கால்நடைகள்வளர்ப்பு, பராமரிப்பு

சொன்னபடி கேட்கும் ஒழுக்கமான கோம்பை நாய்கள் | குட்டி விற்பனை | தமிழ்

Kombai Dog | Tamil

#Nativedog #Kombaidog #Dogseal

உயர்திரு.காந்தி சரவணன் அவர்கள்
தொலைபேசி எண் : 97891 01117
___________________________________________________

🔵 பயண அனுபவம் 🔵

வர்ம ஆசான் உயர்திரு.காந்தி சரவணன் அவர்களை கடந்த ஓராண்டாக தெரியும். வர்ம மருத்துவத்தில் முதிர்ந்தவர். உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் மீது அதிக அக்கறை கொண்டவர். எல்லாவற்றையும் விட மிக எளிமையானவர்.

வயது வித்தியாசம் இன்றி தன்னால் இயன்றவற்றை கொடுப்பதும், தனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதிலும் மிகச்சிறந்தவர். இது என்னுடைய அனுபவ கருத்து.

சமீபத்தில் ஒரு சந்திப்பில், நான் கோம்மை நாய் வளர்க்கின்றேன். தற்போது 5 ஆண் குட்டிகள் போட்டுள்ளது. ஒன்று கொடுத்துவிட்டேன். நான்கு குட்டிகள் உள்ளது. நீங்கள் பதிவு செய்கிறீர்களா என்று கேட்க, சரி என்று சொல்லிவிட்டேன்.

மதுரை தெப்பக்குளம் அருகில்தான் அவரது வீடு. காலை 7 மணி 10 நிமிடம் இருக்கும் அங்கு சென்று அவரை அழைத்தேன். வீட்டிற்கு கூட்டிச் சென்று என்னுடைய நண்பர் என்று அவரது குடும்ப உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்துவைத்து, மூன்றாவது மாடிக்கு என்னை அழைத்துச் சென்றார்.

கோம்பை நாய் குட்டிகளின் சத்தம் படிக்கட்டில் ஏறும்போதே எனக்கு கேட்க, அதன் தாய் மீனு வழக்கம்போல் வேற்று ஆளைக் கண்டதும் குரைக்க ஆரம்பித்துவிட்டாள். எனக்கும் நாய்களுக்குமான பந்தம் உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது.

ஆதலால் சற்று நேரத்தில் மீனு என்னுடன் நெருங்கி செல்லமாவிட்டாள். நானும் அவளும் மாற்றி மாற்றி அன்பை பரிமாறிக் கொண்டோம். அதுவரை பெரிதாக எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதன் பிறகு நான் கொண்டு வந்த பிஸ்கட் ஒன்றை அதனிடம் கொடுக்க, அதை சாப்பிடாமல் திரு.காந்தி அவர்களை பார்த்தது.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சார் No என்றதும் அதை சாப்பிட்வில்லை. Take என்றதும் வாயில் வைக்க வரும், பிறகு No என்றதும் போய்விடும். அதைதான் வீடியோவில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

அதையும் தாண்டி, படு, தூங்கு, எந்திரி, ஹைஃபை என எல்லாமே செய்தது. அடுத்த ஆச்சர்யமான விசயமாக இதுவரை 20 பேரை கட்டிச்சுருக்கு, உஙகளைதான் விட்டுவைத்துள்ளது என்றதும், மீனுவை பார்த்தேன். எனக்கு செல்லமாகத்தான் தெரிந்தாள்.

அதன் பிறகுதான் பேட்டிக்குச் சென்றோம். ஒழுக்கமான நாயை பார்க்கும்போது ஏதோ ஒரு சந்தோசம் இல்லாமல் இல்லை. நமது கட்டளைக்கு கீழ்படியும் செயல் யாருக்குத்தான் படிக்காது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், மீனுவை அடிக்காமல் கீழ்படியும் செயலை காந்தி சரவணன் சார் செய்திருப்பதுதான் ஆச்சர்யம்.

அதன் பிறகு அவர் இன்னொருவரின் வீட்டில் வளர்க்க கொடுத்திருக்கும் ஆண் நாயானா கொம்பனை பார்க்க அழைத்துச் சென்றார். கொம்பனும் அதே போல் சொனன்தை கேட்டு செய்வதை பார்த்து மலைத்துப்போனேன்.

நமது பூர்வீக நாட்டு நாயின் அறிவினைக் கண்டு ஆச்சர்யம் கொள்ளாமல் எப்படி இருக்க ? அழகழகாய் குட்டிகள் பயங்க துடிப்புடன் இருந்தன. எல்லாவற்றையும் பதிவு செய்துவிட்டு, என் நாயை ஐ இப்படி வளர்க்காமல் விட்டுவிட்டுமோ என்று ஆதங்கம் இல்லாமல் இல்லை.

அதே எண்ணத்துடன் வீட்டுக்குள் வந்ததும் எனது டாமை பார்த்து இங்க வா, உக்காரு, அப்டி இப்டி னு ஆர்டர் போட்டேன். தலைவன் சட்டையே பன்னிக்கல… வழக்கம்போல நான் அவனுக்கு கீழ்படிந்து போய்ட்டனே்….

வேறு ஒரு அனுபவ பயணத்தில் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன்… நன்றி… வணக்கம்.
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/de…

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai

_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!