விவசாயம் தமிழர்களின் அடையாளம் மட்டுமின்றி ஆதாரம் ஆகும். ஐய்யன் வள்ளுவர், உலகில் மேன்மையான தொழில் ஒன்று எனில் அது உழவு என கூறியுள்ளார். நமது தேவைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் உணவினை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் விவசாயம் குறித்து “தமிழ் விவசாயம்” என்ற பெயரில் இணையதளம் வெயிடுவதில் மகிழ்கின்றோம்.
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் உணவு சார்ந்த தொழில் நலிவடைவதில்லை என்பதை பல நடைமுறைகளில் நாம் அனைவரும் கண்டுள்ளோம் என்பது நிதர்சனம். வரும் காலங்களில் உணவுப் பொருட்கள் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை மற்றும் ஏற்றுமதி கனிசமாக அதிகரிக்கும்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், விவசாயம், கால்நடைகள், விவசாய கருவிகள், வேளாண் தகவல்கள், கட்டுரைகள், நேரலை வீடியோக்கள், ஆலோசனைகள், செய்திகள், விற்பனைகள், மருத்துவ குறிப்புகள், பூச்சி விரட்டிகள், நீர் மேலாண்மை, உரம் என இன்னும் ஏராளமான தகவல்களை தமிழ் விவசாயத்தில் ஒரு சேர பெறலாம்.
தமிழ் விவசாயம், இணையதளம் மட்டுமின்றி பிரத்யேக செயலி (ஆப் ‡கூகுல் பிளே ஸ்டோர்) வாயிலாக மிக எளிமையாக தரவிறக்கம் செய்து பயன்பெறலாம். எங்களின் செயல்பாடுகள் குறித்து உங்கள் ஒவ்வொருவரின் மதிப்புமிக்க கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்கள் எங்களை இன்னும் பலப்படுத்தும்.
மேலும் விவசாயம் சார்ந்த சந்தேகங்கள், கேள்விகள், ஆலோசனைகள், கட்டுரைகள் மற்றும் விளை பொருட்கள் விற்பனைகள் ஆகியவற்றுக்கு எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். உங்களின் தேவைகள் அதிக பட்சம் 48 மணி நேரத்தில் தீர்த்து வைக்கப்படும். இந்த இணையதளத்தை மற்ற விவசாயிகளுக்கும், பண்ணையாளர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.