ஜல்லிக்கட்டிற்கு ஏன் இத்தனை போராட்டம் ? அப்படி என்ன இருக்கிறது இதில் ? வீரவிளையாட்டுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன பெரிய தொடர்பு ? மதுரைக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன உறவு ? என்று கேட்பவர்கள் பலரும் நகர்பறத்தைச் சார்ந்தவராக இருப்பார்கள். இதுவே கிராமத்தில் இருந்தால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவராகவோ அல்லது மாடுபிடி வீரராகவோ இருப்பார்கள்.
ஆமாம்.. மதுரையில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்குச் சென்றால் ஜல்லிக்கட்டின் பெருமை தெரியும். அப்படி ஒரு கிராமம்தான் ஆ.கொ.தேங்கல்பட்டி. இந்த கிராமம் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஏ. கொக்குளம் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
செக்கானூரணி கிராமம், மதுரை – உசிலம்பட்டி நெடுஞ்சாலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு மேற்கே 5 கிமீ தொலைவிலும், திருமங்கலத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், மதுரைக்கு மேற்கே 17.5 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625514 ஆகும். இது திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
தேங்கல்பட்டி எனும் இந்த கிராமத்தில் ஒரு பகுதிதான் தேங்கல்பட்டி காலணி. இங்கு 40க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 25க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு மாடுகளும் உள்ளது. முதன் முதலாக கோவில் மாடு மட்டுமே இருந்து வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் இத்தனை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள 5 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை, ஆண், பெண் என இருபாலரும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவது ஆச்சர்யம்தான். நம்மை இக்கிராமத்தைச் சேர்ந்த மாரி ( காவல்துறை பணி ) என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் ஊரில் முட்டுகிடா மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கின்றோம் எடுக்க வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பெட்ரோல் செலவும், மதிய உணவும் எங்களுக்கு வழங்கினால் வருகின்றோம் என்று தெரிவிக்க, அதன்படி அங்கு சென்றோம். முதலில் கிடா முட்டு வீடியோ பதிவு செய்துவிட்டு, ஜல்லிக்கட்டு வீடியோ பதிவுக்கு அருகில் இருக்கும் தேக்கல்பட்டி காலணிக்குச் சென்றோம். அந்த பகுதி சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை நம்மை வரவேற்பதைக் கண்டு திகைத்துவிட்டோம்.
முக்கியமாக இங்குள்ள இளைஞர்கள் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தைக்கு ஒற்றுமையுடன் இருப்பதை எங்களால் உணர முடிந்தது. தாங்கள் வளர்க்கும் காளையை மரத்தில் வரிசையாக கட்டிவைத்திருந்தினர். 12 மணிக்கு ஆரம்பமான வீடியோ பதிவு 3.30 மணி வரை தொடர்ந்தது. கோவில் காளையுடன் துவங்கி குரூப் வீடியோ வரை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைத்தது. நாங்கள் இதுவரை எடுத்த வீடியோ பதிவில் மறக்க முடியாத பதிவு என்றால் அது இதுதான்.
எல்லாவற்றையும் தாண்டி, இருவரின் நினைவு நாள் போஸ்ட்டரை காட்டி இவர்கள் மாடுபிடி வீரர்கள், இருவரும் சமீபத்தில் இறந்துவிட்டனர். இவர்களையும் கட்டாயம் பதிவு செய்யுங்கள், இதில், செ.வெண்டி கருப்பு அவர்கள், சிறந்த மாடுபிடி வீரர். இப்பகுதி இளைஞர்களை உருவாக்கிய ஜல்லிக்கட்டு வீரர்.
நாங்கள் களத்திற்கு செல்லும்போதெல்லாம் இவரை வணங்கித்தான் செல்வோம் என்ற போது, இவர்களின் நன்றி மறவாத அன்பு வெளிப்பட்டது. ஆதலால் அவர்களுக்கு இந்த வீடியோவை சமர்பணம் செய்கின்றோம். இதை விட மகிழ்ச்சி இவர்களுக்கு வேறு நிச்சயமாக இருக்கப்போவதில்லை.
வீடியோவிற்கான ஏற்பாட்டினை செய்த சகோதரர், கடைசி வரை ஒரு ஓரத்தில் நின்றபடி, எங்கள் ஊர் காளை வந்தால் போதும், எங்க ஊர் மாடுபிடி வீரர்கள் வந்தால் போதும், எங்க ஊர் சின்ன பசங்களையும் எடுங்க என்று கூறிய அவர், கடைசி வரை தன்னை எந்த இடத்திலும் முன்னிலைபடுத்தவில்லை. அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து பெரும் ப்ரியங்களுடன் கிளம்பினேன்.
இறுதியாக கிளம்பும் பொழுது இவ்வளவு நேரம் ஆகும் என்று தெரிந்திருந்தால் எங்கள் வீட்டில் கறி சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருப்போம் என்ற அந்த ஊர்காரர்களிடம் நிச்சயமாக ஒரு நாள் சாப்பிடுகின்றோம் என்று வாஞ்சையுடன் தெரிவித்துக் கொண்டு, செக்கானூரணி முனியாண்டி ஹோட்டலுக்கு இருவர் நம்மை அழைத்துச் சென்றனர்.
ஒரு அசைவ சாப்பாடு ஒரு வெட்டு வெட்டிவிட்டு, பயணச் செலவாக ரூ.500 பெற்றுக் கொண்டோம். ஒவ்வொரு இடமும், எங்களுக்கு ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கிறது. வேந்தல்பட்டி, பயணம் தொடரும் என்ற நம்பிக்கையோடு, நாங்களும் அங்கிருந்து மதுரைக்கு கிளம்பினோம். மீண்டும் அடுத்த அனுபவத்தில் உங்களை சந்திக்கின்றோம்.
நன்றிகள் !!
________________________________________________________
ஹலோ மதுரை சேனல்
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
Hello Madurai M.Raj Kumar – 75022 22602 ( கேமரா மேன்)
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
? App Link: https://play.google.com/store/apps/de…
? Facebook :https://www.facebook.com/maduraivideo
?web site : https://hellomaduraitv.com/
?web site : https://hellomadurai.in/
?web site : https://tamilvivasayam.com/
? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
#ஜல்லிக்கட்டு #மலைமாடு #கிடைமாடு #கீதாரி #jallikattu #manjuvirattu #rekalarace #official #tamil #tamilanda #pollachi #kaalai #tamilnadu #sevalsandai #jallikattulovers #madurai #reklarace #nature #seval #instagram #trending #coimbatore #tamilan #tamilculture #thala #jallikattuforever #kattuseval #savenativebreeds #thalapathy #photography #chennai #sivagangai #kongu #bhfyp