தற்போது தமிழகம் முழுவதும் மழை பொழிவு முடிவடைந்துள்ள நிலையில் கால்நடைகளை அம்மை நோய் கடுமையாக தாக்கி வருகின்றது. முக்கியமாக கறவை மாடுகளுக்கு இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனால் கால்நடை விவசாயிகள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர். சிலருக்கு இந்த என்ன நோய் என்று தெரியாமல் உள்ளனர். பரவி வரும் இந்நோய் குறித்து கால்நடை விவசாயிகள் அறியவும், அவற்றிலிருந்து காக்கும் வகையில் தமிழ் விவசாயம் இக்கட்டுரையை வழங்கியுள்ளது.
நோய் அறிகுறிகள்
பசு, காளை மாடுகளின் கழுத்து பகுதி, தாடை, உடல் பகுதியில் திடீரென உருளை, உருளையாக எலுமிச்சை பழம் அளவிற்கு குறையாத கட்டிகள் காணப்படுகின்றன. இதையடுத்து, அந்த மாடுகள் சுணக்கமடைந்து உடல் நிலை பாதிப்படைகிறது. வாய்மேடு, ஆயக்காரன்புலம், தலைஞாயிறு, கரியாப்பட்டினம், மருதூா், கடிநெல்வயல் உள்ளிட்ட பெரும்பாலான கிராமப்புறங்களில் இந்தத் தாக்கம் அதிகரித்து வருகிறது. சிலரது மாடுகளில் ஏற்படும் இந்த ஒருளை புண்ணானது மிகப் பெரிய அளவிலும் உருவாகியுள்ளது. இதைக் கண்டு விவசாயிகள் முதலில் அச்சம் அடைய வேண்டாம்.
இது ஒருவகை அம்மை தொற்று என கால்நடை பராமரிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தத் தொற்றை முன்கூட்டியோ, அல்லது வந்த பிறகோ தடுக்க அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதற்கட்ட சிகிச்சை அளியுங்கள். இந்த மருந்துகளால் பயன் அளிக்காத நிலையில் நாட்டு மருந்துகள் பயன்படுத்த கால்நடை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருவது. இதனால் அம்மை நோயைப் போக்கும் நாட்டு மருந்துகளை கொடுப்பதில் விவசாயிகள் முனைப்பு காட்டுகின்றனா். ஆதால் இந்த நோய் தாக்கியுள்ள விவசாயிகள் தங்களது கால்நடைக்கு நாட்டு (இயற்கை) மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
தடுப்பூசி
மாட்டிற்கு முன்னதாகவே அம்மை தடுப்பூசி போட்டு வரலாம். பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை உபயோகிக்காமல் இருக்கலாம் அல்லது காய்ச்சி பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட மாட்டை மற்ற மாட்டிடம் இருந்து தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். இதன் மூலம் மற்ற மாடுகளுக்கு நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.
எல்லா மாடுகளுக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை தடுப்பு ஊசி போட்டால் மூன்று வருடங்களுக்கு நோய் வராது. கன்று போட்ட 6 மாதத்தில் முதல் ஊசி போட வேண்டும். பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுக் கொள்ளலாம் .பொதுவான தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
பசு அம்மை நோய்
சில மாடுகளுக்கு பசு அம்மை நோய் தாக்குகிறது. இது ஒரு கொள்ளை நோய் அல்ல. ஆனால் எளிதில் பரவும் தொற்று நோய் ஆகும். அம்மைத் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாத கறவையாளர்களுக்கும் இந்நோய் மாடுகளிலிருந்து தொற்றிக்கொள்ளும். அதுபோல் சமீபத்தில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட கறவையாளர்களிடமிருந்து மாட்டுக்குத் தொற்றிக் கொள்ளும். காய்ச்சல் ஏற்படும், மடியிலும், காம்புகளிலும், முதலில் நுண்ணிய சிவப்பு புள்ளிகள் தோன்றி விரைவில் அவை கொப்புளங்களாக மாறும். கவனிக்காவிட்டால் அவை நாளடைவில் புண்களாக மாறிவிடும்.
எந்த வகையான மாடுகளை தாக்குகிறது
குறிப்பாக, கலப்பின மாடுகள், அதிகம் பாதிப்பை எதிர்கொள்கின்றன. இந்நோய் கொசு, ஈ மற்றும் உண்ணிகள் மூலம் பரவுகிறது. நோய் பாதித்த மாடுகளுக்கு காய்ச்சல், சளி, மூச்சு விடுதலில் சிரமம், தீவனம் உண்ணாமை, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் தென்படுகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.
பெரிய அம்மை நோய்க்கு காரணமும், பாதுகாப்பும்
கொசு, ஈ மற்றும் உண்ணி மூலம் பரவுவதால், மாலை மற்றும் இரவில், மாட்டு கொட்டகையில் புகை மூட்டம் போட வேண்டும். மாடுகளில் இருக்கும் உண்ணியை அகற்றி, மாட்டு கொட்டகை மற்றும் மாடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளை தனிமைப்படுத்த வேண்டும். இந்நோய் பரவலை உறுதிபடுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து, ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம், போபால் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உறுதி செய்யப்பட்டவுடன், கால்நடை மருந்தகங்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். வைரஸ் தாக்கத்தால் நோய் ஏற்படுவதால் தடுப்பூசிகள், சிறப்பு சிகிச்சைகள் இல்லை. நோயிலிருந்து மாடுகளை பாதுகாக்க விவசாயிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொசுக்கள், ஈக்கள் மற்றும் உண்ணிகள் மூலம் பரவுதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் மாட்டு கொட்டைகையில் புகை மூட்டம் போட வேண்டும், மாடுகளில் இருக்கும் உண்ணிகளை அகற்றி, மாட்டுக் கொட்டகைகள் மற்றும் மாடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.நோய் பாதித்த கால்நடைகளை தனிமைபடுத்த வேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் கால்நடை மருந்தகங்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை மருத்துவம்
1) நோய் தீவிரத்தை குறைக்க மாடு ஒன்றுக்கு 10 கிராம் கருப்பு மிளகு 50 கிராம் வெல்லம், 10 கிராம் உப்பு ஆகியவற்றை துாளாக்கி 10 வெற்றிலையில் வைத்து நாள் ஒன்றுக்கு மூன்று முறை வீதம் ஐந்து நாட்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2) தினமும், 30 கிராம் சிறுகுறிஞ்சான் பொடியை, வெல்லத்துடன் கலந்து, கால்நடைகளுக்கு கொடுத்தால், நோய் தொற்று பாதிப்பை குறைக்கலாம். மஞ்சள் தூள், வேப்பிலை மற்றும் வேப்பெண்ணெயை கலந்து, காயமுள்ள பகுதிகளில் தடவலாம்.
3) ஒரு கொப்பரை தேங்காய், 100 கிராம் வெல்லம், 50 கிராம் வெந்தயம், 30 கிராம் மஞ்சள் தூள் என அனைத்தும் சேர்த்து, தினமும் இரு வேலை மாடுகளுக்கு உணவாக கொடுப்பதால், தேவையான சத்து கிடைக்கும்.
4) 10 வெற்றிலை, மிளகு -10, வெல்லம், உப்பு தேவையான அளவு சோ்த்து கொடுக்கலாம்.
5) நோய்க்கு மருந்தாக மஞ்சள் தூள், வெற்றிலை, வேப்பெண்ணெய் கலந்து அரைத்து கட்டிகள் மீதும், காயங்க ளிலும் பூசலாம்.
மதுரை கால்நடை மருத்துவர் உமா ராணி இதுகுறித்து கூறுகையில்
இதுகுறித்து மதுரை கால்நடை மருத்துவர் உமா ராணி அவர்கள் கூறுகையில், மழைக் காலத்தில் இந்த நோய் பரவுவது வழங்கமான ஒன்று என்பதால் கால்நடை விவசாயிகள் இதனைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுதே இதனை கவனித்துக் கொள்ளுங்கள். முதற் கட்டமாக அருகில் இருக்கும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குங்கள்.
ஆங்கில மருந்துகளை விட தமிழ் மருத்துவம் அதாவது நமது பாரம்பரிய இயற்கை வைத்தியம் செய்யலாம். இதனால் பசுக்கள் விரைவாக குணமடைய அதிக வாய்ப்பு உண்டு. இருப்பினும் கால் நடை மருத்துவரை கண்டிப்பாக நீங்கள் அணுக வேண்டும். ஏனெனில் நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த நோய்க்கு ஆங்கிலத்தில் (Lumpy Skin Disease) என்று கூறுவார்கள். அதாவது பெரிய அம்மை நோய் என்று அர்த்தம் ஆகும். இதற்கு நாட்டு மருந்து என்னென்ன பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் இப்போது பார்ப்போம். வெற்றிலை 5 முதல் 10 வரை எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு இரண்டு டீஸ்பூன் மற்றும் உப்பு 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு இதனுடன் தேவையான அளவு வெல்லாம் சேர்த்துக் கொண்டு இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். நன்கு அரைக்கப்பட்ட இந்த களிம்பை தொடர்ந்து 5 நாட்களுக்கு காயம் உள்ள இடங்களில் பூசி (தேய்த்து) வாருங்கள். நல்ல பலனை கொடுக்கும்.
ஒரு வேளை நோய் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக வேப்பிலை, துளசி, குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அதனை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த கலவையுடன் வேப்ப எண்ணெய் சேர்த்து புண் உள்ள இடங்களில் தடவி விடுங்கள். இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் இந்த நோய் நிச்சயமாக குணமடையும்.
முக்கியமாக உருண்டையாக புண் ஏற்பட்டுள்ள இடத்தில் ஈ மற்றும் கொசு அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குழியாக புண் உள்ள இடத்தில் வேப்ப எண்ணெய் தடவுங்கள். அதேபோல் மாட்டு கொட்டகை மற்றும் மாடுகள் கட்டும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இது மற்ற மாடுகளுக்கு பரவாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆகேவ கால்நடை விவசாயிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு இயற்கை முறையில் மேலே குறிப்பிட்டுள்ளவைகளை தொடர்ச்சியாக செய்து அம்மை நோயிலிருந்து மீண்டு வாருங்கள். முக்கியமாக கால்நடை இருக்கும் இடத்தை சுத்தமாகவும், புண்ணில் ஈ அண்டாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே காமெண்ட் செய்யவும். உரிய பதில்கள் வழங்கப்படும்.