சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி செய்வது எப்படி ?

சத்துக்கள் நிறைந்த கிழங்கு வகைகளில், சர்க்கரை வள்ளி கிழங்கும் விளங்குகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்க மிகவும் பயன்படுகிறது. மேலும் சர்க்கரை வள்ளி கிழங்கில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இரகங்கள்:-

சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை கோ 1, கோ 2, கோ 3 மற்றும் கோ – சிஐபி 1, ஐ ஜி எஸ் பி – 14, வி 6, வி 8, வி 12, எச் 1 மற்றும் தமிழ் நாட்டு இரகங்கள் – எஸ்பி உள்ளூர், முசிறி தண்டல், எஸ்பி 4, எஸ்பி 13, எஸ்பி 18 ஆகிய இரகங்கள் உள்ளன.

சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை, நீர்ப்பாசன வசதிகள் உள்ள இடங்களில் ஜூன், ஜூலை மாதங்களிலும். மற்ற இடங்களில் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி செய்யலாம்.

நிலம்:

சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி(sweet potato cultivation) பொறுத்தவரை, நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்துள்ள செம்மண், கரிசல் மண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. களிமண் பூமி ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை 5.6 முதல் 6.7 வரை இருக்க வேண்டும்.

நிலமேலாண்மை:-

சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடிக்கு (sweet potato cultivation) ஏற்ற நிலத்தை தேர்வு செய்த பின்பு, இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்திய பிறகு, ஒரு ஏக்கருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு 60.செ.மீ அளவில் பார்கள் அமைக்க வேண்டும்.
விதை அளவு:

சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு, 80,000 தண்டுகள் நடவு செய்ய தேவைப்படும்.

விதைத்தல்:

சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை, இந்தியாவில் நுனிக்கொடிகள் மூலம் பயிரிடப்படுகிறது. நடவு செய்ய நுனிக் கொடிகளைத் தேர்ந்தெடுத்து அதை 20 செ.மீ நீளத்திற்குத் துண்டுகளாக்கி நடவு செய்ய வேண்டும்.

கொடியின் மத்தியிலுள்ள பக்கக்கிளைகளையும் உபயோகிக்கலாம். நடுவதற்கு முன்னர் தண்ணீர் கட்டி நுனிக்கொடித் துண்டுகளை 20 செ.மீ நீளத்திற்குத் தயார் செய்து பாரின் பக்கவாட்டில் 15 முதல் 30 செ.மீ இடைவெளியில் வரிசையாக நடவேண்டும்.

மத்தியில் உள்ள கொடித் துண்டுகளை உபயோகித்தால் நுனி, அடி இரண்டும் வெளியே இருக்கும்படி மத்தியில் மட்டும் மண்ணில் புதைத்து நடவேண்டும்.

நீர்மேலாண்மை:-

நடவு செய்த பின்பு மூன்று நாள் நீர் பாசனம் இடவேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்:-

நடவதற்கு முன் ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். பின்பு 15 நாட்கள் கழித்து திரும்பவும் அதே தழை, மணி, சாம்பல் சத்துக்களை இட்டு மண் அணைக்க வேண்டும்.

ஏக்கருக்கு 20 கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தை அளித்தால், பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்:

சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை கிழங்கு நல்ல முறையில் வளர்ச்சியடைய, நடவு செய்த 15 நாட்கள் கழித்து எத்ரல் என்ற பயிர் ஊக்கியை 15 நாட்கள் இடைவேளையில் ஐந்து முறை தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது களை எடுக்க வேண்டும். நடவு செய்த 60 நாட்கள் கழித்து செடிகளை அடிக்கடி தூக்கிப் புரட்டி போட்டு நல்ல வேர்கிழங்குகள் உண்டாகும்படி செய்ய வேண்டும்.

கூன்வண்டு தாக்குதல்:

சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு பென்தியான் 625 மில்லி, கிழங்குகள் எடுக்க ஆரம்பிக்கும் போது 21 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்.

அழுகல் நோய்:

சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொறுத்தவரை அழுகல் நோய் அதிகமாகவே இருக்கும், இந்த அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒரு கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும்.

அறுவடை:

சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொறுத்தவரை அறுவடைக்குத் தயாராக உள்ள கொடிகளின் அடிப்பாகம் பழுப்பு நிறமாக மாறும். கொடிகளின் அடிப்பாகத்தில் நிலத்தில் விரிசல் ஏற்படும்.

சில கொடிகளை அகற்றி கிழங்குகள் நன்கு முற்றிவிட்டனவா என்று பார்த்துப் பின் அறுவடை செய்யவேண்டும். கிழங்கை வெட்டிப்பார்த்தால் பால் போன்ற திரவம் வரும்.

அது விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறியாகும். அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சினால் கிழங்குகளை சேதப்படாமல் அறுவடை செய்ய முடியும்.

மகசூல்:

சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 20 – 30 டன் வரை சர்க்கரைவள்ளி கிழங்கு மகசூலாக கிடைக்கும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்