வீடியோக்கள்

நாய்களை தாக்கும் பார்வோ வைரஸ் தடுக்கும் முறைகள்

தமிழ் விவசாயம் | Hello Madurai | App | TV | FM | Web

நாய்களை தாக்கும் பல்வேறு நோய்களில் பார்வோ வைரஸ் எனுமு் நோயும் ஒன்று. காற்றின் வாயிலாக பரவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நாய்கள் பிழைப்பது என்பது கடினமான செயல் என்றாலும், சரியான தொடர் சிகிச்சையின் வாயிலாக அவற்றை காப்பாற்ற முடியும் என்கின்றார் மதுரை பழங்கானத்தம் அரசு கால்நடை மருத்துவரான உயர்திரு A.ஜெயகோபி அவர்கள்.

பார்வோ வைரஸ் பாதிப்பில் இருந்து பல நாய்களை மீட்டுள்ள இவர் கூறுகையில், குட்டிகளை மட்டும், குளிர் காலங்களில் தாக்கி வந்த நிலை இன்றைக்கு மாறி அனைத்து வயதுடைய நாய்களையும் இந்த நோய் தாக்குகின்றன. அதேபோல் மழைக்காலங்களில் மட்டுமே பரவி வந்த இந்த நோய் தற்போது ஆண்டு முழுவதும் பரவி வருகின்றது என்கிறார்.

மேலும் சீமை நாய்களுக்கு மட்டுமல்லாது ( வெளிநாட்டு நாய்கள்) நம் நாட்டு நாய்களையும் இந்த நோய் தாக்குகிறது. இந்த நோய் 90 சதவீதம் வராமல் தடுப்பதற்கு குட்டியாக இருக்கும் பொழுது சரியான நேரத்தில் அதற்கான தடுப்பூசி போடப்பட்டால் இதனை நிச்சயமாக தடுக்கலாம். இதற்கான தடுப்பூசிகள் உள்ளது என்கின்றார்.

தற்போது பார்வோ வைரஸ் பரவி வரும் வேளையில் நாய் வளர்ப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி தடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் இந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த பயனுள்ள வீடியோ வழங்கிய மரு்துவர் உயர்திரு A.ஜெயகோபி அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்காக மருத்துவர் உயர்திரு A.ஜெயகோபி அவர்களின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து தேவைற்ற அழைப்புகளை கொடுத்து அவரை தொந்தரவு செய்யாதீர்கள். ஏனெனில் மருத்துவர் தினமும் கால்நடைக்கு சிகிச்சை வழங்கிக் கொண்டு இருப்பார். தவிர்க்க முடியாத முக்கியமானவந்றுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் மருத்துவரிடம் அடுத்து என்ன கேட்கலாம் என்பதை பதிவு செய்தால் அந்த நோய் குறித்த வீடியோ பதிவு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றிகள் !!

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!