கன்னி நாய் இனமா ? நிறமா ?

தமிழ் விவசாயம் நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வேட்டை நாய்கள் குறித்து நாம் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை பார்த்துக் கொண்டு வருகின்றோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்கப்போவது நாட்டு இன நாய்களில் இன்றைக்கு அனைவராலும் கவரப்படும் கன்னி இன நாய் குறித்து தான்.

கன்னி நாய் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் இதில் முக்கியமாக கன்னி நாய் என்பது இனமா ? நிறமா ? என்ற கேள்விதான். இந்த கேள்விக்கு எத்தனை பேருக்கு உண்மை தெரியும் என்பதை தாண்டி, நான் கூறப்போவது பல தேடல்களில் எனக்கு கிடைத்த தகவல்களில் நான் அறிந்தது மட்டுமே தவிர, இது எல்லோரும் ஏற்றுக் கொள்ளகூடியதல்ல என்பதை உங்கள் முன் வெளிப்படையாக வைக்கின்றேன். சரி, இனி கேள்விக்குள் செல்வோம்.

முதலில் கன்னி நாய் வந்த வரலாறு குறித்து பார்த்தால், இது தமிழ் நாட்டில் பரவலாக காணப்பட்டாலும், முக்கியமாக விருதுநகர் துவங்கி திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் அதிகம் வளர்க்கப்பட்டுள்ளது என்றும், இங்கிருந்துதான் மற்ற பகுதிகளுக்கு சென்றது என்றும் கூறுகின்றனர்.

இதேபோல், நாயக்கர் காலத்தில் படைத் தலைவர்களால் ஆந்திரா, கர்னாடகாவில் இருந்து கொண்டு வந்து இங்குள்ள நாய்களுடன் கலப்பினம் செய்யப்பட்டு உருவானதே கன்னி நாய் என்றும் கூறப்படுகிறது. மேலும், கன்னி நாய் என்பது ஒரு தனி இனமே இல்லை நிறம் மட்டுமே என்று கூறுபவர்களும், இன்னும் சிலர் இதை எல்லாம் தாண்டி, கன்னி நாய் என்பது நம் நாட்டு இனமே இல்லை என்று கூறுபவர்களும் உண்டு.

இதில் எது உண்மை என்பதில் பல்வேறு குழப்பங்கள் புரியாத புதிராக இன்று வரை இருந்தாலும் பெரும்பாலானோர் கன்னி நாய் என்பது தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வேட்டையினத்தைச் சேர்ந்த நாய் என்றே கூறுகின்றனர். சரி, இது ஒரு புறம் இருக்கட்டும். வேட்டை நாயினத்தில் இருந்து எப்படி கன்னி நாய் வந்தது என்ற கேள்விக்கு முன் கன்னி என்பதில் ன எனும் எழுத்து இரண்டு சுழியா அல்லது மூன்று சுழியா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

கண்ணி என்பது மூன்று சுழி என்றால் அதற்கு பூமாலை, பூங்கொத்து, சூடும் பூ மாலை, தலைமாலை, போர்ப்பூ, பூட்டாங்கயிறு, ஓர் இசைப்பாட்டு என இன்னும் பல பொருள் உள்ளது. அதேபோல் கன்னி என்பது இரண்டு சுழி என்றால், குமாரி, மனம் ஆகாத பெண், இளமை, தூய்மை, அழிவில்லாதவள், புதுமை, தெய்வப் பெண், கற்றாழைச்செடி, கரந்தை என இன்னும் பல பொருள் இருக்கிறது.

தமிழ் மொழி வாயிலாக இந்த இரு எழுத்துக்களை எடுத்துக் கொண்டால், மூன்று சுழி கண்ணி என்றால் பெரும்பாலும் பூவைக் குறிக்கும் சொல்லாக உள்ளதால், அதை எடுத்துக் கொள்ள இயலாமல் போகிறது. அதேபோல் கன்னி என்ற வார்த்தையை இரண்டு சுழியாக எடுத்துக் கொண்டால் பெண்ணைப் பற்றியும், இளமையைப் பற்றியும் குறிக்கிறது. அதனால் இதற்கு கன்னி என்ற பெயர் வந்திருக்கலாமா ? என்றால் அதிலும் சில குழப்பங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் வழக்கத்தில் கன்னி என்று இரட்டை சுழியே பயன்படுத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியை வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றிகள் !!

#கன்னி #கன்னிநிறமா #கன்னிஇனமா

________________________________________________________

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்