அனைத்து வகையான மலர்கள் (மாலிப்டினம்),
- (ஊ) துத்தி (கால்சியம்),
- (எ) எள் அல்லது கடுகு தாவரங்கள் (கந்தகம்),
- (ஏ) வெண்டை இலை (அயோடின்),
- (ஐ) லாண்டானா காமரா, கசுரினா, அல்லது மூங்கில் (சிலிக்கா),
- (ஒ) நெய்வேலி காட்டாமணக்கு (அரைக்கப்பட்ட நெய்வேலி காட்டாமணி) (பாதரசம்), (கே) கிலைரிசிடா (நைட்ரஜன்)
- துளசி, நொச்சி, வேம்பு, கற்றாழை (பூஞ்சை, பாக்டீரியா, மற்றும் மேல் சாம்பல் நோய் எதிர்ப்பு உருவாக்க).
சித்த மற்றும் ஆயுர்வேத அமைப்புகள் அடிப்படையில் மேலே உள்ள தாவரங்கள் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தயாரிப்பு:
- மேலே உள்ள பட்டியலில்இருந்து 5 கிலோ இலைகள் மற்றும் தாவரங்கள் சேகரிக்க வேண்டும்.
- பயிர்கள் நுண்ணூட்டக் குறைபாடு பொறுத்து தாவரங்களை தேர்ந்தெடுக்கவும்.
- சிறிய துண்டுகளாக நறுக்கி கசக்க வேண்டும்.
- பத்து லிட்டர் நீரில் 250 கிராம் வெல்லம் சேர்க்க வேண்டும்.
- 250-300 மில்லி திறன் நுண்ணுயிர் சேர்க்கவும்.
- 7-10 நாட்கள் கலவையை நொதிக்கவிட வேண்டும். இது பத்து லிட்டர் கரைசல் வழங்குகிறது.
பயன்பாடு:
- 90 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
- தெளிப்பு : 5-10% .
- நீர்ப்பாசனம் : ஏக்கருக்கு 10-20 லிட்டர்
நன்மைகள்
- நுண்ணூட்டச்சத்து குறைபாடு சரி செய்வதற்கு
- பூச்சிவிரட்டியாக செயல்படுகிறது ,
- எதிர்ப்பு தூண்டுகிறது.
2) நீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு
தேவையான பொருட்கள்:
- (அ) குளோரின் இல்லாத 20 லிட்டர் குடிநீர்
- (ஆ) 1 கிலோ வெல்லம்,
- (இ) 1 லிட்டர் திரமி கரைசல்.
தயாரிப்பு
- ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இந்த கலவையை கலக்க வேண்டும் மற்றும் இதனை கொண்டு இருபது ஒரு லிட்டர் பிளாஸ்டிக் ஜாடிகளை நிரப்ப வேண்டும்.
- பாட்டில் மூடிகளை இறுக்கமாக மூட வேண்டும். பல்வேறு நுண்ணுயிர்கள் பெருக்கத்திற்காக 7-10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு பாட்டிலிலும் மீத்தேன் வாயு உருவாகி இருக்கும்.
- முதல் அல்லது இரண்டாவது நாளில் தொப்பியை திறந்து வாயுவை வெளியேற்றி மீண்டும் இறுக்கமாக மூடவும்.
- இதை அடிக்கடி தேவையான பொழுது செய்யவும்.
- ஒவ்வொரு திறக்கப்படாத பாட்டில்களில் உள்ளடக்கங்களை 3-4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
பயன்பாடு
- 5-10 லிட்டர் நுண்ணுயிர் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
- இது வளர்ச்சி மற்றும் பூச்சிகள் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது. 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் பயிர் எச்சங்கள் சிதைவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு 3-6 லிட்டர் என்ற விகிதத்தில் பாசன நீரிலும் பயன்படுத்தப்படுதலாம்.
3) திரமி சிகிச்சை மாட்டு சிறுநீர் (TTCU)
தேவையான பொருட்கள்:
(அ) 5 லிட்டர் மாட்டு சிறுநீர்,
(ஆ) 250 கிராம் வெல்லம்,
(இ) 250 மில்லி திறன் நுண்ணுயிரி.
தயாரிப்பு:
- அனைத்தையும் கலந்து, 7-10 நாட்களுக்கு நொதிக்க விடவும்.
பயன்பாடு
- 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
தெளித்தல்:
- ஒரு லிட்டர் நீரில் 3-5 மில்லி கலக்கவும்.
- பாசன நீரில் 20-30 லிட்டர் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.
- இது பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
+1
+1
+1
+1
+1
+1