ஓமலூர் விவசாயி 3 அடி உயரத்துக்கு கம்பு பயிரில் கதிர் வளர்த்து சாதனை

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சி வாலியான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தனீஸ்வரன் எனும் விவசாயி. இவர் தகது தோட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு 110 நாளில் அறுவடைக்கு வரும் புதிய ரக கம்பான துருக்கி ரகத்தை பயிரிட்டிருந்தார்.

45 முதல் 50 நாட்களில் கம்பு கதிர் வெளிவர தொடங்கியது. இதில் கம்பு கதிர் நீளம் 3 அடி முதல் 5 அடியாகவும், தட்டு 6 முதல் 7 அடி உயரமும் இருந்தது. இந்த புதிய ரக கம்பு கதிர்களை அக்கம்பக்கம் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

இதுகுறித்து விவசாயி தனீஸ்வரன் கூறுகையில், இந்த புதிய ரக கம்பை பயிரிட்டால் அதிக விளைச்சல் கிடைக்கும். சாதாரண கம்பு ரக கம்புகளில் 3/4 அடி உயரத்துக்கு கதிர் இருக்கும். ஆனால் இதில் சுமார் 3 முதல் 5 அடி யரம் வரை கதிர் உள்ளது. 3 மடங்கு லாபம் கிடைக்கும். தற்போது 200 கிராம் விதை கம்பில் இருந்து சுமார் 300 கிலோ கம்பு கிடைத்துள்ளது என்றார்.

விதை வேண்டுவோர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 7810988162.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
3
+1
2
+1
0
+1
0
+1
1
+1
1
பகிருங்கள்