தமிழ் விவசாயம் நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கிடைமாடுகள் கீதாரிகள் குறித்து இது இரண்டாவது வீடியோ. தொட்டியம் பட்டி கிராமத்தில் கிடைமாடுகளும், அதை மேய்க்கும் கீதாரிகள் இருப்பதாக நமது நேயர் அளித்த தகவலின்படி, நாம் அங்கு சென்றோம். வெயில் பெரிய அளவில் இல்லை. ஆடி மாதம் துவக்கம் என்பதால், பலத்த காற்றுக்கு இடையில் நமது பயணம் ஆரம்பமானது.
அவணியாபுரம் ஏர்போர்ட் பகுதியை கடந்து, திருமங்கலம் செல்லும் நான்கு வழிச் சாலையின் வழியில் உள்ள டோல்கேட்டை தாண்டிய சிறிது தூரத்தில் இடதுபுறமாக ஒரு சாலை செல்லும். அதன் வழி சென்றால் தொட்டியம்பட்டியை அடைந்துவிடலாம். தொட்டியம்பட்டி கிராமம் அவ்வளவு அழகு. மல்லிகை பூ, பருத்தி மற்றும் வெண்டைக்காய் சாகுபடியை வழி எங்கும் காண முடிந்தது. அதை ரசித்துக் கொண்டிருக்கும் கணத்தில் வெண்கல மணி ஓசை சத்தம் நம் காதுகளில் விழ, அதை நோக்கிச் சென்றோம்.
தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஐங்கரன் என்பவர் மூன்றாவது தலைமுறையாக கீதாரி பணியை அதாவது மாடு மேய்க்கும் தொழிலை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருவதாக நம்மிடம் தெரிவித்தார். மல்லிக்கை பூச் செடிகள் ஓய்ந்திருப்பதால், அதை ஆர்வமாக மேய்ந்து கொண்டிருந்த கிடை மாடுகள், அருகில் இருக்கும் தோட்டத்திற்குள்ளும் நுழைய முயற்சிக்க, அதை தடுக்கும் பணியில் இருந்த காரணத்தால், அவர் மாடுகளை கவனித்துக் கொண்டே நமது கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தொட்டியம் பட்டி பகுதியில் 3000க்கும் மேற்பட்ட நாட்டுமாடுகள் உள்ளது. எங்க தாத்தா காலத்தில் இதுபோல் மூன்று மடங்கு நாட்டு மாடுகள் இங்க இருந்ததாக சொல்வாங்க. எங்க குடும்பத்தில் தற்போது 800 நாட்டு மாடுகள் இருக்கு. எல்லாமே புலிக்குளம் மாடுதான். என்கிட்ட மட்டும் 400 மாடுகள் இருந்தது. அதில 200 மாடுகளை வித்துட்டு, மேய்ப்பதற்கு மட்டும் 200 மாடுகளை இப்ப வச்சுருக்கேன்.
இந்த மாடுகளை கிடைக்கு போட்டா ஒரு நாளைக்கு ரூ.2000 கொடுப்பாங்க. நாங்க மதுரையைச் சுத்தி 300 கி.மீ தூரம் வரைக்கும் போவது வழக்கம். ஆறு மாசம் தொடர்ந்து வெளியில் சென்று கிடைக்கு அமர்த்தியிருக்கோம். அதன் பிறகு தொட்டியம்பட்டிக்கு வந்துருவோம். மறுபடியும் கிடைக்கு கூப்பிட்டாக போவோம். என் கூட இன்னும் சில பேர் அவுங்க மாடுகளை மேய்ச்சுக்கிட்டு மொத்தமாகத்தான் கிளம்புவோம். பைக்ல சமையல் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு போவோம்.
போகும் வழியில் நான்கு வழிச் சாலையை கடக்கும்போது, சில நேரம் லாரி, கார் னு மாடுகள், கன்றுகள் மீது மோதும் சம்பவம் நடக்கும். இப்டி பல மாடுகள் இறந்து போயிருக்கு. சில நேரம் அதற்கான பணம் கொஞ்சம் கிடைக்கும். பல நேரம் மாடு போனதுதான் மிச்சம். அதேபோல குட்டிகள் திருட்டும் நடக்கும். இப்டி ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு பிரச்சனை வரும். அதை எல்லாம் சமாளிச்சுக்கிட்டுதான் கிடை போடுவோம்.
கேரளாவில் இருந்து லாரியில் சாணிய எடுத்துகிட்டு போவாங்க, அதுதான் எங்களோட முக்கியமான நிரந்தர வருமானம். அதற்கு அப்புறமா ? ஜல்லிக்கட்டுக்கு காளை கன்று குட்டி வாங்க வருவாங்க. அதுவும் எங்களுக்கு வருமானம்தான். நாட்டு மாட்டு பாலை கறப்பதில்லை. எங்க வீட்டு தேவைக்கு மட்டும்தான் அதை பயன்படுத்துவோம். பொதுவா பசுங்கன்றுகளை கொடுப்பதில்லை. காளை கன்றுதான் கொடுக்குறோம். மூனு மாசம், 4 மாசம் கன்னுதான் கொடுப்போம். ஒரு கன்று பத்தாயிரம் முதல் 13 ஆயிரம் வரை கொடுப்போம். எங்க கிட்ட கரிசல் மாடுதான் அதிகமிருக்கு. காரிமாடு ஒன்று இரண்டுதான் இருக்கு. மற மாடு கன்று மட்டும் விலை இன்னும் கூடுதலா போகும்.
கிடைமாடுகளுக்கு நோய் எதுவும் வராது. கானை நோய் வரும் அதற்கு நாட்டு வைத்தியம்தான் பார்ப்போம். கிடையில இராத்திரி நேரத்தில பூச்சி, பொட்டனு எல்லாமே இருக்கும். ஆனா அதுலாம் எங்கள ஒன்னும் செய்யாது. எங்க மாடு ஒவ்வொன்னும் ஒவ்வொரு பேரு இருக்கு. எல்லாமாடுகளும் எங்களுக்குத் தெரியும். எந்த கன்று எந்த மாட்டோடதுன்னு சொல்லியிருவோம். இதுல கிடைக்குற வருமானம் எங்க குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கு. காலையில 10 மணியில இருந்து சாய்ந்தரம் 6 மணி வரை மேய்ச்சலுக்கு விடுவோம். இப்டி அறு மாசம் காட்டுலையும், ஆறு மாசம் வீட்டுலையும் இருப்போம் என்று இத்தனையுமத் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடை இடையில் மாடு அங்க போகுதுபாரு மடக்குடா… கிழக்க பாயுது பாரு திருப்புடா… அடுத்த தோட்டத்துக்குள்ள நுழையுது… விரட்டுடா… என்று ஐங்கரன் கண்ணு பூராவும் மாடு மேலதான் இருந்தது.
நன்றிகள்
________________________________________________________
ஹலோ மதுரை சேனல்
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
? App Link: https://play.google.com/store/apps/de…
? Facebook :https://www.facebook.com/maduraivideo
?web site : https://hellomaduraitv.com/
?web site : https://hellomadurai.in/
?web site : https://tamilvivasayam.com/
? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
கீதாரி #கிடைமாடு #மலைமாடு #ஜல்லிக்கட்டு #நாட்டுமாடு #cow #cows #farm #nature #cowsofinstagram #cattle #animals #farmlife #milk #calf #love #bull #photography #farming #animal #k #agro #dairy #farmer #kuh #cowstagram #naturephotography #agriculture #cowboy #vaca #moo #photooftheday #horse #art #bhfyp #indiabulls #hcl #tcs #india #embassyresidency #elcot #microsoft #accenture #techmahindra #malles #ibm #perumbakkam