எண்ணெய்கள்

தேங்காய் எண்ணெய் பற்றி தெரிந்து கொள்வோம்

Coconut Oil

தேங்காய் எண்ணெய் தனித்துவம்:

தேங்காயில் (Coconut) இருந்து பெறப்படும் எண்ணெய்  தான் தேங்காய் எண்ணெய். நல்ல நறுமணம்(Aroma), நீர்ச்சத்து(Water content) நிறைந்தது. குறைவான கொழுப்புஅமிலம் (Fatty acids) கொண்டது. தேங்காய் எண்ணெயை தலைக்கு தான் பயன்படுத்துவோம் ஆனால் தேங்காய் எண்ணெயை சமையலில் (Cooking oil) பயன்படுத்துவதன் மூலம், சமையல் நல்ல ருசியுடனும் (Tasty), மணத்துடனும் (Flavor) இருக்கும். பல விதமான பிரச்சனைகளுக்கு வீட்டு சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம். அது அழகு பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடல்நல பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடனடி தீர்வுக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் பயன்கள் (Benefits):

தேங்காய் எண்ணெய் சருமத்தை(Skin) பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது.சரும வறட்சியை (Skin dryness) போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக (Moisturizer) செயல்படுகிறது. தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும். மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம்.

கூந்தலை பாதுகாப்பதில் (Hair) தேங்காய் எண்ணெய்க்கு நிகர் எதுவுமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச் சத்து(Protein) காணப்படுகிறது. இந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் ஊறவைத்து குளிப்பதன் (Oil bath) மூலம் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடையும், பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் (Depression) நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது.  தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள்(Body Pain) நீங்கும். தோல் நோய்கள்(Skin Disease) நீக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரியா(Anti Bacterial) எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுமல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது.

ஜீரண சக்தியை சீராக்கி (Digestion) மலச்சிக்கலை (Constipation) நீக்குகிறது. தோல்களில் மற்றும் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்குகிறது. ஒப்பனை (Makeup) செய்யும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!