கறவை மாடுகளில் மலட்டுத்தன்மைக்கான காரணங்களும், நிவர்த்தி செய்யும் முறைகளும்

கறவை மாடுகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம் இருப்பினும் இனப்பெருக்கத் தன்மையுடையவை அதில் கால் பங்கு மட்டும் உள்ளது. தீவன விலை அதிகமாகிக் கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்போர் பால்பண்ணை மூலம் அதிக இலாபம் பெற வேண்டுமாயின் மாடுகள் சினைப்பிடித்தலில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் வருடம் ஒரு கன்று என்ற முறையில் பராமரிப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அவ்வாறு இல்லாமல் பசுக்களில் சினைப்பிடித்தலில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் பால்பண்ணைத் தொழிலில் பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படும். உதாரணமாக கறவை மாடுகளைத் தகுந்த காலத்தில் சினைப் படுத்தாவிட்டால் வருவாய் இழப்பு ஒரு பசுவிற்கு சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.70 வரை ஆகும். பத்து மாடுகளை வைத்திருக்கும் விவசாயி என்றால் நாள் ஒன்றுக்கு ரூ.700 இழப்பாகும். ஆகையால் வருடத்திற்கு ஒரு கன்று என்ற ரீதியில் தவறாமல் பசு கன்று ஈனும் பொழுது பால் உற்பத்தித் திறனும் அதிகரித்து வருவாய் இழப்பில்லாமல் பால்பண்ணையை இலாபகரமாக நடத்தலாம். அதற்கு கறவை மாடுகள் வைத்திருப்போர் மலட்டுத் தன்மைக்கான காரணங்களையும் அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளையும் அறிந்து தங்கள் பண்ணைகளில் தகுந்த பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடித்து கறவை மாடு வளர்ப்பு மூலம் அதிகமான இலாபம் ஈட்டலாம். கறவை பசுக்களில் மலட்டுத் தன்மையை தற்காலிக மலட்டுத் தன்மை மற்றும் நிரந்தர மலட்டுத் தன்மை என இருவகையாக பிரிக்கலாம்.

1. தற்காலிக மலட்டுத்தன்மை;
இவ்வகை மலட்டுத்தன்மையினால் தான் பசுக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. மூன்று முறை சரியான முறையில் சரியான பருவத்தில் கருவூட்டல் செய்த பின்னரும் சினை பிடிக்காமல் இருப்பதையே தற்காலிக மலட்டுத்தன்மை என்கிறோம்;.

தற்காலிக மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:

அ) சரியான சினைப்பருவத்தை காணத்தவறுதல்:
கறவை மாடுகளில் சினைப்பருவம் சரியான சமயத்தில் கண்டறிய வேண்டும். பொதுவாக சினைப்பருவம் பசுக்களில் 18 மணி நேரமும் எருமைகளில் சுமார் 16 லிருந்து 24 மணி நேரமும் காணப்படும். அப்பருவம் கண்டறிய சினைப்பருவ அறிகுறிகள் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். சினைப்பருவத்தில் பசுக்கள் அடிக்கடி கத்தும். மற்ற பசுக்களின் மேல் தாண்டும். மேலும் மற்ற பசுக்களை தன் மீது தாண்டவும் அனுமதிக்கும். தீவனம் அல்லும் தீனி உட்கொள்ளும் அளவு குறையும். கறக்கும் பாலின் அளவு குறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். பிறப்பு உறுப்பு ஈரமாகவும். சிவந்தும் காணப்படும். பிறப்புறுப்பிலிருந்து வழவழப்பான கண்;ணாடி போன்ற திரவம் வடியும்.

சரியான சினைப்பருவத்தை பண்ணை நடத்துபவர்கள் அல்லது பண்ணை வேலையாட்கள் தினமும் பால் கறக்கும் போது அல்லது கறந்த பின் சிறிது நேரம் காலை வேளையிலோ மாலை வேளையிலோ கவனிக்க வேண்டும். சில சமயம் பசு மற்றும் எருமைகளில் ஊமை சினைப்பருவம் காணப்படும். அதாவது சினைத்தருணத்தில் மாடுகள் இருந்தாலும் எவ்வித அறிகுறிகள் வெளியே காட்டாது. அந்த மாதிரி சமயங்;களில் பண்ணையாளர்கள் சந்தேகம் ஏற்ப்பட்டால் கால்நடை மருத்துவரைக் கொண்டு பரிசோத்துக் கொள்ள வேண்டும்.

ஆ) சரியான பருவத்தில் சினைபடுத்தத் தவறுதல்;
சினைப்பருவத்தை சரியாக கவனித்து சரியான பருவத்தில் சினை ஊசி போட வேண்டும். உரிய நேரத்தில் கவனிக்காமல் பருவம் கடந்த பின் சினை ஊசி போடுவதால் எந்த பலனும் கிடையாது. பொதுவாக மாடுகள் காலை அல்லது மாலையில் சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டும். அவ்வாறு பசுக்கள் காலையில் சினைக்கு வந்தால் அதே நாள் மாலையிலும், மாலையில் பருவத்திற்கு வந்தால் அடுத்த நாள் காலையிலும் சினை ஊசி போடவேண்டும். இவ்வாறு சரியான பருவத்தில் மாடுகளை சினைப்படுத்துவதால் சினைப்பிடித்தல் எளிதாகிறது.

இ) சினைப்படுத்தும் தருணத்தில் ஏற்படும் சோர்வு;
பசுக்களுக்கு சினை ஊசி போடுவதற்காக அதிக தூரம் நடத்தி செல்லுதல் மற்றும் பசுக்களை அடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தால் கால்நடை மருந்தகத்தில் சிறிது நேரம் பசுவிற்கு ஓய்வு கொடுத்த பின்பு சினைப்படுத்துதல் நல்லது. இவற்றை செய்யத் தவறினால் சோர்வு ஏற்பட்டு பசு சினை சினைப்பிடிக்காமலும் இருக்கும். சினை ஊசி போட்ட பின் கிராமங்களில் பசுக்களைக் கீழே படுக்க விடாமலும் தீவனம் போடாமலும் ஒரு நாள் முழுக்கக் கட்டிப் போட்டு வைப்பர். இது தவறான அணுகுமுறையாகும். இவ்வாறு கட்டிப்போடுவதால் பசுக்களில் சோர்வும் அயர்ச்சியும் ஏற்பட்டு சினை பிடிக்காமல் போகலாம். எனவே பசுக்கள் நல்ல முறையில் சினைப்பிடிக்க பசுக்களை சித்திரவதை செய்யக் கூடாது. சினை ஊசி போட்ட பின் பசுக்கள் எப்பொழுதும் போல் தீவனம் சாப்பிடலாம். படுக்கலாம்.

ஈ) சாதகமற்ற தட்பவெப்ப நிலை;
அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் தாக்கும் பொது பசுவின் இனவிருத்தித் திறன் பாதிக்கப்படுவதால் காலை அல்லது மாலை நேரங்;களில் சினை ஊசி பொடுதல்;; நல்லது. வெயில் அதிகம் உள்ள நாட்களில் மாடுகளுக்குச் சினை ஊசி போடும் பொழுது மாடுகளை வெயில் படாத இடத்தில் கட்டி வைக்க வேண்டும். சினை ஊசி போடுவதற்கு முன்பு பசுக்களின் உடம்பில் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வைப்பது உடல் சூட்டைத் தணிக்கும்.

உ) தீவனம் மற்றும் சத்து பற்றாக்குறைவு;
பொதுவாக பசுக்கள் கன்று ஈன்றவுடன், பால் கறக்கும் பொழுதும், சினையாக இருக்கும் பொழுதும் பசுந்தீவனம், கலப்புத் தீவனம் மற்றும் உலர் தீவனத்தை போதுமான அளவில் பசுக்களை வைத்திருப்போர் கொடுப்பதுண்டு. அதே சமயம் பசுக்கள் வெற்று மாடாக இருக்கும் பொழுது அதாவது பால் கறக்காமலும், சினையில் இல்லாத பொழுதும் எந்த விதமான தீவனமும் தராமல் காய்ந்த வைக்கோல் மற்றும் சிறிதளவு மேய்ச்சல் மட்டுமே கொடுக்கப்படும். இவ்வாறு செய்யும் பொழுது பசுக்களுக்கு எந்த விதமான சத்துக்களும் உடலில் கிடைக்காததால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. முக்கியமாக புரதச் சத்து, தாதுஉப்புகளாகிய தாமிரம், பாஸ்பரஸ், கோபால்ட், கால்சியம், இரும்பு, மாங்கனீசு சரியான அளவில் அளிப்பது மிகவும் அவசியம். ஆகையால் மாடுகளுக்கு பசுந்தீவனம் 15- 20 கிலோ ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு என்ற விகிதத்தில் தர வேண்டும். கலப்புத் தீவனமானது வெற்று மாடாக இருந்தால் ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 கிலோவும், பால் கறக்கும் மாடுகளாக இருந்தால் ஒவ்வொரு மூன்று லிட்டர் பாலிற்கும் 1 கிலோவும், சினைமாடாக இருந்தால் ஒரு மாட்டிற்கு 2 கிலோவும் தர வேண்டும். காய்ந்த தீவனமான கடலைக்கொடி, வைக்கோல் போன்றவை ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 கிலோ என்ற அளவில் கொடுக்க வேண்டும். தாது உப்புக் கலவை ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்க 30 கிராம் தீவனத்தில் கலந்து தர வேண்டும்.

ஊ) இனப்பெருக்க உறுப்புக்களை தாக்கும் நோய்கள்;
பல நேரங்களில் கிராமங்களில் சினை ஊசி போடாமல் பொலிகாளைகள் மூலம் சினைப்படுத்தும் பொழுது அந்த காளை நோயுற்றிருந்தால் பசுவின் கர்ப்பப்பையில் நோய் ஏற்பட்டு சீழ் போன்ற திரவம் அறையிலி;ருந்து வடியும். இந்நோய் பசுக்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதால் பொலிகாளைகள் மூலம் சினைப்படுத்தக் கூடாது. பசுக்களில் கர்ப்பப்பை நோய் ஏற்பட்டிருந்தால் கால்நடை மருத்துவரைக் கொண்டு தக்க சிகிச்சை அளித்து பின் பருவத்திற்கு வரும் பசுக்களை சினை ஊசி மூலம் சினைப்படுத்த வேண்டும்.

பசுக்கள் கன்று ஈனும் சமயத்தில் சுகாதாரமில்லாத கொட்டகை, ஈனும் பொழுது ஏற்படும் சிரமத்தால் சுகாதாரமற்ற முறைகள் பின்பற்றப்படுவதாலும், நஞ்சுக்கொடி விழாமல் இருந்து சுகாதாரமற்ற முறையில் நஞ்சுக்கொடியை வெளியே எடுப்பதாலும் கர்ப்பப்பையில் புண் ஏற்படுகிறது. கர்ப்பப்;பை புண் உள்ள பசுக்களில் பால் உற்பத்தி குறைந்து, துர்நாற்றமுடைய சீழ் பொன்ற திரவம் வடியும். தக்க சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் மலட்டுத் தன்மை ஏற்படும். எனவே கர்ப்பப்பை நோய் என்று தெரிந்தவுடன் தாமதிக்காமல் கால்நடை மருத்துவர் உதவியுடன் தகுந்த சிகிச்சை பசுக்களுக்கு அளிக்க வேண்டும்.

எ) கனநீர் பற்றக்குறை;
பசுக்கள் பருவ சுழற்சியில் முறையே 21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவம் வருவதற்கு சில கனநீர்கள் சரியான அளவில் இல்லாமல் சற்றே குறையும் பொழுது பசுக்கள் கருவுறாமல் மலட்டுத்தன்மை உருவாகிறது. உதாரணமாக லூட்டினைசிங் ஹார்மோன் என்ற கனநீ;ரின் அளவு குறையும் பொது வளர்ச்சியடைந்த கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவர முடியாமல் கட்டியாக மாறுகிறது. இதனால் பசுக்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது சினைக்கு வராமலே இருக்கும். சில பசுக்களில் கருவுற்றபின் அக்கருவை கருப்பையில் வைத்து உரிய முறையில் பாதுகாக்க தேவையான புரோஜெஸ்டிரான் என்ற கனநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் பசுக்கள் சினை அடைந்தாலும் கருவை முழுமையாக பாதுகாக்க முடியாமல் கருக்கலைந்து விடும். இக்குறைகளை தவிர்க்க கால்நடை மருத்துவரைக் கொண்டு தகுந்த சிகிச்சை செய்வதன் மூலம் குணப்படுத்தலாம்.

ஏ) வளர்ச்சி குன்றிய கிடேரிகளை சினைப்படுத்துதல்;
வளர்ச்சி குன்றிய கிடேரி கன்றுகளை இனவிருத்தி செய்வதால் கன்று ஈனும் காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மலட்டுத்தன்மை அடைகிறது. ஆகையால் கிடேரி கன்றை இனவிருத்தி செய்யும் பொழுது அது சினைத்தருணத்திற்கு வரும் வயதை கணக்கிட்டு தகுந்த உடல் எடையினை அடைந்து விட்டதா மற்றும் கருப்பை வளர்ச்சி உடல் எடைக்கு தகுந்தாற்போல் உள்ளதா என கால்நடை மருத்துவரை அணுகி சோதித்த பின் சினை ஊசி பொடுதல் நல்லது.

2. நிரந்தர மலட்டுத்தன்மை;
இவ்வகையான மலட்டுத்தன்மை உள்ள பசுக்கள் 5 முதல் 10 சதவிகிதம் மட்டுமே காணப்படும். பசுக்களில் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகள் ஏற்படுவதாலும். இரட்டை கன்;றாக ஆண் கன்றுடன் பிறந்;த பெண் கன்றின் இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்படைந்;து விடுவதால் பெண் கன்று சினையாகாது. இக்குறைபாடுகள் மரபு கோளாறினால் ஏற்படுவதால் சிகிச்சை மூலம் சரிப்படுத்த முடியாது. ஆகையால் இக்குறைபாடுள்ள கிடேரிகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும். வயது முதிர்ந்த பசுக்களை பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

நல்ல முறையில் தீவனம் அளித்து, சினைப்பருவ அறிகுறிகளை நன்கு கண்டறிந்து, தகுந்த சமயத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் செய்து நல்ல பராமரிப்பு முறைகளை மேற்கொண்டும் மூன்று பருவத்திற்குள் சினைப்பிடிக்க வில்லையென்றால் பசுக்களை கால்நடை மருத்துவர் உதவியுடன் சோதித்து தக்க சிகிச்சை முறைகளை விரைவில் கடைப்பிடித்தால் கறவைமாடுகளில் வரும் மலட்டுத் தன்மையை நீக்கி வருடம் ஒரு கன்று பெற்று கறவை மாட்டுப் பண்ணையில் அதிக இலாபம் ஈட்டலாம்.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்