கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த கீதாரி வம்சம் | மலை மாடு | கீதாரி வாழ்க்கை பயணம் 07

கீதாரிகள் வாழ்க்கை பயணம் தேடல் எங்களை ஆச்சர்ய கடலில் ஆழ்த்திவிட்டது. நாம் யாரை எல்லாம் மிகச் சாதாரணமானவர்கள் என்று எண்ணுகின்றோமோ அவர்களின் மூதாதையர்களைப் பற்றி அறிந்தால் ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு தலைமுறையினர்தான் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விராலிமலை எனும் கிராமத்திற்க்கு அருகில் உள்ள காக்ககுடியில் வசித்து வருபவர்கள்.

இவர்கள் சிலப்பதிகாரத்தின் நாயகன் கோவலன் மற்றும் நாயகி கண்ணகி ஆகியோர் மதுரைக்கு கால் சிலம்பு விற்க வரும்போது கவுந்தி அடிகள், இடையர் குலமான ஆயர் தொழில் செய்து வரும் மாதரி எனும் முதிய பெண்ணிடம் கண்ணகியை ஒப்படைத்தார். அந்த மாதரி பெண்ணும் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்து காத்துவந்தாள்.

அக்குடும்பத்தின் தலைமுறையினர்தான் இவர்கள். நாற்பது தலைமுறைகைளைத் தாண்டி இன்னும் தங்களது ஆயர் (கீதாரி – மாடுமேய்க்கும்) தொழிலை பாரம்பரிய முறையில் இன்றளவும் செய்து வருகின்றனர். அதில் 20 குடும்பத்தினர் ஒன்றிணைந்து மதுரை அழகர்கோவிலுக்கு அருகில் உள்ள வெள்ளிமலைப்பட்டி எனும் கிராமத்தில் இவர்களது பூர்வீக இடமான 100 ஏக்கர் நிலப்பில் மாடுகளை மேய்த்தும், அருகில் உள்ள மலைமீது மேய்த்தும் வருகின்றனர்.

அவர்களில் ஒருவரான பட்டப்படிப்பு முடித்து வழக்குரைங்கராகப் பணியாற்றிய திரு.அழகர்சாமி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எங்கள் தேடலில் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாகும். இந்த வாய்ப்பினை எங்களுக்கு அளித்த மைக்குடி கீதாரி முருகன் அய்யா அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சிலப்பதிகாரத்தின் சிறந்த குணமாகிய மாதிரி வம்சத்தினர் இன்றைக்கும் தங்களது பாரம்பரிய முறைப்படி நாட்டு மாடு மேய்த்து வருவது குறித்து நேர்காணலுக்கு சென்றிருந்தோம். அழகர்கோவில் அருகில் உள்ள வெள்ளிமலைப்பட்டியை அடைந்தது பெரும் தேடலாகும். கிட்டதட்ட ஒரு மணி நேரமாக வழி தெரியாமல் தேடி அலைந்தோம். அதற்கு காரணம் அப்பகுதியில் புதிதாகப் போடப்படும் சாலையே.

நம்மை பெருமாள் எனும் கீதாரி காத்திருந்து அழைத்துச் சென்றார். மலை அடிவாரத்திற்கு கீழ் பகுதியில் 20 குடும்பத்தார்களின் 300க்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டிருந்தன. அவர், மாடுகளை காண்பித்தவுடன், திரு.அழகர்சாமியிடம் எங்களை அழைத்துச் சென்றார். எங்களை இன்முகத்துடன் வரவேற்ற அழகர்சாமி தங்களது பரம்பரைக் குறித்து கூறியவுடன் நாம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துபோனோம்.

மாதரி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அப்போதுதான் எங்களுக்கு தெரிந்தது. தங்களது மூதாதையர்கள் குறித்தும், பாரம்பரியமாக ஆயர் குல தொழில் குறித்தும் விரிவாக நம்மிடம் எடுத்துக் கூறினார். முக்கியமாக பகவான் கண்ணன் பகவத் கீதையில் கூறியபடி மாடுகளை வளர்த்து வருகின்றோம் என்றும், அது எப்படி என்பது குறித்தும் பேசினார்.

அவர் கூறுகையில், மாடு மேய்ப்பவர்கள் ஒரு தவ வாழ்க்கை வாழ்வதுபோல், அவர்கள் மண்பானையில் சமைக்கும் உணவை அவர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்றும், அப்படி சாப்பிடும் சோற்றினை வலது கையால் இடது கையில் வைத்து, இடது கையில் இருந்தே சாப்பிடுவார்கள் என்று கூறிய செய்தி புதிதாக இருந்தது. அதற்கான காரணம் குறித்து வேறு ஒரு வீடியோவில் நிச்சயம் பதிவு செய்கின்றோம்.

அதேபோல் அவர்கள் வளர்க்கும் மாடுகளை அடிமாடுகளுக்கு அனுப்புவதில்லை என்றும், அவற்றை புதைத்துவிடுவோம் என்றும் கூறினார். அந்த பதிவுகளை இங்கு நாங்கள் வீடியோவாக கொடுத்துள்ளோம். முக்கியமாக இதில் சோகமான விசயம் என்னவென்றால் இவரது முந்தைய தலைமுறையினர் 1000 மாடுகள் வைத்திருந்தனர். இன்றைக்கு அது சுருங்கி 300 மாடுகள் மட்டுமே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் பற்றாகுறை என்பதும் கடந்த ஆண்டில் மட்டும், போதிய தண்ணீர் இல்லாமல் 200க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் இறந்துள்ளது என்பதும்தான்.

வெள்ளிமலைப்பட்டி மலையில் இரண்டு அருவிகள் உள்ளது. அதிலிருந்து தண்ணீர் இல்லாத காலங்களில் குட்டைகளில் அந்த தண்ணீரை நிரப்பினால் மாடுகளை நாங்கள் காப்பாற்ற முடியும் என்று அவர் கூறும்போது, மாதரி பெண்மணியாள் எங்கள் கண்முன்னே வந்தே நின்றாள்.

கோவலன் கள்வன் என்று பாண்டிய மன்னன் தீர்ப்பு வழங்கி கொலை செய்யப்பட்டதை அறிந்த மாதரி, தன்னிடம் அடைக்கலம் வந்தவர்களை காக்க தவறி விட்டுவிட்டோமே என்று அழுது தீயில் விழுந்து உயிர் துறந்தாள் என்கிறது சிலப்பதிகாரம். அப்படி வாக்கு தவறாதவர்களின் தலைமுறையினர் அவர்களது வழி வழியான தொழில் செய்து வரும் நாட்டுமாடுகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து இறப்பது எத்தனை கொடுமையாகும்.

அய்யாவிற்கும் அவர்கள் தலைமுறையாக வளர்த்து வரும் மாடுகளுக்கும் அரசு நிச்சயமாக வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும். அதேபோல் மலைகளில் மாடுகள் மேய அனுமதி வழங்க வேண்டும்.

சிலப்பதிகாரம் கூறுவது

” தாதெரு மன்றத்து மாதரி எழுந்து
கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான்
அடைக்கலம் இழந்தேன் இடைக்குலமாக்காள்
குடையும் கோலும் பிழைத்தவோ என
இடையிருள் யாமத்து எரியகம் புக்கதும்! ”

 

அழகர்சாமி அய்யா அலைபேசி எண் | 95859 54160 | 99439 23672

________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. ( Whats app )
Hello Madurai Raj – 6382333644 ( Camera Man )
_________________________________________________________

#கீதாரி #கிடைமாடு #மலைமாடு #ஜல்லிக்கட்டு #நாட்டுமாடு #கீதாரி #கிடைமாடுவாழ்க்கை #கிடைமாடுபயணம் #மாடு #கிடைமாடு #புலிக்குளம்மாடு #காங்கேயம்காளை #நாட்டுஇனம் #நாட்டுஇனமாடுகள் #கிடைமாடு #நாட்டுமாடு #ஜல்லிக்கட்டு #முல்லைநிலம் #ஆயர் #இடையர் #கண்ணகி #சிலப்பதிகாரம் #மாதரி #இடையர்மாதரி #மாதரிஇலக்கியம் #மாதரிவாக்கு #தீயில்புகுந்தமாதரி #வாக்குதவறாதமாதரி #கண்ணகிக்குஅடைக்கலம்கொடுத்தமாதிரி #மாதரிமகள்ஐயை #புலிக்குளம்காளை #கீதாரி #ஏறுதழுவுதல் #erudhu_vidum_vizhaa #எருது_விடும்_விழா #jallikattu_kaalai_challenge

#cow #cows #farm #nature #cowsofinstagram #cattle #animals #farmlife #milk #calf #love #bull #photography #farming #animal #k #agro #dairy #farmer #kuh #cowstagram #naturephotography #agriculture #cowboy #vaca #moo #photooftheday #horse #art #bhfyp #indiabulls #hcl #tcs #india #embassyresidency #elcot #microsoft #accenture #techmahindra #malles #ibm #perumbakkam #cts #wipro #infosys #globalhospital #ishavilla #salon #unisex #essensuals #rahejadevelopers

#bull #dog #cow #bulldog #cattle #love #bully #bullterrier #dogs #dogsofinstagram #farm #pitbull #puppy #pet #bulldogfrances #bulls #follow #instagram #a #calf #toro #frenchbulldog #toros #instadog #cowboy #frenchie #animals #americanbully #art #bhfyp

#cattle #farm #cow #cows #farmlife #farming #livestock #agriculture #cowsofinstagram #beef #bull #ranchlife #agro #beefcattle #ranch #cowboy #calf #animals #angus #milk #cats #ganado #cattleranch #cattlefarm #nature #pecuaria #zootecnia #ganaderia #ranching #bhfyp

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்