கால்நடைகளுக்குத் திடீரென்று ஏற்படும் தீவிர நோய்கள் பற்றி ஓர் பார்வை

விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் பசுக்கள், கன்றுகள், காளைகள், எருதுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் போன்ற கால்நடைகளுக்குத் திடீரென்று கடுமையாகச் சில நோய்கள் சாதாரணமாக ஏற்படுகின்றன. இந்த நோய்கள் தோன்றும் பொழுதே கடுமைiயாக ஆரம்பித்துக் குறுகிய காலத்திலேயே கால்நடைகளில் மரணத்தை ஏற்படுத்துகின்றன. சில நோய்கள் மெல்ல ஆரம்பித்து அது முற்றும் வரை அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருந்து கொடிய நிலையில் தான் வெளிப்படையாக அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையான அறிகுறிகளுடன் நோய் தோன்றினாலும் கால்நடைகளின் உரிமையாளர் அல்லது பண்ணையின் பணியாளர் வேறு வேலை காரணமாக நோய்களின் அறிகுறிகளை ஆரம்பத்தில்; கவனிக்காhமல் விட்டு விட்டு நோய் முற்றிய பின் நோயைக் கண்டறிந்து கால்நடை மருத்துவரை நாடுவதும் உண்டு. கால்நடைகளில் திடீரென்று கடுமையாகத் தோன்றிச் சீக்கிரத்தில் மரணத்தின் வாயிலில் கொண்டு நிறுத்தும் சில நோய்களைக் குறித்துக் கால்நடைகளை வளர்ப்போர் தெரிந்து கொள்வதன் மூலம்; காலதாமதமின்றிக் கால்நடை மருத்துவரை அணுகி மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் தமது கால்நடைகளின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

கால்நடைகளைகத் திடீரன்று கடுமையாகத் தாக்கும் நோய்களை பத்து வகையாகப் பிரிக்கலாம். அவை: 1. சில வகைத் தொற்று நோய்கள் 2. நஞ்சுகளை உட்கொள்ளுதல் 3. புரையேறுதல் 4. ஒவ்வாமை; 5. அமில நோய் 6. வயிற்று உப்புசம் 7. கடுமையான வயிற்றுப்போக்கு 8.இருதயத் தசையின் நலிவு 9. பால் சுரம் 10. விபத்துகள்.

1. சில வகைத் தொற்று நோய்கள்:
சப்பை நோய், தொண்டை அடைப்பான், அடைப்பான் நோய் போன்ற சில தொற்று நோய்கள் திடீரென்று கால்நடைகளைத் தாக்கி குறுகிய கால அளவில் கால்நடைகளில் இறப்பை ஏற்படுத்துகின்றன. நோய் பற்றி விசாரிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றிற்கு மேற்பட்ட கால்நடை இனங்கள் நோயினால் பாதிக்கப்படடிருப்பது தெரிய வரும். மற்றும் இந்த நோய்களின் அறிகுறிகளைக் கொண்டு நோயை எளிதில் கண்டுபிடித்து விடலாம். கடுமையான ஜூரம் தொற்று நோய்களுக்கான முக்கியமான அறிகுறியாகும். சப்பை நோயில் முன் சப்பை அல்லது பின் சப்பை தசைப்பகுதியில் நிறம் மாறிய கொர கொரவென்று உணரக்கூடிய வீக்கம் ஏற்படும்.

தொண்டை அடைப்பான் நோயில் வீக்கமானது தொண்டையில் ஏற்பட்டுக் கீழ் நோக்கிப் பரவும். வாயைத் திறந்து கொண்டு சத்தத்துடன் மூசு;சு விடுதல், வாயில் நீர் வழிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். அடைப்பான் நோய் அறிகுறிகளின்றி வெகு குறுகிய காலத்தில் மரணத்தை ஏற்படுத்தும். கால்நடைகள் இறந்தவுடன் தான் நோயின் அறிகுறிகள் தென்படும். இறந்த கால்நடைகளின் இயற்கை துவாரங்களின் வழியாக உறையாத கருமை நிறமான இரத்தம் வெளியேறுவது அடைப்பான் நோயின் முக்கிய அறிகுறியாகும்.

2. நஞ்சுகளை உட்கொள்ளுதல்:
நச்சுப் பொருட்களான ஆர்கானிக், பாஸ்பரஸ், நச்சுத் தாவரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவை கால்நடைகளில் திடீரென்று இறப்பை ஏற்படுத்தக் கூடிய முக்கிய காரணிகளாகும். சுற்றுப்புறங்களை நன்கு ஆராய்வதன் மூலமும், காலநடைகளை பராமரிப்பவரிடம் நன்கு விசாரணை செய்வதன் மூலமும், அறிகுறிகளின் மூலமும் கால்நடைகள் நச்சுப் பொருட்களை உட்கொண்டிருப்பதை கண்டறியலாம்.

வாயைத் திறந்து பரிசோதிப்பதன் மூலம் வாயில் புண்கள் இருந்தால் புண் உண்டாகக்ககூடிய நச்சுப் பொருட்களை உண்டிருப்பதைக் கண்டு கொள்ளலாம். மற்றும் மூச்சு, வாய் இவைகளில் தென்படும் நாற்றம், வாந்தியின் தன்மை போன்றவற்றின் மூலமும் எந்த வகை நச்சுப் பொருட்களை உட்கொண்டுள்ளது என்பதைக் கணடு கொள்ள உதவும். நச்சுச் செடிகளின் இலைகள், குச்சிகள் போன்றவை வாயிலும் கன்னங்களின் உட்பாகங்களிலும் பற்களிலும் சிக்கி இருந்தால் அவைகளைக் கொண்டும் எந்த நச்சுசு; செடியினை உட்கொண்டுள்ளன என்பதை அறியலாம்.

3. புரையேறுதல்:
உட்கொள்ளும் தீவனம் மற்றும் பொருட்கள் சுவாசக் குழாய்க்குள் செல்லும்பொழுது புரையேறுகின்றது. இவ்வாறான அசம்பாவிதங்கள் திரவமாக உள்ள மருந்துகளை வாயில் ஊற்றும் பொழுது உணவுக் குழாய்க்குப் பதிலாகச் சுவாசக் குழாய்க்குள் ஏறிவிடுவால் ஏற்படுகின்றன. பழக்கமில்லாமல் அனுபவக் குறைவாக வாயில் மருந்தை ஊற்றுவதனாலோ, கூழ், கஞ்சி முதலியவைகளை வாயில் ஊட்டும் பொழுதோ, மருந்தை வாயில் ஊற்றும் பொழுது கால்நடைகளைத் துள்ளாமல் பிடிப்பதில் தவறினாலோ, தவிடு முதலிய திடப் பொருட்களை மூக்கிற்குள் இழுப்பதாலோ, ஓன்றை ஒன்று இடித்துக் கொண்டு கால்நடைகள் பரபரப்புடன் தீனியை உட்கொள்ளும் பொழுதோ புரையேறுதல் ஏற்படலாம். ஊற்றப் பட்ட பொருட்கள் சுவாசப் பையில்; அழற்சியை உண்டு பண்ணி நிமோனியா என்ற சுவாசப்பை நோய்க்குக் காரணமாகின்றன.

4. ஒவ்வாமை:
ஒவ்வாமையின் காரணமாகக் கால்நடைகளுக்கு வரும் நோய்களில் அர்டிக்கேரியா, ஏஞ்சியோ நியூராட்டிக் எடிமா, அலர்ஜிக் எம்ஃபைஸீமா மற்றும் அனபிலாக்சிஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நோய்கள் முக்கியமானவை ஆகும். இவைகளில் முதல் இரண்டு நோய்களுக்கும் சருமத்தில் பட்டையான தடிப்புகள் பரவலாகக் காணப்படும். திடீரென்று உடலின் பல பாகங்களில் வீக்கத்துக்கு ஒத்த இந்தத் தடிப்புகள் பார்ப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியையும் பீதியையும் விளைவிக்கக் கூடியதாய் இருக்கும். தகுந்த வைத்தியம் செய்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக உண்டானதோ அவ்வளவு சிக்கிரமாக மறையும் தன்மை உடையன.

தீவிர அலர்ஜிக் எம்ஃபைஸீமா என்று சொல்லப்படும் நோய் உண்மையிலேயே கவலை தரக்கூடியது ஆகும். கடுமையான மூச்சுத் திணறல், சுவாசக் குழாயின் உட்பாகம் வீங்குதல், மூச்சுக்குழாய்கள் அழுத்தப்பட்டுக் குறுகலாக ஆகிவிடுதல், சுவாசக் குழாய்களில் காற்று உட்புக முடியாமல் திணறுதல் போன்றவை இந்நோயின் விளைவுகளாகும். இந்த நோயானது நீண்ட வறட்சிக்குப் பின் மழை பெய்யும் காலங்களில் அதிகம் உண்டாகிறது. ஈரத்தின் காரணமாகப் புதிதாக முளைக்கும் பல வித நச்சுப் புல் பூண்டுகளை மேய்வதின் மூலம் இந்நோய் உண்டாகின்றது.

தொற்று நோய்ளைப் போல் உடலில் சுரம் காணப்படுவதில்லை. தகுந்த சிகிச்சையைத் தாமதமில்லாமல் செய்தால் நல்ல குணம் மிக விரைவிலேயே ஏற்படும். அனபிலாக்சிஸ் என்ற ஒவ்வாமை நோய்;த் தடுப்பு ஊசிகள் போடும் பொழுது திடீரென்று ஏற்படும். மூச்சுத் திணறல், உடல் நடுங்குதல், வாயில் நீர் வடிதல், வயிறு உப்புதல், கழிச்சல்;, கால்நடைகளின் முகம் மாறுபட்டுத் தோன்றுத்ல் போன்ற அறிகுறிகளும், மற்ற ஒவ்வாமைக்கான முன்பு விவரித்த அறிகுறிகளும் தென்படும்.

5.அமில நோய்:
மாவுப்பொருட்களான நெல், அரிசி மற்றும் அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களை கால்நடைகள் அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது ரூமன் எனப்படும் மாடடின் முதல் வயிற்றில் இந்த உணவுப் பொருட்கள் புளித்துப் போய் ஏராளமான லாக்டிக் அமிலம் உண்டாகி அமில நோயை உண்டாக்குகிறது. இந்த அமிலமானது இரத்தத்தில் கலந்து கால்நடைகளில் கடும் நோயை உண்டாக்குகிறது. நோயின் ஆரம்பத்தில் வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம், உடல் வற்றிய தன்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். பின் வெகு விரைவில் நோய் கடுமையாகி கால்நடைகள் எழுந்திருக்க முடியாமல் ஒரு மயக்க நிலையை அடைகின்றன. தக்க தருணத்தில் தகுந்த சிகிச்சையின் மூலம் இந்நோய் கண்ட கால்நடைகளின் உயிர்களைக் காப்பாற்றி விட முடியும்.

6. வயிற்று உப்புசம்:
கால்நடைகளில் பல காரணங்களால், முக்கியமாக ஜீரணமாகாத தீவனப் பொருட்களாலும், உப்புசத்தை ஏற்படுத்தக்கூடிய தீவனங்களாலும், அஜீரணக் கோளாறுகளாலும் கடுமைiயான வயிற்று உப்புசம் திடீரென்று ஏற்பட்டுச் சிறிது நேரத்தில் மரணத்தை விளைவிக்கின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மாட்டின் வயிறு பாகம் வீங்கிக் காணப்படும். இடது வயிற்று பாகத்தைக் கையினால் தட்டினால் மத்தளத்தை அடிப்பது போன்ற சத்தம் உண்டாகும். வயிற்று உப்புசம் ஏற்படும் பொழுது உருவாகும் நச்சுக்கள் இரத்தத்தில் கலந்து நுரையீரல் மற்றும் இருதயத்தை இயக்கும் மூளையின் மைய இயக்கங்களைப் பாதிப்பதன் மூலம் இரத்த ஓட்ட சமநிலை பாதிக்கப்பட்டு கால்நடைகளில் விரைவில் இறப்பை உண்டாக்குகின்றன.

7. கடுமையான வயிற்றுப்போக்கு:
சுத்தமான பராமரிப்பு இல்லாத பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளில் பல்வேறு நோய்க்கிருமிகள் காரணமாக கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படலாம். முக்கியமாக இளம் குட்டிகளில் அதிக வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, உடலில் நீர்ச்சத்து குறைந்து போதல், நச்சுப் பொருட்கள் இரத்தத்தில் கலத்தல்; போன்ற காரங்களால் விரைவில் இறப்பு ஏற்படலாம்.

8. இருதய நலிவு:
கால்நடைகளின் இளம் குட்டிகளில் பல காரணங்களால் இருதயத் தசை நலிவுற்று இறப்பு ஏறபடுகின்றது. காணை நோய் எனப்படும் கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் பாலை குட்டிகள் குடிக்கும் பொழுது இருதயத் தசைப்; பாதிக்கப்பட்டுக் குட்டிகள் இறந்து விடும். பலவித நோய்களில் இருதயம் பலவீனப்பட்டு இருதயத் தசை தாக்கப்பட்டடு இருதயம் நின்று விடுவதால் கால்நடைகளில் இறப்பு ஏற்படுகிறது.

9. பால் சுரம்:
கன்று ஈன்ற 5 நாட்களுக்குள் கறவை மாடுகளில் இந்த நோய் திடீரென்று ஏற்படும். கன்று ஈன்ற மாடுகளில் பால் வழியாக சுண்ணாம்புச் சத்து அதிகம் வெளியாகி விடுவதால் உடலில் சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை ஏற்படுவதால் இந்த நோய் உண்டாகிறது. பாதிக்கப்பட்ட மாடானது திடீரென்று அதிகப் பதட்டத்துடன் காணப்படும். இங்கும் அங்குமாகத் திரும்பிப் பார்ப்பதும் முன்னும் பின்னுமாக நடப்பதுமாகத் துடிதுடிப்புடன் காணப்படும். பிறகு தரையில் மார்பு படும்படி உட்கார்ந்து கழுத்தை ஒரு பக்கமாகத் திருப்பித் தோளின் மேல் வைத்துப் படுத்திருக்கும். உடம்பு சில்லிட்டு இருக்கும். கண்கள் விரிந்து காணப்படும். மூச்சு இலேசாக விடும். பிறகு நான்கு கால்களையும் நீட்டித் தலையை சாய்த்துப் படுத்து விடும். தகுந்த சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் மாடு விரைவில் இறந்து விடலாம். மரணத் தருவாயில் இருக்கும் மாடு கால்நடை மருத்துவர் உதவியுடன் தகுந்த மருந்து செலுத்தியவுடன் எழுந்து நின்று தீவனம் சாப்பிட ஆரம்பித்து விடும்.

10. விபத்துகள் :
தீ விபத்து, போக்குவரத்து சாதனங்களில் அடிபடுதல், மாடுகள் வழுக்கி கீழே விழுதல் போன்ற விபத்துகள் கால்நடைகளுக்கு அகால மரணத்தை விளைவிக்கலாம். விபத்துகள் ஏற்படும் பொழுது உண்டாகும் இரத்தப் பெருக்கு, எலும்பு முறிதல், உள் உறுப்புகள் சிதைவு, புண்கள், வெந்த புண்கள் போன்றவை காரணமாக கால்நடைகள் இறக்க நேரிடலாம்.

ஆகவே தீவிரக் கொடிய நோய்கள் கால்நடைகளைத் தாக்கும் பொழுது காலதாமதமின்றி கால்நடை மருத்துவரை அணுகி உரிய நேரத்தில் தகுந்த அவசர சிகிச்சை அளிக்கும் பொழுது கால்நடைகளை வளர்ப்போர் தமது கால்நடைச் செல்வங்களை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.

 

 

 

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்