கால்நடைகள்வீடியோக்கள்

கன்னி நாய் காதலன் | சிப்பிப்பாறை | நாட்டு நாய் வளர்ப்பு முறை | சிவசித்து பகுதி 01

Kanni Dog | Native Dogs | Sivs Siththu | Part 01

 

நாட்டு இன நாய்கள் குறித்த தேடல்கள் எங்களை புதுப்புது அனுபவத்திற்கு அழைத்துச் செல்வதோடு மட்டுமின்றி, பல அறிய தகவல்கைள தெரிந்து வைத்திருக்கும் நபர்களையும் அடையாளம் காட்டுகிறது. அப்படி நாட்டு இன நாய்கள் குறித்து பல தகவல்களை வழங்கினார் வாசுதேவ நல்லூரைச் சேர்ந்த திரு.சிவ சித்து எனும் பட்டதாரி இளைஞர் . முகநூலில் மட்டுமே நீண்ட நாள் அறிமுகமான சிவசித்துவை பார்க்கப்போகும் ஆவல் எனக்குள் இல்லாமல் இல்லை. ஏனெனில் அவரது எழுத்து முகம் மிகவும் அழகானது. பல முன்னணி பத்திரிக்கைகளுக்கு நாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல தகவல்களை தொடர்ந்து எழுதி வருகின்றார். நல்ல எழுத்தாளரை யாருக்குத்தான் பிடிக்காது.

ராஜபாளையம் அருகில் உள்ள வாசுதேவ நல்லூருக்கு அவரைக் காண நாங்கள் வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு தயாராகி 9.30 மணிக்கு அங்கு சென்றோம். குளிர்ச்சி மட்டுமல்ல பனிகளில் நனைந்த மலைகளுக்கு இடைய எங்கள் பைக் பயணம் இன்னும் இனிமையாகவே அமைந்தது. ஸ்ரீவில்லிபுதூரில் சிறுதி இளைப்பாறுதல், சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம்.

வாசுதேவ நல்லூரைச் சேர்ந்தவுடன் திரு.சிவ சித்து அவர்களை தொடர்பு கொண்ட, 10 நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்து எங்களை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் நீண்ட நாட்களாக வளர்த்து வரும் 12 வயதான ராஜபாளையம் நாய்தான் முதன் முதலாக எங்களை வரவேற்றது. எங்களுடன் ஒட்டிக் கொண்டது. அதன் பெயர் பீமா. 12 வயது உடைய நாய் என்று, சிவசித்து கூறியதை நாங்கள் நம்ப முடியவில்லை. இளமை குறையாமல் எங்களை வசப்படுத்திவிட்டான்.

கொஞ்சம் நேரம் அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தோம்.  சிவசித்து அம்மா அவர்கள் எங்களை இன்முகத்துடன் வரவேற்று தேனீர் கொடுத்தார்கள். சிவசித்து அவர்களின் தங்கயைும் அவரது அம்மாவும் வீட்டில் உள்ள நாய் மீது அவ்வளவு பாசம். எங்க அம்மாவும் தங்கச்சியும் நாய நல்லா பாத்துக் கொள்வாங்க என்றார் சிவசித்து.

அடுத்ததாக அவர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட மயிலை குட்டி ஒன்றிணை எங்களிடம் காண்பித்து இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டும். இப்பொழுது நாட்டு நாயில் இந்த நிறம் மிக அரிாதன ஒன்று என்று கூறி அந்த குட்டியுடன் விளையாடிக் கொண்டே விவரித்தார். நாங்கள் அதை காட்சி பதிவு செய்து கொண்டு, அடுத்ததாக அருகில் இருக்கும் அவரது பண்ணைக்கு எங்களை அழைத்துச் சென்றார்.

பண்ணை கேட்டை நெருங்கியதும், 7க்கும் மேற்பட்ட நாய்கள் சிவசித்துவை பார்த்து வாலை ஆட்டி, தாவிகுதித்தன. எங்களை மட்டும் முறைத்தன. பிஸ்கெட் கொண்டு செல்லவில்லை. இந்த முறை கேமராமமே் ராஜ் அவர்கள் நாயுடன் பழக ஆரம்பித்த காரணத்தால் அவருக்குள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியதை என்னால் உணர முடிந்தது.

ஒரு வழியாக நாய்களை சமாளித்து உள்ளே நுழைந்தோம். சிவசித்துவின் அப்பா அவர்கள் வரவேற்க, ஒவ்வொரு நாய் குறித்தும் நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார் சிவசித்து. சிவசித்துவின் ஆர்வத்திற்கு சற்றும் குறையாதவர் அவரது அப்ப அவர்கள். அந்த மரபுதான் சிவசித்து வீரியாமாக உருமாறியிருப்பதை என்னால் உணர முடிந்தது.

நல்ல தெளிவான அறிவு மற்றும் அனுபமுள்ளவர்களிடம் பேட்டி காண்பது என்பது அல்வா சாப்பிடுவதற்கு சமம் ஆகும். ஆதலால் சிவசித்துவிடம் நாய்கள் வளர்ப்பு குறித்து நண்பகலுக்குள் 4 பேட்டிகளை முடித்துவிட்டோம். இத்தனை பேட்டி இவ்வளவு சீக்கிரம் எடுத்த இடம் இதுதான்.

மதிய உணவுக்கு பிறகு அடுத்த வீடியோ என்று எங்கள் பேட்டரிக்கு மின்சார தீணி போட்டுவிட்டு, நாங்களும் பிரியாணி சாப்பிட கிளம்பினோம். சோறுதான முக்கியம். சிவசித்து எங்களை அழைத்துச் சென்று, சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுத்தார். சுவை நன்றாக இருந்தது. அடுத்ததாக திரும்பி வரும் வழியில் இளநீர். கவனிப்புக்கு பஞ்சமில்லை.

மீண்டும், பண்ணைக்கு வந்து பேட்டிக்கு முன்னதாக வீடியோ பதிவுக்கு தேவையான காட்சிகளை படம் பிடித்துக் கொண்டோம். அதன் பிறகு பேட்டியில் அமர்ந்தால் மெமரி கார்டு சதி செய்துவிட்டது. இடம் இல்லை. லேப்டாப்பும் அன்றைக்கு கொண்டு செல்லவில்லை. நான் இன்னும் இரண்டு பேட்டி எடுக்க ஆவலாக இருந்தேன். வேறு வழியில்லாமல் 4.30 மணிக்கு மதுரைக்கு கிளம்ப ஆரம்பித்தோம்.

அடுத்த முறை தேவையானவற்றைக் கொண்டு வந்து கூடுதலாக பேட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் பிரியாே விடை கொடுத்து கிளம்பினோம். பயணச் செலவுக்கு ரூ.500 கொடுத்து அனுப்பினார். அந்த பணத்திற்கு பைக்கில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருக்க, மழை சொட்ட ஆரம்பித்தது. பிறகு என்ன சாரலில் பறந்து மதுரைக்கு வந்து எனது வீட்டை அடைய இரவு 9 மணி.

குளித்துவிட்டு, முதல் வீடியோவை பதிவு செய்ய அமர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு ரெண்ரிங் போட்டுவிட்டு சற்று சந்தேன் உறங்கிவிட்டேன். பி்ன் காலை 6.30 க்குதான் விழிப்பு. அடடா என்று அவசர அவசரமாக வீடியோ பதிவு செய்தேன். 7.30 மணிக்கு அதாவது யூடுப்பில் அன்றைக்கு அரை மணி நேரம் காலதாமதமாக பதிவு ஆனது. அந்த வீடியோதான் நீங்கள் மேலே பார்த்த வீடியோ.

இந்த பேட்டியில் நாய்கள் குறித்து நச்சென்று பல தகவல்களை திரு.சிவசித்து கூறியிருப்பார். தொடர்ச்சியாக இடுத்த வீடியோவிற்கு காத்திருங்கள். மயிலை நாய் குறித்த சிறப்பு பதிவுதான் அடுத்த வீடியோ.

கன்னி நாய் காதலன் இரா.சிவசித்து தொடர்பு எண்:  81223 32271 | 63804 78387

 

நன்றிகள். மீண்டும் சந்தி்ப்போம். இப்படி உங்கள் மு.இரமேஷ்.

________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. ( Whats app )
Hello Madurai Raj – 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

#கன்னி #கன்னிநாய் #கன்னிநாய்வளர்ப்பு #கன்னிநாய்மீட்பு #கன்னிநாய்குட்டி #கன்னிநாய்பயிற்சி #கன்னிநாய்வளர்ச்சி #கன்னிநாய்சிறப்பு #கன்னிநாய்விளையாட்டு #கன்னிநாய் #கன்னிநாய் #கன்னிநாய்இனம் #கன்னிநாய்காவல்திறமை #கன்னிநாய்காவலன் #கன்னிநாய்காவல் #கன்னிநாய்விற்பனை #கன்னிநாய்பண்ணை #கன்னிநாய்பண்ணைவிற்பனை #சிப்பிப்பாறைநாய்பண்ணை #கன்னிசிப்பிப்பாறைநாய் #பரியேறும்பெருமாள் #பருக்கி #பால்கன்னி #சுத்தகன்னி #செவலை #தேன்பருக்கி #சாம்ப #சாம்பை #மொசக்கடி #சாதிநாய் #ஜாதிநாய் #பொடித்தலநாய் #பொடித்தலைநாய் #குறுந்தங்குடிநாய் #முல்லைநாய் #பிள்ளநாய் #பிள்ளைநாய் #சந்தனபிள்ளநாய் #சந்தனபுள்ளநாய் #சந்தனபிள்ளைநாய் #செங்கன்னி #கருங்கன்னி #மயிலை #மயிலைநாய் #மயிலைவளர்ப்பு #மயிலைகுட்டி #சந்தபுள்ளகுட்டி #மயிலைகுட்டி #மயிலைநாய் #சாம்பபுள்ள #மயிலபுள்ள #சந்தனபருக்கி #பால்பருக்கி #செம்பருக்கி #அடர்சாம்பநாய் #சாம்பநாய் #சாம்பநாய்குட்டி #சாம்பநாய்வளர்ப்பு #சாம்பநாய்விற்பனை #செங்கபருக்கி #செங்கன்னி #கருங்கன்னி #பால்கன்னி #புள்ளகன்னி #சாம்பபுள்ள #மயிலபுள்ள #வெளுருனபுள்ள #கீரிபுள்ள #கருங்கபிள்ள #செம்மறை #வெங்கால் #பூவால் #நெஞ்சுவெள்ள #பிடதிமற #பாச்சகழுத்து #வட்டச்செம்மற #பூதச்செம்மறை #மறைநாய் #மரநாய் #மடிக்காது #குத்துகாது #நறுக்குகாது #கன்னிநாய்காது #கன்னிநாய்வால் #இரட்டகுறுக்கு #ஒத்தகுறுக்கு #குறநாடி #இராஜபாளையம் #இராஜபாளையம்குட்டி #இராஜபாளையம்நாய் #இராஜபாளையம்வளர்ப்பு #இராஜபாளையம்சிறப்பு #இராஜபாளையம்பயிற்சி #இராஜபாளையம்நாய் #கன்னிநாயின்கதை #கன்னிநாய்இந்தியநாய் #கன்னிநாய்இந்தியநாய்இனம் #கன்னிநாய்இனதகவல் #கன்னிநாய்உண்மை #கன்னிநாய்குதித்தல் #கன்னிநாய்க்குட்டிகள் #கன்னிநாய்போர்வீரர்கள்வரலாறு #கன்னிநாய்வரலாறு #கன்னிநாய்அற்புதமானதகவல் #கன்னிநாய்கள்இனப்பெருக்கம் #கன்னிநாய்குணம் #கன்னிநாய்ஓட்டம் #கன்னிநாய்ஆட்டம் #கன்னிநாய்திட்டம் #கன்னிநாய்வீடியோ #கன்னிநாய்புகைப்படங்கள் #கன்னிநாய்போட்டோ #கன்னிநாய்நீச்சல் #கன்னிநாய்வேகம் #தமிழ்நாட்டுகன்னிநாய் #கன்னிநாய்தமிழ் #கன்னிநாய்தமிழ்நாடு #தமிழ்நாட்டின்கன்னிநாய் #கன்னிநாய்நெல்லை #கன்னிநாய்திருநெல்வேலி #தூத்துக்குடிகன்னிநாய் #தூத்துக்குடிகன்னிநாய்குட்டி #தூத்துக்குடிகன்னிநாய்விற்பனை #திருநெல்வேலிகன்னிநாய் #கயத்தாறுடிகன்னிநாய் #சிவசித்து #கன்னிநாய்சிவசித்து #நாட்டுநாய்சிவசித்து #வேட்டைநாய்சிவசித்து #சிப்பிப்பாறைநாய்சிவசித்து #மதுரைகன்னிநாய் #செங்கோட்டைகன்னிநாய் #கேரளாகன்னிநாய்கள் #கன்னிநாய்கள் #கன்னிநாய்குட்டிகள் #கன்னிநாய்மரபுகள் #கன்னிநாய்இனவழிகள் #கன்னிநாய்கள்தோற்றம் #கன்னிநாய்பூர்வீகம் #கன்னிநாய்அழிவு #கன்னிநாய்அறிவு

#dogs #dogsofinstagram #dog #dogstagram #puppy #instadog #doglover #dogoftheday #doglovers #pets #doglife #love #puppylove #pet #puppies #cute #dogsofinsta #puppiesofinstagram #instagram #of #doggo #petsofinstagram #ilovemydog #dogslife #animals #cats #petstagram #doglove #adoptdontshop #bhfyp

#dogphotography #dogsofinstaworld #dogsofig #doggy #lovedogs #instadogs #instagood #nature #k #rescuedog #perros #photooftheday #animal #cat #hund #bhfyp #labrador #puppylife #happydog #cutedog #pitbull #photography #goldenretriever #pup #hundeliebe #dogmom #cachorro #happy #feature #chihuahua

#indiandog #dogsofinstagram #dog #dogs #doglife #dogstagram #dogoftheday #doglovers #puppy #labrador #doglover #indiandogs #instadog #puppylove #dogsofinsta #pets #india #dogsofindia #puppiesofinstagram #adoptdontshop #desidog #doggo #goldenretriever

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!