கறவை மாடுகளின் கால்களைத் தாக்கும் அடிக்குளம்பு அழற்சி நோயும், பராமரிப்பு முறைகளும்

சமீப காலங்களில் மாடுகள் அடிக்குளம்பு அழற்சி நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு பால்பண்ணைத் தொழிலில் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகின்றன. இந்நோயானது கன்று ஈனும் பருவத்திலுள்ள மற்றும் கன்று ஈன்ற இளம் மாடுகளையும் அதிக அளவில் பாதிக்கின்றன.

நோய்க்காரணிகள்

சுற்றுப்புறச்சூழ்நிலைகளும், தீவனமளிக்கும் முறைகளும், உடற்பயிற்சி இல்லாமையும் இந்நோய் ஏற்பட முக்கியக் காரணங்களாகும். மாட்டுக் கொட்டகையில் மாடுகள் சாணம் ;மற்றும் சிறுநீர் கலந்த கழிவுகளில் நிற்பதால் அதன் குளம்புகள் பலமிழந்து விடுவதாலு:ம், புதிய கொட்டகைக்கு இடம் ;மாற்றம் செய்தவுடன் மாடுகள் சுற்றுப்புறச் சூழலுக்கு பழக்கமில்லாமல் அதிக நேரம் நிற்பதிலேயே செலவிடுவதால் கால் குளம்புகள் சோர்ந்து விடுவதாலும் இந்நோய் ஏற்படுகிறது. தீவனத்தில் அதிகப் படியான மாற்றம் செய்வதாலும், குறைந்த அளவு நார்த்தீவனம், அதிக அளவு கலப்புத் தீவனம் அளிப்பதாலும் மாடுகளில் அதிக அளவு லாக்டிக் அமிலம் சுரப்பதால் அடிக்குளம்பு அழற்சி நோய் ஏற்படுகிறது. அதிகப் புரதச் சத்துள்ள உளவு வகைகளை அளிப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது. அதிக அளவு புரதச் சத்தினால் உணவுப் பாதையில் ஹிஸ்டமின் என்ற வேதிப்பொருள் உண்டாகி அவை குளம்புகளை பாதித்து இந்நோய் ஏற்படுகிறது. சினைக் கருப்பை அழற்சி நோய், நஞ்சுக்கொடி தங்குதல் மற்றும் மடிவீக்க நோய் போன்ற நோய்களால் பாதிக்கபட்ட மாடுகளிலும் இந்நோய் காணப்படுகிறது.

நோய் தோன்றும் முறை

அதிக அளவு கலப்புத் தீவனம் தரும்பொழுது லாக்டிக் அமிலம் அதிகம் சுரந்து வயிற்றிலிருந்து குளம்புகளுக்கு இரத்த நாளங்கள் வழியாகச் செல்லும். கர்ப்பப்பை அழற்சி நோய் அல்லது நஞ்சுக் கொடி தங்கினால் நுண்ணுயிர்க்கிருமிகள் நச்சுப் பொருளை ஏற்படுத்தி கர்ப்பப்பையிலிருந்து குளம்புகளுக்கு செல்லும். அதிக புரதச்சத்துள்ள உணவை உண்ணும்பொழுதும் கர்ப்பப்பை அழற்சி நோயிலும் ஹிஸ்டமின் உற்பத்தியாகி குளம்புகளுக்குச் செல்லும். இவ்வாறு குளம்புகளுக்குச் செல்லும் லாக்டிக் அமிலம், நுண்ணுயிர்க்கிருமி நச்சு, ஹிஸ்டமின் என்னும் வேதிப்பொருள் ஆகியவை இரத்த நாளங்களை பருக்கச் செய்கின்றன. இதனால் இரத்தக் குழாய்களில் இரத்தக் கசரிவு ஏற்பட்டு பின் அடைப்பு ஏற்பட்டு பாதங்களில் வீக்கத்தை உண்டு பண்ணுகின்றன.

நோயின் அறிகுறிகள்

நோய் தீவீரமாக இருக்கும் பொழுது கால் வலியினால் மாடுகளின் முதுகுப்புறம் வளைந்து காணப்படும். மாடுகள் நடப்பதற்கு சிரமப்படும். முன்னங்களால்களை குறுக்காக வைத்துக் கொள்ளும், மாடுகள் படுத்துக் கொண்டேயிருக்கும். எழுவதற்கும் எழுந்து நிற்பதற்கும் சிரமப்படும். எழும் பொழுது அதிக நேரம் முட்டி போட்ட நிலையிலேயே இருக்கும். நடக்கும் பொழுது வலி அதிகம் இருப்பதால் கால்களை விரைவில் எடுத்து முன்னே வைக்கும். வியர்வையுடன் நடுக்கமும், தசைகளின் உடல் அதிர்வும் காணப்படும. குளம்புகள் சூடாகவும், குளம்பின் மேல் பகுதி சிவந்தும் காணப்படும். குளம்புகளில் இரத்தக் கசிதலும் உள்ளங்கால்களில் ஆறாத புண்ணும் தோன்றும். நாள்பட்ட அடிக்குளம்பு அழற்சி நோயில் அறிகுறிகள் குறைந்த தீவிரத்துடன் காணப்படும். வியர்வை, நடுக்கம். உடல் அதிர்வு இருக்காது. குளம்புகள் நீண்டும், அகன்றும், தட்டையாகவும் வெடிப்புகளுடன், குளம்புகள் சுழன்றும் தோற்றம் மாறிபும் இருக்கும்.

நோய் கண்டறியும் முறைகள்

அறிகுறிகளின் மூலமும், பாதிக்கப்பட்ட குளம்புகளை பரிசோதித்தும் கண்டறியலாம். மாடுகளில் மூளைச்சவ்வு அழற்சி நோயிலும், மூளைக்காய்ச்சலிலும். இரணஜன்னியிலும் முதுகுப்புறம் வளைந்து காணப்படும். ஆனால் குளம்புகளை பரிசோதனை செய்வதன் மூலம் அடிக்குளம்பு அழற்சி நோயை மற்ற நோயிலிருந்து வேறுபடுத்தி அறியலாம்.

சிகிச்சை முறை

 1. கலப்புத்தீவனம் அளிப்பதை குறைக்க வேண்டும்.
 2. ஐஸ்கட்டிகள் கலந்த அல்லது குளிர்ந்த தண்ணீரை கால்களில் ஊற்ற வேண்டும். இதனால் வீக்கமானது குறையும்.
 3. கழிச்சிலை உண்டுபண்ணும் மருந்தை கால்நடை மருத்துவர் உதவியுடன் அளிப்பதன் மூலம் வயிற்றிலுள்ள நச்சுப் பொருட்கள் கழிச்சலின் மூலம் வெளியேற்றப்பட்டு விடும்.
 4. வலிநீக்க மருந்துகளும் அழற்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் கொடுக்கப்பட வேண்டும்.
 5. இந்நோயுடன் கர்ப்பப்பை அழற்சி நோய், மடிவீக்க நோய். நஞ்சுக்கொடி தங்குதல் போன்றவையும் இருந்தால் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி நோய்க்கொல்லி மருந்துகளும் தரப்பட வேண்டும்.
 6. வயிற்றில் அமிலத்தன்னை ஏற்பட்டால் சோடியம் பைகார்பனேட் மருந்தினை வாய் வழியே தரப்பட வேண்டும்.
 7. நாள்பட்ட நோயாக இருந்தால் மாடுகளில் அதிகப் படியாக வளர்ந்த குளம்புகளை வெட்டி விட வேண்டும்.

தடுப்பு முறைகள்

 1. சிறந்த மேலாண்மை முறைகளின் மூலம் அடிக்குளம்பு அழற்சி நோய் வராமல் தடுக்கலாம்.
 2. திடீரென்று கலப்புத் திவனத்தில் மாற்றம் செய்யக்கூடாது.
 3. கன்று போட்ட பின் கலப்புத் தீவனத்தை படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும்.
 4. நர்ர்த்தீவனம் ;அதிகம் தர வேண்டும்.
 5. கன்று ஈனப்போகும் காலங்களில் தேவையான அளவு உடற்பயிற்சி தரப்பட வேண்டும்.
 6. கொட்டகை அமைப்பை சரி ;செய்ய வேண்டும்.
 7. வயிற்றில் அமிலத் தன்மை ஏற்பட்;டால் சோடியம் பைகார்பனேட் கலப்புத் தீவனத்த்pல்
  30 கிராம் அளவு தினமும் கலந்து தர வேண்டும்.
 8. அடர் தீவனம் தருவதற்கு முன் சிறிது பசுந்தீவனம் தந்தால் அமிலம் அதிகம் உற்பத்தியாவதைத் தவிர்க்கலாம்.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்