கம்மி விலையில் காடை முட்டை | குஞ்சு | கறி | பண்ணை

மதுரை யானைமலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது அக்கினி பார்வை ஸ்ரீ மலையான் காடைப்பண்ணை. இந்த பண்ணையை இளம் பட்டதாரியான உயர்திரு. ராஜ்பரத் எனும் இளைஞர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகின்றார்.

2000க்கும் மேற்பட்ட முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காடைகள், வாரத்திற்கு 10,000 காடை குஞ்சுகள் மற்றும் அருகாமையில் உள்ள கடைகளுக்கு இறைச்சிக்காக கொடுத்தும் வருகின்றார். இதுதவிர காடை முட்டையும் விற்பனை செய்கின்றார்.

இந்த பண்ணையில் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிக் கொள்ளலாம். மதுரை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் காடைகளை அனுப்பிவைக்கின்றார்.

காடை மட்டுமின்றி நாட்டுக் கோழிகள் வளர்ப்பு, பூ சாகுபடி, மாங்காய் சாகுபடி என விவசாயமும் செய்து வருகின்றார். விவசாயம் செய்து வந்த நிலையில், இப்பகுதியில் ஏற்பட்ட நிலத்தடி நீர் பற்றாக்குறை காரணமாக காடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் குறைவான நீர் உள்ள பகுதியில் காடைகள் வளர்த்து நல்ல இலாபம் ஈட்டலாம்.

குறிப்பாக பெண்கள் இதனை ஓய்வு நேரத்தில் சிறு இடத்தில் கூட வைத்து பாரமரித்து சம்பாரிக்கலாம் என்கிறார் காடை பண்ணையின் உரிமையாளர் உயர்திரு. ராஜ்பரத். நீங்களும் காடை முட்டை, குஞ்சு, கறி என அவரவர் தேவைக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிக் கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 99658 26282.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்