செய்திகள்மானியம் & கடன்

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க அரசு மானியத்துடன் கடன் வசதி

Poultry farm

கால்நடை வளர்ப்பில் மிக சிறந்த மற்றும் எளிய தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொழில் கருதப்படுகிறது. கோழியிலும் பிராய்லர் கோழி வந்த பின்பு, நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் எண்ணத்திலும், நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும் தேனி மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் இணைந்து மானியம் (Subsidy) பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்வேத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மானியக் கடன் வழங்கப்பட உள்ளது.

50% மானியம் – மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 5 நாள் பயிற்சியுடன் தினமும் ரூ.150 ஊக்கத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதில் ரூ.75 ஆயிரம் பின்னேற்பு அரசு மானியமாக வரவு வைக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியான நபர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி, உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!