கறவை மாடுகளுக்கான தீவனங்களைப் பதப்படுத்தும் முறைகள்

கறவை மாடுகளுக்கான தீவனங்களைப் பதப்படுத்தும் முறைகள்

கறவை மாடு வளர்ப்புத் தொழிலானது கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கறவை மாடுகளில் உடல் வளர்ச்சிக்கும், பால் உற்பத்தி அதிகமாவதற்கும், நல்ல சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டுவதற்கும், விரைவில் சினைப்பிடிப்பதற்கும், உடலின் வெப்பம் சீராக இருக்கவும், திசுக்கள் தேய்மானத்தைச் சரிகட்டவும், திசுக்கள் உண்டாக்கப்படவும், உடலின் உயிரோட்டத்திற்கும், ஊட்டச் சத்து நிறைந்த தீவனம் மாடுகளுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

மாடுகளுக்குப் பசுந்தீவனம் இன்றியமையாதது. பசுந்தீவனத்தில் ஊட்டச்சத்து, இயற்கையான தன்மையிலேயே உளளதால் அவற்றின் செரிமானத்தன்மை அதிகம். மாடுகளின் உற்பத்திப் பெருக்கத்திற்கேற்ற உயிர்ச்சத்துக்களும், தாதுச் சத்துக்களும் பசுந்தீவனத்தில் உள்ளன. எனவே, மாடுகளி மூலம் சீரான உற்பத்தி பெற, ஆண்டு முழுவதும் தொடர்ந்து அவைகளுக்குப் பசுந்தீவனம் அளித்து வர வேண்டும்.

மழைக்காலங்களில் தேவைக்கு மேல் பசுந்தீவனம் கிடைக்கின்றது. ஆனால் கோடைக்காலத்தில் போதிய பசுந்தீவனம் அளிக்க வழியின்றி கால்நடைகளின் உற்பத்தி குறைந்து, அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படுகின்றது. சில சமயங்களில் பசுந்தீவனம் கிடைக்காத காலங்களில் உற்பத்தி குறையாமல் இருப்பதற்காக மாடுகள் வளர்ப்போர் அடர்தீவனத்திற்கென அதிகம் செலவளிக்க வேண்டியுள்ளதால் வருமானம் பெருமளவில் குறைகிறது.

எனவே, பசுந்தீவனம் உபரியாகக் கிடைக்கும் காலங்களில் “ஊறுகாய்ப்புல்” எனப்படும் “சைலேஜ் தயாரித்தல்” முறையில்; பதப்படுத்தி, கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் பசுந்தீவனப் பற்றாக்குறையையும் கால்நடைகளின் உற்பத்தி இழப்பையும் தவிர்க்கலாம்.

நம் நாட்டில் மாடுகளின் தீவனத்தில் வைக்கோல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வைக்கோலில் மாடுகளுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் மிகக் குறைவான அளவிலேயே கிடைக்கின்றன. புரதச்சத்து இல்லையென்றே கூறலாம்.

வைக்கோலின் செரிமானத் தன்மையை அதிகரிக்கவும் வைக்கோலிலுள்ள புரதச் சத்தை அதிகரித்து, கால்நடைகளின் உற்பத்தித் திறனைப் பெருக்கவும், எளிய முறையில் சாதாரண வைக்கோலை யூரியா கொண்டு “ஊட்டமேற்றிய வைக்கோலாக” மாற்றி சத்துள்ள தீவனமாக மாற்றும் பொழுது அடர்தீவனத்தின் அளவை குறைத்து தீவனச் செலவை குறைத்து உற்பத்தியைப் பெருக்கலாம்.

ஊறுகாய்ப்புல் அல்லது சைலேஜ் தயாரித்தல்

பசுந்தீவனங்களை அவற்றின் பசுமை மாறாமல், மிகவும் குறைந்த ஊட்டச்சத்து இழப்புடன் இயற்கையான தன்மையை இழக்காமல் பதப்படுத்தி சேமிக்கும் முறைக்கு ஊறுகாய்ப்புல் அல்லது சைலேஜ் தயாரிக்கும் முறை என்று பெயர்.

சைலேஜ் தயாரிக்க உகந்த தீவனப் பயிர்கள்

மக்காச்சோளம். சோளம், கம்பு நேப்பியர் மற்றும் ஒட்டுப்புற்கள் போன்ற தீவனப்பயிர்கள், காராமணி, குதிரை மசால், பர்சீம், வேலி மசால் போன்ற பயறு வகைத் தீவனங்கள் மற்றம் பயறு வகைத் தீவன மர இலைகள் ஆகியவற்றைக் கொண்டு சைலேஜ் தயாரிக்கலாம்.

பயறு வகைத் தீவனங்களை மட்டும் தனியே சைலேஜ் தயாரிப்பில் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவற்றில் உள்ள புரதச்சத்து சிதைபட்டு பயன் குன்றி விடக்கூடும். சோளம், மக்காச்சோளம், வீரிய புல் வகைகள் போன்ற தீவனப்பயிர்களுடன் பயறு வகைத் தீவனங்களை 3:1 அல்லது 4:1 என்ற விகிதத்தில் கலந்து சைலேஜ்; தயாரிக்கலாம்.

சைலேஜ் தயாரிக்க அறுவடை செய்ய வேண்டிய தருணம்

வீரியப்புல் வகைகள் : பூக்கும் தருணம்
பயறு வகைத் தீவனங்கள் : 25 முதல் 30 சதவிகிதம் பூக்கும் தருணம்
சோளம், கம்பு : தானியங்கள் பால் பிடிக்கும் தருணம்
மக்காச்சோளம் : தானியங்கள் பால் பிடித்த பிறகு

சைலோ

சைலேஜ் தயாரிக்க பசுந்தீவனங்களை, காற்றுப்புகாத இடத்தில் மூடி வைத்துச் சேமிக்க வேண்டும். இதற்குப் பயன்படும் அமைப்புகள் சைலோ எனப்படுகின்றன. குழி சைலோ, கோபுர சைலோ, சரிவு சைலோ எனப் பல வகைகளில் சைலோவை அமைக்கலாம். உபரியாகக் கிடைக்கக்கூடிய பசுந்தீவனத்தின் அளவு, வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொருத்து குழிகளின் அளவுகளைக் தீர்மானிக்க வேண்டும்.

குழி சைலோவை நீர்ப்புகாத மேட்டுப்பகுதியில் அமைக்க வேண்டும். பக்கவாட்டில் மண் சரிவு ஏற்படக் கூடாது. குழியின் ஆழம் விட்டத்தைப்போல் இரு மடங்கு இருக்க வேண்டும். கோபுர சைலோ நில மட்டத்தின் மேல் உயரமாக குதிர் போல் காங்கிரீட் அமைப்பாக எழுப்பப்படுகிறது. பெரிய அளவிலான பண்ணைக்கே இது ஏற்றது.

நல்ல தரமான சைலேஜ்; தயாரிக்க ஏற்ற முறையாகும். ஆனால் அதிகம் செலவாகும். சரிவுச்சைலோ ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை சாய்வாக இருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. சைலேஜ்; தயாரிக்க பசுந்தீவனத்தை எளிதாகக்கீழே இறக்கவும், தயார் ஆன சைலேஜை எளிதாக வெளியே எடுக்கவும் ஏற்ற முறையாகும்.

ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறை

சைலேஜ் தயார் செய்ய பசுந்தீவனத்தை சுமார் 2 முதல் 3 மணி நேரம் வெயிலில் உலர்த்தி ஈரப்பத அளவை 75 முதல் 80 சதவீதத்திலிருந்து 60 முதல் 70 சதவீத அளவிற்குக் குறைக்க வேண்டும். தீவனப்பயிர்களை 2 முதல் 3 அங்குல் கொண்ட சிறு சிறு துண்டுகளாக வெட்டி சைலோவில் இட்டு அடுக்கடுக்காக அடுக்கி வர வேண்டும். சுமாh 20 முதல் 30 செ.மீ அடுக்கிய பிறகு தீவனத்தை நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெறியேற்றி விட வேண்டும்.

மேலும் அதன் மீது 2 சதவீத சர்க்கரைப்பாகுக் கரைகலையும் 1 சதவீத சாதாரண உப்புக் கரைசலையும் தெளிக்க வேண்டும். பிறகு மீண்டும் பசுந்தீவனத்தை அடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அடுக்கி, சைலோவின் மேல்மட்டத்தை விட 1 முதல் 1.5 மீ உயரம் வரை நிரப்ப வேண்டும். அதன் மேல் பகுதியில் வைக்கோல் போன்ற கழிவுகளைக் கொண்டு மூடி அதன் மேல்ஈர மண்ணை பூசி காற்று மற்றும் நீர் புகாமல் செய்ய வேண்டும். சைலோவை மூட பாலிதீன் தாள்களையும் பயன்படுத்தலாம்.

இதன் பிறகு 30 முதல் 45 நாட்களில தரம் மிக்க சைலேஜ்; உருவாகி விடும். சைலோவைத் திறக்கும் முன்பாக, மேற்பகுதியில் உள்ள பயன்படாத, பதம் குறைந்த தீவனத்தை அகற்றி விட வேண்டும். தரமான சைலேஜ்; பழவாசனையுடன் கூடிய நறுமணம் உடையதாகவும், பசுமை நிறத்துடனும், சாறு கலந்தும் இருக்கும். அமிலத்தன்மை 3.5 முதல் 4.2 வரை இருக்கும்.

சைலேஜ் தயாரிக்கும் பொழுது 1 சதவீத அளவில் சுண்ணாம்பைச் சேர்த்தால் சைலேஜின் தரம் உயரும். புரதச் சத்து மிகுந்த இலைகளையும், பிற புல் வகைகளுடன் இணைத்து சைலேஜ் தயாரிக்கலாம். சூபாபுல் (சவுணடல்) மர இலைகளில்; சைலேஜ் தயாரிக்கும் பொழுது அதில் உள்ள மைமோசின் நச்சுப் பொருளின் வீரியம் 40 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்படுகின்றது.

குறைந்த செலவில் சைலோ

ஓரிரண்டு மாடுகளை மட்டும் வைத்திருக்கும் விவசாயிகள் குறைந்த செலவில் சைலோவை உருவாக்கலாம்.

1.கான்கிரீட் வளையங்கள்: கிணற்றில் இறக்கப் பயன்படுத்தப்படும் காங்கிரீட் வளையங்களை ஒன்றன் மேல் ஒன்றாகத் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் அடுக்கி, கோபுர சைலோக்;களை உருவாக்கலாம். கீழ் மட்டத்தில் உள்ள வளையங்களில் ஒரு சில துளைகள் அமைத்து நீர் மற்றும் அமிலக் கரைசல் வெளியேற வழி செய்ய வேண்டும்.

2.குதிர்: தானியங்களைச் சேமிக்கப் பயன்படுத்தும் மண் குதிர்களையும் சைலோவாகப் பயன்படுத்தலாம். அவற்றில் உள்ள நுண்ணிய துவாரங்களை அடைக்க வெளிப்புறம் சாணம் அல்லது களிமண் கொண்டு நன்கு மெழுகிய பிறகு சைலேஜ்; தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

3. பாலித்தீன் பைகள்:சுமார் 90 செ.மீ அகலம் 1 மீ உயரம் மற்றும் 600 காஜ் தடிமன் கொண்ட பாலித்தீன் பை ஒன்றை 12.5 கிலோ சைலேஜ்; தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதை விட 20-30 செ.மீ. உயரம் குறைவாகக் கொண்ட கோணிப்பைகளையும் இவ்வாறு உபயோகிக்கலாம். ஆனால் அவற்றில் ஓட்டைகள் விழுந்து விடாமல் தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.

சைலேஜ் பயன்படுத்தும் முறை

பசுந்தீவனம் குறைவாக அல்லது தரம் குறைந்த தீவனம் கிடைக்கும் காலங்களில் அவற்றுடன் சேர்த்து சைலேஜ்; தீவனம் பயன்படுத்தலாம். இதனால் கால்நடைகளில் உற்பத்தி பாதிக்காமல் கவனித்துக் கொள்ளலாம். தரமான உலர்புல்லுடன் சேர்த்து சைலேஜ்; அளித்தால் பால் உற்பத்தி அதிகமாகும். ஒரு நாளைக்குத் தேவையான சைலேஜ் அளவைத் தான் சைலோவிலிருந்து வெளியே எடுக்க வேண்டும்.

காற்றோட்டத்தில் வைக்கப்படும் சைலேஜ் விரைவில் கெட்டு விட வாய்ப்புண்டு. பொதுவாக கால்நடைகளுக்கு அளிக்கப்படும் நார்த்தீவனத்தில் 20-30 சதவீதம் வரை சைலேஜை அளிக்கலாம். பூஞ்சை பாதித்த சைலேஜை கால்நடைகளுக்கு அளிக்கக்கூடாது. நாளொன்றுக்கு மாடுகளுக்குத்; தேவைப்படும் சைலேஜ்pன் அளவானது ஒரு கறவை மாட்டிற்கு 15முதல் 20 கிலோ, ஒரு கிடேரிக் கன்றிற்;கு 5 முதல் 8 கிலோ மற்றும் ஒரு வளர்ந்த கன்றுக்கு 4 முதல் 5 கிலோவாகும்.

ஊட்டமேற்றிய வைக்கோல்

நாம் பயிர்களுக்கு யூரியா உரமிடுகிறோம். பயிர்கள் யூரியாவில் உள்ள நைட்ரஜனை புரதம் மிக்க தானியமாக மாற்றி நமக்கு வழங்குகின்றன. அதுபோல மாடுகளுக்கு யூரியா மூலம் பதப்படுத்திய வைக்கோலை அளிக்கும்பொது,ரூமன் என்று சொல்லப்படுகிற மாடுகளின் அசையூண் வயிற்றிலுள்ள நுணணுயிர்கள் யூரியாவிலுள்ள அம்மோனியா வடிவ நைட்ரஜன் சத்தை தன்மயமாக்கி செல்புரதமாக மாற்றுகின்றன.

மேலும், அம்மோனியாவின் செயல்பாட்டினால் லிக்னைன் செல்லுலோஸ் இணைப்பு உடைக்கப்பட்டு வைக்கோலின் செரிமானத் தன்மை சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதனால் கறவைமாடுகளுக்குக் கொடுக்கப்படும் அடர் தீவனத்தில் மூன்றில் ஒரு பகுதியைக் குறைத்துவிடலாம்.

100 கிலோ எடையுள்ள சாதாரண வைக்கோலை யூரியா மூலம் சத்தூட்டம் செய்யும் முறை

தேவையான பொருட்கள்

1. நன்கு காய்ந்த வைக்கோல் : 100 கிலோ
2. யூரியா : 4 கிலோ
3. சுத்தமான தண்ணீர் : 65 லிட்டர்
4. தார்பாலின்பாய் அல்லது கோணிச்சாக்கு : உரச்சாக்கு

செயல்முறை

நன்கு காய்ந்த 100 கிலோ வைக்கோலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 4 கிலோ யூரியாவை 65 லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். 100 கிலோ வைக்கோலை 10 சம பாகங்;களாகப் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அறையின் ஒரு மூலையில் சிமெண்டுத் தரையில் வைக்கோலின் ஒரு பாகத்தைச் சீராகப் பரப்பி அதன்மேல் சுமார் 6.5 லிட்டர் யூரியா கரைசலை வைக்கோலின் எல்லாப்பாகத்தின் மீதும்படும் படியாக நன்கு தெளிக்கவும்.

பிறகு அதன்மீது இன்னொரு பாகம் வைக்கோலை பரப்பி மெற்கூறியபடி யூரியா கரைசலை தெளிக்க வேண்டும். இதேபோல் ஒவ்வொரு பாகம் வைக்கோலையும் ஒன்றன்மீது ஒன்றாகப் பரப்பி யூரியா கரைசலையும் நன்கு தெளித்து இறுதியாக யூரியா கரைசல் தெளிக்கப்பட்ட மொத்த வைக்கோலையும் நன்கு மிதித்துவிட வேண்டும்.

பின்னர் தார்பாலின் பாய் அல்லது சாக்குப்படுதா அல்லது பெரிய பாலிதீன் தாள் கொண்டு காற்றுப் புகா வண்ணம் மூடி பக்கவாட்டிலும் வைக்கோல் வெளியே வராமல் முழுமையாக மூடிவைக்க வேண்டும். சூரிய ஒளி நேரடியாகப்படாமலும் காற்றினால் கலையாமலும் இருக்க அதன் மேல்பகுதியிலும் பக்கவாட்டிலும் பெரியகற்கள் அல்லது கட்டைகள் வைத்துப் பாதுகாக்கலாம். 21 நாட்களுக்குப் பின்னர் இந்த யூரியா மூலம் பதப்படுத்திய வைக்கோலை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.

நன்மைகள்

1.சாதாரண வைக்கோலை யூரியா மூலம் பதப்படுத்துவதால் அதிகச்செரிமானத்தன்மை கொண்ட புரதச்சத்து மிகுந்த வைக்கோல் கிடைக்கிறது.

2.யூரியா மூலம் பதப்படுத்திய வைக்கோலை அளிப்பதன் மூலம் கால்நடைகளில் அடர்தீவனத்தின் அளவை கணிசமாக மூன்றில் ஒரு பகுதி வரைக் குறைக்கலாம்.

3.நான்கு கிலோ யூரியா சத்தூட்டப்பட்ட வைக்கோல் ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்கும் சத்தினை அளிக்கிறது.

4.இதனால் கால்நடைகளில் உடல்வளர்ச்சி, பால்உற்பத்தி, பாலின் கொழுப்புச் சத்து, கால்நடைகளின் வேலை செய்யும் திறன் ஆகியவை அதிகரிப்பதோடு பால்உற்பத்திச் செலவும் கணிசமாக குறைகிறது.

5.இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை பால்தரும் மாடுகளுக்கு இந்தத் தீவனமே போதுமானது.  அடர்தீவனம் தேவையில்லை. 4 முதல் 5 லிட்டர் பால் தரும் மாடுகளை அடர்தீவனமே இல்லாமல் 4 கிலோ பயறுவகைப் பசுந்தீவனம், யூரியாவால் பதப்படுத்தப்பட்ட அதிக அளவு வைக்கோல் ஆகியவற்றைக் கொண்டே பராமரிக்கலாம்.

10 கிலோ அளவு பால் தரும் கறவைமாடுகளுக்கு பசுந்தீவனம் 4 கிலோ, மற்றும் யூரியா மூலம் சத்தூட்டப்பட்ட வைக்கோலுடன் 1 முதல் 1.5 கிலொ அடர்தீவனம் கொடுத்தால் போதுமானது. இதன்மூலம் கறவைமாடுகளில் அடர்தீவனச் செலவு கணிசமான அளவு குறைவதால் பால் உற்பத்திச் செலவு சுமார் 30 முதல் 35 சதவீதம் வரை குறைகிறது.

6.யூரியா சத்தூட்டப்பட்ட ஒரு கிலோ வைக்கோல் தயாரிக்க ஆகும் செலவு சுமார் 15 காசு மட்டுமேயாதலால் இம்முறை சிறு மற்றும் குறு விவசாயிகளால் எளிதில் கடைப்பிடிக்கக் கூடிய ஓர் உத்தியாகும்.

எனவே மிகுந்த பயன்தரும் இந்த எளிய, சிக்கனமான தீவனப் பதப்படுத்தும் முறைகளைப் பின்பற்றி தீவனப் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களிலும் கறவை மாடுகளுக்குச் சத்தான தீவனத்தைக் கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தித் திறன் குறையாமலும், தீவனச் செலவையும் குறைத்து, சினைப்பிடிப்பதிலும் பிரச்சினை இல்லாமல் கறவை மாடுகளில் வருடம் ஒரு கன்று பெற்று அதிக இலாபம் பெற முடியும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்